You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

இம்மாத எழுத்தாளர்கள்...இதழ் 3 & 4

ரோசி கஜன்

Administrator
Staff member
நீங்கள் இணையத்தில் எழுதுவதில்லை என்றாலும் இன்றைய காலகட்டத்தில் இணையம் வாசகர்களையும் எழுத்தாளர்களையும் இணைக்கும் அழகிய பாலமாக உள்ளது. அந்தப் பாலத்தில் பயணிக்கையில் ஏற்படும் மனதுக்கு இதம் தரும் நிகழ்வுகள், அசௌகரியங்கள் பற்றிச் சொல்ல முடியுமா?



பிரேமா: நான் கதையைப் பொது வெளியில் எழுதுவதில்லை. நேரடியாகப் புத்தகமாகத் தான் வெளியிடுகிறேன்.
வாசகர்களின் விமர்சனங்களை என்னுடைய மின்னஞ்சலுக்கோ முகநூல் பக்கத்திற்கோ கொண்டு சேர்ப்பது இணையம் தான். அந்த வகையில் இணைய தள சேவை எனக்கு பெரிதும் உதவுகிறது.
வாசகர்களின் விமர்சனத்தின் மூலமாகத் தான் நான் சரியான பாதையில் பயணிக்கிறேனா இல்லையா என்று என்னால் புரிந்து கொள்ள முடியும்.

அசௌகரியங்கள் என்று பெரிதாக எதுவும் எனக்கு நேரவில்லை.



திருமதி லாவண்யா: வாசகர்களுடன் ஏற்படும் நட்பும் அவர்களின் கருத்துப் பரிமாற்றங்களும். எழுத்தாளர்களே யோசிக்காத வேறொரு கோணத்தை வாசகர்கள் எங்களுக்கு அறிமுகப்படுத்துவார்கள்.



அசௌரியங்கள் என்றால் கண்டிப்பாக நாம் எழுதும் கதைகளைப் புத்தகமாக வெளிவரும் முன்னரே நமக்கே தெரியாமல் அனைவருக்கும் ஒரு சிலர் விநியோகம் செய்வதே.

இதனால் சில நட்புகளுக்குள் நம்பிக்கையின்மை ஏற்படும் சூழல் உண்டாகிறது.










 

ரோசி கஜன்

Administrator
Staff member
‘காதல்’ இல்லையென்றால் உலகில் எதுவுமே இல்லை.


அப்படியிருக்கையில் குடும்ப நாவலில் காதல் இல்லாமலா?
ஆனால், காதலை காட்சிப்படுத்த, நாயகன், நாயகி நெருக்கங்களை அதிகமாகக் காண்பிப்பதும் விவரணத்தில் உபயோகிக்கும் சொற்கள் முகம் சுளிக்க வைப்பதும் என அண்மைக்காலங்களில் பல கதைகள் வெளிவருகின்றன.
இது ஆரோக்கியமானதென்று கருதுகிறீர்களா?



பிரேமா: முகம் சுளிக்க வைக்கும்படியான காட்சிகள் என்று நீங்களே குறிப்பிட்டு இருக்கிறீர்கள். பின் அது ஆரோக்கியமானது என்று எப்படி ஒருவரால் சொல்ல முடியும்?





திருமதி லாவண்யா: கண்டிப்பாக ஆரோக்கியமானது இல்லை.



கதைகளை வாசித்து தான் கெட்டுப் போவார்களா என விவாதம் செய்பவர்களும் உண்டு.
காதலும் காமும் இல்லாமல் மனித இனம் கிடையாது. ஆனால், குடும்ப நாவல் என்ற கோட்டுக்குள் அமர்ந்து கொண்டு அதைச் செய்வது ஆரோக்கியமானது கிடையாது.

இத்தகையப் புத்தகங்களை வாசிப்பது பதின்வயது குழந்தைகள் முதல் வயதான பெரியவர்கள் வரை. அவர்களிடம் நாம் எழுதும் புத்தகங்களைத் தந்து தைரியமாக வாசிக்கச் சொல்ல முடிய வேண்டும். நம் புத்தகங்களை எடுத்து மறைத்து வைக்க வேண்டும் என எந்தவொரு வாசகரும் யோசித்து விடக் கூடாது.

என்னைப் பொறுத்த வரையில் நான் எழுதும் புத்தகங்களை உற்றார், உறவினர் மற்றும் நண்பர்களிடம் தயக்கமில்லாமல் தந்து படிக்கச் சொல்ல முடியும்.




 

ரோசி கஜன்

Administrator
Staff member
எழுத்தாளராக உங்களுக்குள்ள சமூகப்பொறுப்பு என்றால் எவற்றைச் சொல்வீர்கள்கள்?

பிரேமா: என்னுடைய எழுத்து யாரிடமும் தப்பான தாக்கத்தை உருவாக்கி விடக் கூடாது. என் எழுத்தைப் படித்ததால் நான்கு பேர் தங்களை நல்வழியில் மாற்றிக் கொள்ளா விட்டால் கூடப் பிரச்சனையில்லை. ஆனால் ‘இவரால் தான் நான் தவறான பாதைக்குச் சென்றேன்’ என்று யாரும் சொல்லும்படியாக நான் எதையும் எழுதியதில்லை. இனி எழுதப் போவதும் இல்லை.

திருமதி லாவண்யா: தமிழ் திரைப்படம் ஒன்று பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில் திருநங்கைகளைக் கேலி செய்து அதில் வந்த ஒரு காட்சி என் மனதை மிகவுமே பாதித்தது. சாதாரணமாகவே நம்மை யாரும் கேலியும், கிண்டலும் செய்தாலே நமக்குக் கோபம் வரும்.


அப்படியிருக்கையில், இவர்களின் பிறப்பையெல்லாம் இப்படிக் கேலி செய்யும் பொழுது இவர்கள் மனம் எத்தனை வருத்தமடையும் என எண்ணினேன். இது போன்ற படைப்பாளிகளுக்குச் சமூக அக்கறை வேண்டாமா என மனதில் எப்போதும் ஒரு ஆதங்கம் இருக்கும். அதை மின்மினிக் கனவுகள் என்ற கதையில் வரும் பிரசாந்த் கதாப்பாத்திரம் மூலம் உணர்த்த முயன்றிருக்கிறேன்.

இது ஒரு உதாரணம் மட்டுமே. இந்த விஷயம் என்றில்லை இது போல் பல விஷயங்கள் இப்படித் தவறாகக் காட்டப்பட்டிருக்கின்றன. அவை என் மனதில் எப்போதும் ஒரு நெருடலை ஏற்படுத்தி உள்ளன. அதனால் இயன்ற வரையில் அது போன்ற தவறுகளை நான் செய்யாமல் இருக்க நினைப்பேன். அத்தோடு அவ்விஷயங்களைப் பற்றியும் என் கதைகளில் நேர்மறையாகச் சொல்ல முயல்வேன்.



 

ரோசி கஜன்

Administrator
Staff member
செந்துரத்தின் கேள்விகளுக்குப் பதில் தருகையில் உங்கள் மனநிலை? மறைக்காது பகிருங்களேன். அப்படியே எங்கள் செந்தூரம் பற்றிய உங்கள் கருத்தையும் மனதிலிருந்து சொன்னால் மிகவும் மகிழ்வோம்.

பிரேமா: ஒரு எழுத்தாளராய் நான் அளிக்கும் முதல் பேட்டி இது.


நீங்கள் என்னைப் பேட்டிக்கென்று அணுகிய போதே ‘அந்த அளவிற்கு நான் சாதித்து விட்டேனா?’ என்று தானே கேட்டேன்.

அதனால் மிகுந்த சந்தோஷத்துடன் இதன் பதில்களை எழுதுகிறேன்.

உங்கள் இருவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

ஒரு பத்திரிக்கையை எடுத்து நடத்துவது என்பது எளிதான விஷயம் அல்ல. பெரிதாக எந்த முன் அனுபவமும் இல்லாமல் ஒரு பத்திரிக்கையை எனது இரு தோழிகளும் வெளியிட்டு இருக்கிறார்கள் என்பது பெருமைக்குரிய விஷயம்.


உங்களுடைய இந்தப் பயணம் பல மாதங்களை கடந்து வெற்றிப் பயணமாக அமைய என்னுடைய வாழ்த்துக்கள்.




திருமதி லாவண்யா: அட, என்னையும் பேட்டி கண்டு எம்மை பெருமைப்படுத்தி இருக்கிறார்களே! உண்மையைச் சொல்ல போனால் மிகவுமே மகிழ்ச்சி அடைந்தேன்.



இது கண்டிப்பாக என்னைப் பெருமைப்படுத்தக்கூடிய விஷயம். நெருங்கியத் தோழிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் சொல்லிப் பெருமைப்பட்டுக் கொண்டேன்.

நீங்கள் மேலே குறிப்பிட்டதைப் போல் நான் நெகிழ்ந்த தருணங்களில் இதுவும் ஒன்று.

உங்கள் முதல் இதழை வாசித்தேன். மிகவும் நன்றாக, நேர்த்தியாக அமைந்திருந்தது.

அதில் உங்கள் குழு மற்றும் எழுத்தாளர்களின் உழைப்பு நன்றாகத் தெரிந்தது. வெகு நாட்கள் கழித்து அழகிய இதழை, அதுவும் தூயத் தமிழில் வாசித்த திருப்தி ஏற்பட்டது.




 

ரோசி கஜன்

Administrator
Staff member
குடும்ப நாவல்கள்’ அவசரம் அவசரமாகப் புத்தகச் சந்தையை இலக்காகக் கொண்டு எழுதப்படுபவை என்று உங்களிடம் சொல்லப்பட்டால் பதில் என்னவாக இருக்கும்

பிரேமா: கண்டிப்பாக இல்லை. நான் இருபதே நாட்களில் சில கதைகளை எழுதி இருக்கிறேன். அதே போன்று சில கதைகளை மூன்று மாதங்கள் இழுத்தடித்தும் எழுதி இருக்கிறேன். ‘என்னை திருப்திப்படுத்தாத எழுத்து வாசகர்களை திருப்திப்படுத்தாது’ என்று நான் அடிக்கடி சொல்வதுண்டு. எனக்கு திருப்தி என்றால் மட்டுமே கதை அச்சுக்கு போகும்.




திருமதி லாவண்யா : தரமாக எழுத முடியுமென்றால் குறுகிய காலத்தில் நிறையப் புத்தங்களை வெளியிடுவதில் தவறில்லை. சன்மானம் பெறுவதை வியாபாரம் எனச் சொல்வது சரியல்ல. சன்மானம் ஒரு படைப்பாளிக்கு உந்துதலாக அமையலாம்.

ஆனால் சன்மானம் கிடைக்கும் என வலுவில்லாத கதை மற்றும் நேர்த்தியில்லாத கதைப்பின்னலைப் படைப்பாளிகள் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.





 

ரோசி கஜன்

Administrator
Staff member
ஒரே கேள்விகளை இரு எழுத்தாளர்களிடமும் கேட்ட பொழுது, தயக்கமின்றி, மகிழ்வாக மனதில் தோன்றியதை பகிர்ந்து கொண்டார்கள் .

இருவருமே மேலும் மேலும் பல நல்ல படைப்புகளை வழங்கி வாசகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்திருக்க செந்துரத்தின் சார்பில் மனமார வாழ்த்துகிறோம்.







 
Top Bottom