• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அறிமுகமும் எங்கள் எதிர்பார்ப்பும்

Status
Not open for further replies.

ரோசி கஜன்

Administrator
Staff member
அனைவருக்கும் இனிய வணக்கம்!

இன்றைய காலகட்டத்தில் நாம், உறவுகளில் ஆரம்பித்து, தொழில், தொழில்நுட்பம், சமூக அடையாளம், மன ஆரோக்கியம், அரசியல் என, வேகமாக மாறிவரும் உலகத்தை, அது முன்வைக்கும் பற்பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியவர்களாகிறோம். அந்த வகையில் மேற்கூறிய ஒவ்வொரு பிரிவிலும் ஆழமான புரிந்துணர்வை, பரவலான அறிவை, சிந்தனையை வளர்த்துக்கொள்ள இப்பகுதி பெரிதும் உதவுமென்ற நம்பிக்கையில் தொடங்கியுள்ளோம்.

இங்கே, நீங்கள்:

* ஒவ்வொரு மாதமும் கொடுக்கப்படும் தலைப்புகள் தொடர்பில் உங்கள் பார்வையிலான கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளலாம். ஒரு விடயம் பற்றிய எம் பார்வையோ, கருத்துகளோ மாறுபட்டவையாக இருக்கலாம். இங்கே கவனிக்கப்பட வேண்டியது, ஒருவர் கருத்தை மற்றவர் மதித்து, காயப்படுத்தாத வகையில் அவை பரிமாறப்பட வேண்டும் என்பதே. சிறப்பான விவாதத்திற்கு அது மிகவுமே முக்கியமானது. பின்பற்றுவோம்.

* அவற்றை முன்வைக்கும் போது அவற்றின் மீது முழு நம்பிக்கை வைத்து எதிர்த்தரப்பு வாதங்களைச் சவாலாக எதிர்கொள்ளுங்கள். தகாத வார்த்தைப் பிரயோகங்கள், சாடல்கள் வேண்டாமே!

* ஒவ்வொரு விடயம் பற்றியும் புதிய கோணங்களில் ஆராயுங்கள்.அறியாதவற்றை அறிந்துகொள்ளுங்கள். அவை நேர்மறையாக எம் வாழ்விற்கு உதவுபவையாக இருக்கட்டும்.

* வெவ்வேறு கண்ணோட்டங்களில் இருந்து கற்றுக்கொள்ளுங்கள். தனிப்பட்ட ரீதியில் எடுத்துக் கொள்ளாதீர்கள்.

* உங்கள் தொடர்பு மற்றும் விமர்சன சிந்தனைத் திறன்களை வளர்த்துக் கொள்ளுங்கள், எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

* இங்கு நடக்கும் வாதங்கள் , பிரதிவாதங்கள் ஒன்று ஒன்றும் அர்த்தமுள்ளவையாக மாற்றுவோம்.
 
Status
Not open for further replies.
Top Bottom