You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

தனிமை துயர் தீராதோ

நிதனிபிரபு

Administrator
Staff member
Subasini Sugumaran




தனிமை துயர் தீராதோ...
எழுத்தாளர் நிதனி பிரபு
இவங்க கதை இப்ப தான் படிக்கிறேன் முதல் முறையாக....
எப்படி இவங்கள தவற விட்டேன் என்ற வேதனை மனதில் உருவாகி விட்டது.. அவ்வளவு அழகான தமிழ்...
இப்போ கதை பற்றி கொஞ்சம் சொல்கிறேன்...
பிறந்த சின்ன சிறு வயதில் தாயால் ஒதுக்கப்படும் நிலையில் இருந்து அவளின் துயர் பயணிக்கிறது...
என்றும் தனிமை மட்டுமே சிறு வயது முதல் உனக்காக நான் இருக்கிறேன் என்று ஒரு துணையாக தன் வலியை போக்கும் உறவாக தன் தனிமை துயரை தீர்க பாடு படும் நாயகியின் உணர்வுகளும் அவள் காதலும் பாசமும் என பல உணர்வுகளை தன் எழுத்தில் பிரதிபலிக்கும் அழகே தனி தான்....
கண் இழந்த பிள்ளைக்கு சில மணி துளிகள் பார்வை கிடைத்த பின் மீண்டும் காரிருளில் தள்ளியது போன்ற அவள் காதல் வாழ்க்கை அவளை எப்படி எல்லாம் வருந்த வைக்கிறது என்பதை கதையின் நாயகியோடு நாமும் உணர முடியும் அப்படி ஒரு தாக்கம் உணர்வுகளை பதியவைக்கும் எழுத்து ....
இவ்வளவு கொடுமைக்கார ஹீரோவாடா நீ என்று நம் ஹீரோயின் ஆர்மி கடமை நம்மை அழைக்க அவனை திட்ட கூட மனம் வராத அளவுக்கு அவளை காதலிக்கும் ஹீரோ.... அவனின் கோபமும் நியாயம் தானே என் ஹீரோக்காக பேச வைத்த விதம் அருமை....
அக்காவிற்காக தன் வாழ்கையை பணயம் வைக்கும் தம்பி பாசம்... மனைவியின் மேல் வெறுப்பு இருந்த போது அவளின் தம்பி மற்றும் தங்கையை தன் பிள்ளைகளை போல பாசம் காக்கும் அத்தானாக இந்த ஹீரோ மனசை கொள்ளை அடிக்கிறான் என்றால் வாழ்க்கையில் போராட மட்டுமே வாழுந்து தன் உடன்பிறப்புகளுக்காக வாழுந்து தன் மன வலியை தன்னுள்ளே புதைக்கும் ஹீரோயின் கண் கலங்க வைக்கிறாள்...
வாழ்க்கையில் உண்மையோ வெறுப்போ என்னால் உண்மையாக தான் இருக்க முடியும் என்ற ஹீரோவின் வார்த்தைகள் மனதில் பதிகிறது என்றால் கடைசியாக தன் மனதை திறக்கும் ஹீரோயின் நம்ம கட்டியிழுக்கிறாள்....
கதையில் ஹீரோ தவறா இல்லை ஹீரோயின் தவறா என்று நம்மால் சொல்ல முடியாது மாதிரி கதையின் நகர்வு அருமை....
இதில் வரும் நட்புக்கு அழகு சேர்க்கும் நீக்கோ கேரக்டர் அவனின் பாசம் எல்லாம் உணர்வு பூர்வமாக இருக்கும் படிக்க....
கதையை படிக்க ஹீரோயின் உணர்வுகள் படித்து அவளுக்காய் ஹீரோவை திட்டியபடி படிக்க அவளை மெழுகு உருகுவது போல காதலிக்கும் ஹீரோ பக்கம் மன சாய தன் அக்காவுக்காக போராடும் தம்பியை படிக்கும் போது அவன் அத்தானை மேல் இருக்கும் அன்பு பாசம் அவன் பால் ஈர்க்க இப்படி எல்லா கதாபாத்திரங்களும் மனதில் சிம்மாசனம் இட்டு அமர்ந்து விட்டது கதை முடிவில்....
எழுத்தாளர் மேம் உண்மையாக உங்க தமிழ் சூப்பர்...
எனக்கு ரொம்ப பிடிச்ச வார்த்தைகள்...என்னடியப்ப என்ற உங்கள் ஒவ்வொரு ஹீரோவும் காதலோடு அழைப்பது.... அம்மாச்சி என்ற வார்த்தை அவ்வளவு பாசமும் உணர்வும் கொட்டி இருக்கிறது படிக்கும் போது.....
வாழ்த்துக்கள்

மேம்....
"இந்த கதையின் லிங் அமேசான் கிண்டில் இருக்கிறது"....
 

நிதனிபிரபு

Administrator
Staff member
கவிதா சக்கரவர்த்தி

" தனிமை துயர் தீராதோ “- நிதனி பிரபு .. ஒரு பொன் மொழி கூறுவார்கள்."பெண் கிளைதான் பெரும் கிளை" அதாவது பெண் குழந்தையால் வரும் சொந்தம்,சுற்றம் பெரிது.பெண்களுக்குள்ள பாசமும்,பரிவும்,அன்பும்,நேசமும் அலாதியானது, என்பது எவ்வளவு உண்மை ஆனால் கதையின் நாயகி மித்ரா தனது தாய் மற்றும் வளர்ப்பு தந்தை இவர்களால் வேண்டவெறுப்பாக வளர்க்க பட்டு என்று சொல்வதை விட சுயமாக வளர்ந்தால் என்றே சொல்லலாம்........... நாயகன் கீர்த்தனன் கதையை படித்த அனைவரும் வெறுத்தும் அதிகமாக விருப்பப்பட்ட ஒருவன் ......குடும்பத்துகாக வெளிநாட்டில் வாழும் நல்ல மனிதன் ... இவர்கள் இருவரும் சந்தர்ப்ப வசத்தால் திருமணம் புரிந்தாலும் காதலில் கசிந்து உருகி நன்றாக இருந்த உறவில் பெரிய விரிசல் விழுந்து விவாகரத்து வரை செல்கிறது ,தனிமை துயர் இருவரில் யாரை அதிகம் பாதித்தது..அப்படி என்ன நடந்து இருக்கும் இருவருக்கும் இடையில்,.எப்படியும் அவர் அவர் நிலையில் ஒரு நியாயம் இருக்கும் .................அது போலத்தான் கதை இருக்கும் .............அதனால் இவர்களின் வாழ்வில் நடந்த பிரச்சனையும் ...............இருபக்க நியாயத்தையும் எப்படி சொல்லப் போகிறீர்கள் என்ற ஆவல் ஒவ்வொரு பதிவும் படித்ததும் அதிகமாகிறது .............. கதையில் வரும் சத்தியன் ,பவித்ரா இருவருமே சகோதர பாசத்துக்கு எடுத்துக்காட்டாக வரும் பாத்திரங்கள் ...இவர்களிடையே வரும் காதல் ,மோதல் அருமையாக இருக்கும் .... கதையின் போக்கில் வரும் பல பாத்திரங்கள் நம்மை திட்டவும் ,பாராட்டவும் வைக்கிறார்கள் ....அதை நீங்க படிச்சு தெரிஞ்சுக்கோங்க .... கனமான கதைதான் ஆனால் முடிவில் சுபமாக முடித்து நம்மை சந்தோசப்படுத்திவிட்டார் . மித்திரா கீதன் என்றும் எங்கள் நினைவில் இருப்பார்கள். சில கதைகள் படித்து சில காலங்களில் மறந்துவிடும். ஆனால் இது என்றும் நினைவில் இருக்கும். கதையின் பல நிகழ்வுகள் காரசாரமான விவாதத்துக்கு உட்பட்டது ...அது ஏன்னு நீங்க கதையை படித்து தெரிந்து கொள்ளுங்கள் ...நிதாவின் மற்ற கதைகளை விட இந்த கதை அவரின் எழுத்து நடை மென்மேலும் மெருகி எந்தவித தங்கு தடையுமற்ற , தெளிந்த நீரோட்டம் போல இருந்தது ....... தொடர்ந்து பல கதைகள் எழுத எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
லக்ஷ்மி மாணிக்கம்



தனிமை துயர் தீராதோ...
நிதனிபிரபு...நீங்க என்னை அழவச்சிட்டீங்க..
ஒரு குடும்பத்தில் உலவிய ஃபீல்.. ஒவ்வொருவரின் உணர்வுகளையும் உணர்ந்து படிக்க முடிஞ்சது. லவ்லி
?
.. என்னோட விருப்ப எழுத்தாளர் பட்டியலில் நீங்களும் இருக்கீங்க.. இன்னும் நிறைய நிறைய எழுதுங்க
 

நிதனிபிரபு

Administrator
Staff member
Vidhya Mohan



ஹாய் நிதா கா.. தனிமை துயர் தீராதோ படிச்சேன்,.. நான் படிச்சு 7 நாளுக்கு மேல ஆகுது ... ஆன என்னால கதையின் தாக்கத்தில் இருந்து வெளிவர முடியவில்லை... மித்ரா படுற கஷ்டத்தை என்னால தங்க முடியல... அவளோட இருண்ட இறந்த பக்கம் படிக்கும் கண்கள் முழுவதும் கண்ணீரே... கீதன் மித்து காதல் நெஞ்சை தீண்டும் மெல்லிய சூறாவளி ..சத்யன் செல்ல தம்பியாவும், முரண்டு பிடிக்கும் காதலனாகவும் ,, பின்பு காதலே சுவாசமாகவும் இருக்கான் .. பவி என் செல்ல டார்லிங்... சோ ஸ்வீட் ... வித்தி என் பேர கொண்ண்டும் , என்ன மாதிரி அறியா பிள்ளையாவும் அள்ளுறா...( chumma lululaikku). Ovoru kathapathiramum very strong.... Rombave kanamana kathai ka
எனக்கு என் பீலிங்ஸ் எப்படி சொல்ல னு தெரியலக்கா .. ஆன u done a great job.. hatts offf ... மொத்தத்தில் உங்கள் கதைக்கு 100 க்கு 500 மார்க்ஸ் க்கா ....
 
Top Bottom