• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Debate Hub - Nov & Dec

ரோசி கஜன்

Administrator
Staff member
ஹாய் ஹாய் ஹாய் அன்பான நட்புறவுகளே!

இந்தப்பகுதி எங்கள் நிதனிபிரபுவின் ஆசையில் உருவானது.:love:

ஒவ்வொரு மாதமும் ஆரோக்கியமான விவாதற்கு, அதேநேரம் யோசிக்க வைக்கும் படியான கருத்துப் பரிமாற்றங்களுக்கு ஏற்ற வகையில் தலைப்பைத் தேர்ந்தெடுக்கலாம் என்று நினைத்திருக்கிறோம்.

இந்தப் பகுதியின் கலகலப்புக்கு முற்று முழுதாக நீங்களே சொந்தக்காரர்கள். உங்கள் அனைவரது ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறோம்.

இத்தலைப்பு பற்றிய இரு தரப்பு வாதங்களையும் இதே பகுதியில் நீங்கள் பதிவிடலாம். ஒருவர் கருத்தின் மீது மற்றவர் வாதிக்கலாம். கருத்தாடல் எந்தச் சந்தர்ப்பத்திலும் தனிப்பட்டு இல்லாது ஆரோக்கியமான விவாதமாக இருத்தல் முக்கியமானது என்று நான் உங்களுக்குச் சொல்லவே தேவையில்லை. நிஜ மனிதர்களை உதாரணமாகக் காட்டுவதோ, அவர்கள் வாழ்க்கைச் சம்பவங்களைக் குறிப்பதையோ தவிர்த்தக் கொள்ளுங்கள்.

இத்தலைப்புத் தொடர்பில் எதிர்வரும் 18 ம் திகதிவரை நீங்கள் விவாதிக்கலாம். இதிலிருந்து மூன்று சிறந்த விவாதங்கள் தெரிவு செய்யப்பட்டு பரிசில்கள் வழங்கப்படும் .



தலைப்பு

'இன்றைய இளம் பெண்களின் பார்வையில்: திருமணமும் குடும்ப வாழ்க்கையும் மனநிறைவு தரும், தனித்துவத்தைக் காக்கும் சுகமான உறவாகக் கருதப்படுகிறதா? அல்லது அவர்களின் தனித்துவத்தைக் கட்டுப்படுத்தும் அழுத்தம் தரும் சுமையான உறவாகப் பார்க்கப்படுகிறதா?'
 
தனித்துவத்தை காக்கும் சுகமான உறவாக இருக்கும் என்பது எனது கருத்தாகும். அதுவும் இங்கு புலம்பெயர் நாடுகளில் என்பதை குறிப்பிட விரும்புகின்றேன்.
ஏனெனில் இங்கு பெரும்பாலும் சட்டத்துக்கு மதிப்பு கொடுப்பவர்களாக எமது பிள்ளைகள் வளர்ந்து வருபவர்கள் . ஓரளவுக்கு நன்றாக படித்து வேலை செய்ய தொடங்கி, பெற்றோரில் தங்கியிருக்காமல் தாங்களாகவே தமது தேவைகளை நிறைவேற்றும் திறமையுடனும் யிருப்பதனாலும் தமது வாழ்க்கைத் துணையுடனும் புரிந்து கொண்டு நடப்பார்கள் என்பது எனது தாழ்மையான கருத்து.
 

Kalai Karthi

Active member
இன்றைய தலைமுறைக்கு சுகமானதாக தான் அமைகிறது. பேசி புரிந்து நடந்து கொள்கிறார்கள். வாழ்க்கைதுணை முதலில் கலந்து நமக்கு ஏற்றவர்களா என்று கொஞ்சம் தெரிந்து தான் ஏற்கிறார்கள்.
 
என்னை பொறுத்த வரைக்கும் இன்றைய கால பெண்கள்ல முக்கால் சதவீதம் பேர் அதை அவங்களோட தனித்துவத்தை குறைக்கிற சுமையாத்தான் நினைக்குறாங்க. இன்றைய கால கட்டத்தில பெண்கள் ஆண்களுக்கு நிகராக இன்னும் சொல்லப்போனா ஆண்களுக்கு மேல முன்னேறி இருக்காங்க படிப்பு, வேலை, தொழில், விளையாட்டு,அரசியல் இப்படி எல்லா துறைகளிலேயும். அதனால அவங்க பொருளாதார ரீதியா சுதந்திரமா இருக்காங்க. அது அவங்களுக்கு மனரீதியா பயங்கர எழுச்சியை குடுத்திருக்கு.அவங்களோட தன்னம்பிக்கையை வளர்த்து விடுற இந்த சுதந்திரம் அவங்களுக்கு ஈகோவையும் வளர்த்து விட்ருக்கு. நான், என்னோடது, எனக்கு அப்படிங்குற வட்டத்தில பெரும்பான்மை பெண்கள் கணவன், குழந்தைகள் யாரையும் கொண்டு வர்றதுக்கு விருப்படுறதில்ல. குடும்ப வாழ்க்கையில நுழைஞ்சாலும் பொருளாதார ரீதியா யாரையும் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயம் இல்லாததால ஈஸியா அதை விட்டு வெளியேவும் வந்திடுறாங்க. என்னோட உரிமை அதை யாரும் பறிக்கக்கூடாதுன்னு எல்லாவித கலாச்சார சீரழிவுக்கும் உரிமை கொண்டாடுறாங்க(இது இரு பாலருக்கும்) என் இஷ்டத்துக்கு என்னோட வாழ்க்கையை வாழுறேன். அதை கேக்க யாருக்கும் உரிமை கெடையாதுன்னு தான் பெரும்பான்மையான பெண்கள் நினைக்கிறாங்க. கல்யாணம் பண்ணினா, குழந்தை பெத்துக்கிட்டா தன்னோட கேரியர்ல ஜெயிக்க முடியாதுன்னு நினைக்குற பெண்கள்தான் அதிகம். அதுக்கேத்த மாதிரி வாழுறதுக்கு எதுக்கு கல்யாணம்னு ஒருவித மனநிலையும் வந்திடுச்சு. பிடிக்கிறதுவரை சேர்ந்திருப்போம் பிடிக்கலைன்னா பிரிஞ்சிடுவோம் என் சுதந்திரத்தில நீ தலையிடக்கூடாது உன் சுதந்திரத்தில நான் தலையிட மாட்டேன். இதான் இப்போ பெரும்பான்மையானவங்களோட மனநிலை. கல்யாணங்குற பந்தத்தில நுழைஞ்சிட்டா கண்ணுக்கு தெரியாத ஏதோ கயிறால பிணைக்கப்பட்டதா நிறைய பேர் நினைக்குறாங்க. கணவன், குழந்தை இதெல்லாம் அவங்க சாதிக்க நினைக்குறதை தடுக்கிற தடைக்கல்லாத்தான் பெரும்பான்மையோர் பாக்குறாங்க.

எல்லாத்துறை வளர்ச்சியிலேயும் நல்லது கெட்டது ரெண்டும் இருக்கும். விஞ்ஞான வளர்ச்சி எந்தளவுக்கு மனுஷனுக்கு நல்லது செய்யுதோ அந்தளவுக்கு அதில ஆபத்தும் இருக்கு. அதே மாதிரிதான் கல்வி வளர்ச்சியும். பெண்கல்வி பெண்களுக்கு சுயமரியாதையையும், தன்னம்பிக்கையையும் எந்தளவுக்கு வளர்த்து விட்டிச்சோ அந்தளவுக்கு ஈகோவையும் வளர்த்து விட்டிருக்கு. நான் படிச்சிருக்கேன் எனக்கு எல்லாம் தெரியும். உன்னளவு நானும் சம்பளம் வாங்குறேன் உன்னை அனுசரிச்சு போக வேண்டிய அவசியமில்ல. இதான் பெரும்பான்மை பெண்களோட மனநிலை. கணவன், மனைவி ரெண்டு பேருமே அனுசரிச்சு போனாத்தான் குடும்ப வாழ்க்கை நகரும். அதுக்குள்ள பொறுமை இப்போ நிறைய பேருக்கு இல்ல. இப்போ இருக்கிற பெண்களுக்கு அனுசரிச்சு போறதுன்னு சொன்னாலே தாழ்ந்து போறதுன்னு அர்த்தமாகிடுச்சு. அதனால அவங்களோட தனித்துவத்தை இழக்கிறதா நினைச்சுக்குறாங்க. அதனால குடும்ப வாழ்க்கையை அழுத்தமாத்தான் நினைக்குறாங்க. குழந்தை அவசியமில்ல. உடல்தேவைக்கு கல்யாணம் அவசியமில்லை இதான் பெரும்பான்மையானவங்களோட எண்ணம். இதை நான் எல்லா பெண்களுக்கும் சொல்லல. முக்கால் சதவீதம் பெண்களுக்குத்தான் சொல்றேன். இது என்னோட கருத்து மட்டுமே😊😊😊😊
 

Ananthi.C

Well-known member
எந்த இடத்திலும் எந்த சூழ்நிலையிலும் தன்னோட தனித்தன்மை அடையாளம் இரண்டையும் விட்டுக்கொடுத்திட கூடாதுங்குற பிடிவாதம் அதிகமா இருக்குன்னு தான் எனக்கு தோணுது....
இதற்கு காரணம் தன் முந்தைய தலைமுறை பெண்களின் வாழ்க்கையில் அவர்களின் உணர்வுகள் மதிக்கப்படாமல் போனதும்.... அவர்கள் விட்டுக்கொடுத்து சென்றால் மட்டுமே குடும்ப அமைப்பு குலையாமல் இருக்கும் ....அதுவே பெண்ணின் கடமை என்று சமுதாயம் அவர்களின் மேல் குத்திய முத்திரையும் தான்....
இன்று கல்வியறிவு வளர்ந்ததால் அல்ல உலகம் சுருங்கியதால்....
அதாவது அன்று பெண்கள் படித்திருந்தாலும் நல்ல பதவியில் இருந்தாலும் அவர்கள் வாழ்ந்த சமுதாயத்தின் பெரும்பான்மையான கருத்தையே ஏற்று பிடிக்கவில்லை என்றாலும் அதன்படி வாழ்ந்து முடித்தார்கள்....
ஆனால் இன்று உலகம் ஒவ்வொருவரின் கையில் அலைபேசி வழியில் உள்ளது... அதனால் வெவ்வேறு விதமான கலாச்சாரமும்... அங்கு பெண்களுக்கு கிடைக்கும் சுதந்திரம் போக்கும் .... இவர்களின் புத்தியில் பதிந்து நாமும் நமக்கான அடையாளத்துடன் வாழ்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்று மட்டும் சிந்திக்கின்றது....திருமண உறவில் இருவருக்கும் எல்லாவித உரிமையும் கடமையும் பொறுப்புகளும்... ஏன் விட்டுக்கொடுத்தல் கூட சம அளவில் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்...
பொருளாதார சுதந்திரம் இருப்பதால் எதையும் சகித்துக் கொண்டு வாழ வேண்டிய அவசியம் இல்லை என்பது அவர்களின் கொள்கையாக கூட இருக்கிறது...
 

subhasai

New member
இன்றைய கால பெண்களில் பலரும் அதை தளையாகவும் தான் சுதத்திரம் குறைவதாகவும்தான் நினைக்கிறார்கள்.
 
ஹாய் ஹாய் ஹாய் அன்பான நட்புறவுகளே!

இந்தப்பகுதி எங்கள் நிதனிபிரபுவின் ஆசையில் உருவானது.:love:

ஒவ்வொரு மாதமும் ஆரோக்கியமான விவாதற்கு, அதேநேரம் யோசிக்க வைக்கும் படியான கருத்துப் பரிமாற்றங்களுக்கு ஏற்ற வகையில் தலைப்பைத் தேர்ந்தெடுக்கலாம் என்று நினைத்திருக்கிறோம்.

இந்தப் பகுதியின் கலகலப்புக்கு முற்று முழுதாக நீங்களே சொந்தக்காரர்கள். உங்கள் அனைவரது ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறோம்.

இத்தலைப்பு பற்றிய இரு தரப்பு வாதங்களையும் இதே பகுதியில் நீங்கள் பதிவிடலாம். ஒருவர் கருத்தின் மீது மற்றவர் வாதிக்கலாம். கருத்தாடல் எந்தச் சந்தர்ப்பத்திலும் தனிப்பட்டு இல்லாது ஆரோக்கியமான விவாதமாக இருத்தல் முக்கியமானது என்று நான் உங்களுக்குச் சொல்லவே தேவையில்லை. நிஜ மனிதர்களை உதாரணமாகக் காட்டுவதோ, அவர்கள் வாழ்க்கைச் சம்பவங்களைக் குறிப்பதையோ தவிர்த்தக் கொள்ளுங்கள்.

இத்தலைப்புத் தொடர்பில் எதிர்வரும் 18 ம் திகதிவரை நீங்கள் விவாதிக்கலாம். இதிலிருந்து மூன்று சிறந்த விவாதங்கள் தெரிவு செய்யப்பட்டு பரிசில்கள் வழங்கப்படும் .



தலைப்பு

'இன்றைய இளம் பெண்களின் பார்வையில்: திருமணமும் குடும்ப வாழ்க்கையும் மனநிறைவு தரும், தனித்துவத்தைக் காக்கும் சுகமான உறவாகக் கருதப்படுகிறதா? அல்லது அவர்களின் தனித்துவத்தைக் கட்டுப்படுத்தும் அழுத்தம் தரும் சுமையான உறவாகப் பார்க்கப்படுகிறதா?'
 

Mariam.A

New member
காலம் என்பதை தாண்டி, திருமணம் என்பது பெண்கள் வாழ்வில் மாற்றம் கொண்டு வருகிறது.அதை அப்படியே ஏற்றுக் கொண்டு வாழ பழ(க்)கி விடுகிறார்கள். பெண்கள்(அன்றைய,இன்றைய).அவர்களுடைய வாழ்க்கைத் துணையை பொருத்து அது சுகமாகவோ,அழுத்தமாகவோ இருக்கும் .துணை சரியாக அமைந்தால் சுகமாக பயணம்.இல்லையேல் சுமையான வாழ்வுதான் இக்காலப் பெண்களுக்கும்.ஏனெனில் மனித உணர்வு எக்காலத்துக்கும் ஒன்றுதான்.இது தான் என்னுடைய கருத்து.
 
Top Bottom