வினோ பேச்சு

தெளிவா, நடுநிலையா இருந்தது சூப்பர்.. இரண்டு பக்கமும் தவறு இருக்கிறது.. இருவருமே எளிதில் உணர்ச்சிவசப்படுகிறார்கள் பின்பு அதை நினைத்து வருத்தப்படுகிறார்கள்.. சகாயன் ஆரபியை தன்னை நேசிக்க வைத்துவிட்டு அவளை அவமரியாதையாக நடத்துவது எப்படி பிழையோ அதுபோல அவனும் முயல்கிறான் என்று தெரிந்தும் அவனை தள்ளியே ஆரபி வைப்பதும் தவறு..
ஒரு உறவு மகிழ்ச்சியாக நீண்ட காலம் நிலைக்க இருவரும் மெனக்கெட வேண்டும். சகாயன் முயன்ற அளவுக்கு ஆரபி அதற்கு முயன்றது போலவே தோன்றவில்லை. இங்கே கிரி ஒரு பெரிய பிரச்சனை தான் ஆனால் அவன் மட்டுமே பிரச்சனை இல்லை. கிரி என்ன கூறினாலும் சகாயன் ஆரபியின் பக்கத்தையும் பொறுமையாக கேட்டிருக்க வேண்டும். அவளும் என்ன பிரச்சனை வந்தாலும் பொறுமையாக சகாயனிடம் பேசி, தீர்க்க முயல வேண்டும், எல்லாவற்றிற்கும் சகாயனே முன்னே வந்து சமாதானம், விளக்கம், மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது, இல்லையென்றால் யாரும் வேண்டாம், எதுவும் வேண்டாம் என்று வெட்டிவிட்டு ஓடி ஒளிவது சிறுபிள்ளைத்தனமாகவும், கோழைத்தனமாகவும் தோன்றுகிறது. மனம் ரணமாகிவிட்டது என்று எதுவும் முயலாமலே இருக்கலாமா? கிரியை பிரிந்தாலும் ஆரபி மட்டும் சகாயனுக்கு முக்கியம் என்று இருக்க இயலுமா?
ஏம்மா ஆரபி இன்னும் என்னமா எதிர்பாக்கிற?! அதான் கிரியே போய் சகாயன் வீட்டில் பேசிட்டான், சகாயனும் இனி இப்படி நடக்கமாட்டேனு சொல்றான், எது நடந்தாலும் வினோ உனக்கு துணையா இருப்பேனும் சொல்லிட்டா.. இன்னும் மனமிரங்காம எங்களையும் ஏம்மா சோதிக்கிற..
சகாயன் நம்பி வானு கூப்பிட்டாலும் முடியாதுங்கற.. சரி உனக்கு நம்பிக்கையும் இல்ல, சேரணும்னு எண்ணமும் இல்ல, உன்னை இதுக்கு மேல நெருக்க வேண்டாம்னு உன் பிரியப்படி பிரிஞ்சிடலாம்னு சொன்னாலும் தப்புன்னா எப்படிம்மா??!!