படி என்று ஒரு சொல் இருக்கிறது. அதற்கு விதம் என்று பொருள். அவ்விதம்/அவ்வாறு என்பதைத்தான் அப்படி என்கிறோம்.
படி என்னும் அச்சொல் அ, இ என்னும் சுட்டெழுத்துகளோடும் எ என்னும் வினா எழுத்தோடும் சேர்ந்து அப்படி, இப்படி, எப்படி என்று ஆகும்.
அப்படி இப்படி எப்படியை அடுத்து வல்லினத்தில் எந்தச் சொல் தோன்றினாலும் கண்ணை மூடிக்கொண்டு ஒற்று மிகுவிக்க வேண்டும்.
அப்படிப் போடு, அப்படித்தான், அப்படித் தெரியவில்லை.
இப்படிப் பண்ணாதே, இப்படிப்பட்டவை, இப்படிப் போனான்.
எப்படிப் பாடினரோ, எப்படிக் கண்ணில் விழுந்தாய், எப்படிப் பார்த்தாலும்.
இந்தப் படி என்னும் சொல் பிறசொற்களின் இறுதியிலும் தோன்றும்.
அதன்படி, சொன்னபடி, கேட்டுக்கொண்டபடி, கண்டபடி, வழக்கப்படி.
இத்தகைய சொற்களுக்கு அடுத்து வருகின்ற சொல் வல்லினத்தில் தொடங்கினால் வலிமிகுவிக்கவே கூடாது. புணராமல் இயல்பாய் நிற்க வேண்டும்.
அதன்படி செய்து காட்டு, சொன்னபடி கேள், கேட்டுக்கொண்டபடி தண்ணீர் கிடைக்கவில்லை, கண்டபடி தின்னாதே, வழக்கப்படி சிறப்பாகவே.
சுருக்கம் : அப்படி இப்படி எப்படிக்குக் கட்டாயம் வலிமிகும். மற்றபடி வேறு எந்தப் படியிலும் வலிமிகாது.

Last edited: