You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

நான் வாசித்து ரசித்த ஒரு குட்டிக் கதை

Sugiy

Member
ஓர் எலியம்மா தன் எலிக்குஞ்சுகளுடன் தாம் வசிக்கும் வீட்டிற்குள் உலாப்போய்க் கொண்டிருந்தன. திடீரெண்டு பூனை வரும் சத்தம் கேட்ட குஞ்சுகள் பயத்தில் நடுங்கத் தொடங்கி விட்டன. குஞ்சுகளின் பயத்தைப் பார்த்த அம்மா எலி சொன்னது " பயப்பட வேண்டாம் குஞ்சுகளா, நான் என்ன செய்கிறேன் என்பதைக் கவனமாகக் கேளுங்கள் " என்றது. அம்மா எலி தன் எலிக்குஞ்சுகளுக்கு முன்னால் நின்றுகொண்டு "வவ்... வவ்... வவ்.... வவ்... " என்று குரைக்கத் தொடங்கியது. திடீரென்று நாய் குரைக்கும் சத்தம் கேட்ட பூனையோ பயந்துபோய் ஓட்டம் பிடித்தது. குஞ்சுகளை பார்த்து அந்த எலியம்மா சொன்னது: " பார்த்தீர்களா குஞ்சுகளா, இரண்டுமொழிகள் தெரிந்திருப்பது எவ்வளவு பயனுள்ளதாக இருக்கிறது " என்றது.



என்ன உறவுகளே, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

புலம்பெயர்ந்து வந்துள்ள நாம் விடும் மிகப் பெரிய தவறு நாம் வாழும் நாட்டின் மொழியைக் கற்றுக்கொள்ளத்த தயங்குவதே!

நாம் வாழும் நாட்டின் மொழியில் எமக்கு ஓரளவேனும் தேர்ச்சி இருப்பின், அது எமக்கு மட்டுமல்லாமல் எம் குழந்தைகளுக்கும் நாம் நல்லதொரு முன்னுதாரணமாக இருப்பதோடு அந்த நாடுகளில் அந்நாட்டவர்களோடு இலகுவாக இயைந்து வாழ்வதற்கும் வழிசமைக்கும் அல்லவா?
 
Top Bottom