You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

உஷாந்தி கௌதமனின் 'உஷ் ... இது ரகசியமல்ல!' - 1(இதழ் 5)

ரோசி கஜன்

Administrator
Staff member
இந்த உலகத்துல நமக்கு வர்ற பிரச்சனைகளில் பெரும்பாலானவைகள் ஏன் வருதுன்னு தெரியுமா? எல்லாரும் தங்களைத் தாங்களே ஒரு அளவுகோலா வைச்சுர்றாங்க. பிறகு அப்படியே அந்த அளவுகோலுக்குள் மற்றவர்கள் அடங்க வேண்டுமென்று ஆசைப்படுவதனால் தான்!

அடங்கினால் அப்படியே எடுத்து பென்சில் பெட்டிக்குள் வைத்து விடுவார்கள். அடங்க வில்லையோ அவ்வளவுதான்...உடைத்து அடுப்புக் குள் போட்டு விடுவார்கள் !



அட... ஐந்து விரல்களுமே ஒரே மாதிரி இருக்கறதில்லை என்னும் போது மனிதர்கள் ஒரே மாதிரித்தான் இருப்பார்கள், இருக்க வேண்டும் என்று எப்படிச் சொல்ல முடியும்?

ஒவ்வொருத்தனுக்கும் ஒவ்வொரு டாலென்ட், ஒவ்வொரு மாதிரி யோசனைகள், எது சரி எது தவறு என்ற லெவலையே இன்பினிட்டி வரை கொண்டு போகலாம். எல்லாம் அந்த டபிள் ஹீலீக்ஸுக்குள் இருந்து கொண்டு ஜீன்கள் செய்ற அலப்பறைகள் தான்!

நீங்கள் எப்பொழுதுமே உங்களுக்கு பெஸ்ட் தான். ஆனால். அதே உங்களை இன்னொருவனுக்கு நீங்கள் பெஞ்ச் மார்க் ஆக்க நினைக்காதவரை உங்கள் வாழ்க்கை நல்லாத்தானிருக்கும்.

ச்சே! என்னவோ சொல்ல வந்து மெசேஜ் சொல்லிட்டிருக்கேன்!

ஒவ்வொருவருக்கும் வாழ்க்கைல ஸ்பெஷலா ஒரு அமானுஷ்யமான விஷயம் இருக்குமாம். அவங்களுக்கே அவங்களுக்கு என்று ஸ்பெஷலா… உண்மையாகத்தான் சொல்கிறேன்!

சரி... இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லுங்க!

ஒரு நம்பரை நீங்கள் அடிக்கடி பார்த்திருக்கும் அனுபவம் உண்டா?

அதாவது 4, 5 இப்படி ஏதாவது ஒரு இலக்கம் அடிக்கடி உங்கள் கண்ணில் தட்டுப்படுமா?

எனக்கு அப்படி 11:11 கண்ணில் படும். ஒரு நாளில் குறைந்தது ஒரு தடவையாவது அதனைப் பார்த்து விடுவேன். எங்காவது ஏதாவது வேலையில் இருந்து விட்டு சட்டென மணியைப் பார்த்தால் அது 11:11 இல் நின்று கொண்டிருக்கும். இல்லாவிட்டால் ஏதாவது ஈமெயில் வந்த நேரமாக அந்த இலக்கம் என் கண்ணில் படும், சில வேளைகளில் கூகிள் ட்ரைவில் நான் ஏதாவது செய்த ஆக்டிவிட்டி லாக்கில் அந்த இலக்கம் இருக்கும். ஒரு நாளில் குறைந்தது ஒருதடவையாவது பார்த்து விடுவேன், இதை!

இப்போது உங்களுக்கு பாக் கிரவுண்டில் அமானுஷ்ய மியூஸிக்கில் அந்த இலக்கம் வெள்ளைச் சாரியில் வந்தாக வேண்டுமே? ஹா ஹா ஆரம்பத்தில் செம்ம பயம் எனக்கு. நமக்கு என்னமோ சக்தி இருக்கிறது...நமக்குச் சரியாக அந்த நேரத்தில் ஏதோ பயங்கரமாக நடக்கப் போகிறது...அதற்காகத் தான் இதெல்லாம் சிம்பல் ஆக வருகிறது என்று மனசு டான் ப்ரவுனாக மாறி லப் டப்பிடும்.

கூகிளிடம் கூடக் கேட்டேன், ‘வாட் இஸ் த மீனிங் ஒப் சீயிங் 11:11’ என்று! கேட்டதும் கூகிள் என்னை நேராக இழுத்துக்கொண்டு போய் யாரோ இங்கிலிஷ் நியூமலோராஜி ஆன்லைன் ஜோசியர் வீட்டில் விட்டு, அந்த லேடி, “உன்னுடைய கேள்விக்கு என்னிடம் பதில் உண்டு. உன்னைப் பற்றி நான் நேற்றும் சிந்தித்தேன். நீ தாமதிக்காமல் காரியமாற்ற ஆரம்பிக்க வேண்டும். இல்லையேல் உனக்கு ஆபத்து... மேலும் தெரிந்து கொள்ள 100 டாலர் எனக்குக் கட்டு” என்று என் ஈமெயில் கதவைத் தட்டி பயமுறுத்தியதெல்லாம் கூட நடந்தது.

வயதாக ஆக, அந்தப் பரபரப்பு எல்லாம் போய் இது பழகியே போய் விட்டது. இப்போதெல்லாம் கண்ணில் படும் போது ‘ஆ நீயா? இன்றைக்கென்ன இவ்வளவு லேட்டாக வருகிறாய்?’ என்று அசால்ட்டாகக் கடந்து போய் விடுகிறேன்.

இதில் அந்த 11:11 என்னுடைய பிறந்த திகதி என்பது கொசுறுச் செய்தி. ஹா ஹா உங்களில் யாருக்காவது இந்த மாதிரி இலக்கங்கள் இல்லை, ஏதேனும் உருவங்கள் அடிக்கடிக் கண்ணில் படுமா? பின்னூட்டத்தில் பகிர்ந்தால் நாமெல்லாம் ஒரே பூத கணங்கள் என்று மகிழ்ந்து போக உதவியாக இருக்கும்!

ஹி ஹி நம்மளே பூத கணமாம், நமக்கே காண்பிக்கிறீர்களா படம் என்று உதார் விட்டுக்கொண்டு பன்னிரண்டு மணி இரவுக் காட்சிக்கு The nun பார்க்கப் போனீர்களானால் கம்பனி பொறுப்பேற்காது!

இதே போலத்தான் ஏதாவது ஒரு விஷயம் நடந்து கொண்டிருக்கும் போது ஒரு நியூஸ் பிளாஷ் போல, அந்த விஷயம் எப்போதோ முன்பே நடந்தது போலக் கண்ணில் காட்சி வந்து போகும். இது தங்களுக்கும் வரும் என்று நண்பர்கள் பலர் சொல்லியிருக்கிறார்கள்.

ஆரம்பத்தில் இதைப் பற்றித் தேடி வாசிக்கப்போய் முன்ஜென்மம், அதை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் காண்டம் என்று சொல்லப்படும் நாடி ஜோஷ்யத்தில் சொல்வார்கள் என்று யாரோ கிளப்பி விட, பேராதெனியாவில் இருந்து ட்ரெயினில் திருட்டுத்தனமாக கொழும்பு வந்து நண்பியைக் காண்டம் பார்க்க வைத்து விட்டு சுற்றி இருந்து வேடிக்கை பார்த்ததும், அவள் ஆபிரிக்காவில் ஒரு அரசகுடும்பத்தில் பிறந்தாள் என்று அவர்கள் சொல்லவும் அடக்க முடியாமல் அங்கேயே குபீரென்று சிரித்து மிரட்டி விரட்டப்பட்டதெல்லாம் வீர வரலாறுகள்!

என்னதான் நம்பிக்கை இல்லாவிட்டால் கூட, நம்மை ஒரு கதாநாயகனாக நாயகியாக உருவகித்து நம்மைச் சுற்றி ஏதோ மர்மம் நிகழ்வதாக கற்பனை செய்துகொள்வதில் உள்ள இன்பமே தனிதான். விடுவிக்கப்படாத மர்மமாக நமக்குள்ளேயே புதைந்திருக்கும் இந்த ஆழ்மனதின் மர்மங்கள் என்றேனும் வெளிப்படக்கூடுமோ என்ன?

இப்படி உங்களுக்கும் ஏதேனும் அனுபவங்கள் உண்டா? எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள். இந்த விஷயத்தை நான் கூட இது பிரமை, நானே கற்பனை செய்கிறேன் என்று தான் எண்ணிக்கொண்டிருந்தேன். என்னுடைய ஒரு நட்பு தற்செயலாக தனக்கும் ஒரு இலக்கம் அடிக்கடி தென்படுவதாகச் சொல்லும் வரை! ஆகவே பகிர்ந்து கொள்ளுங்கள், உங்களைப்போல என்னைப்போல, இன்னும் பலர் இருக்கலாம், யார் கண்டது!


தொடர்ந்து வருவேன்… பேசலாம்



இந்த உலகத்துல நமக்கு வர்ற பிரச்சனைகளில்

பெரும்பாலானவைகள் ஏன் வருதுன்னு தெரியுமா?

எல்லாரும் தங்களைத் தாங்களே ஒரு அளவுகோலா

வைச்சுர்றாங்க. பிறகு அப்படியே அந்த அளவுகோலுக்குள்

மற்றவர்கள் அடங்க வேண்டுமென்று ஆசைப்படுவதனால்தான்

அடங்கினால் அப்படியே எடுத்து பென்சில் பெட்டிக்குள்

வைத்து விடுவார்கள். அடங்க வில்லையோ அவ்வளவுதான்...

உடைத்து அடுப்புக் குள் போட்டு விடுவார்கள் !


உங்கள் வாழ்விலும் இப்படியான சந்தர்ப்பங்கள், நிகழ்வுகள் நடந்ததுண்டா? எம்மோடு பகிர்ந்து கொள்ளுங்கள் . அறிந்து கொள்ள ஆவலாக உள்ளோம்.
 
Last edited by a moderator:

Rena

Active member
நான் பல சமயங்கலில் பின் நடக்க இருப்பது முன்னமே தெரியும். நல்ல விசயம் லா இல்ல.உதாரணமாக இப்போ கண்டிப்பா யாரிடமோ திட்டு வாங்க போகிறோம் விடு ஜூட். அப்புறம்
.ஆஹா இப்போ இங்க திடீர்னு யாரோ வர மாறி இருக்கு நு நின ச்சா முன் பின் தெரியாத வர்கள் வருவார்கள். சில சமயங்களில் இது ஒரு prevention mari காப்பாற்றி இருக்கு. நினைவுக்கு சரியா வரல. எனக்கு school days la இருந்தே அதிகமாக இருக்கு. நல்லா recall பண்ணிட்டு பல சம்பவங்கள் சொல்கிறேன் தோழிகளே....
 

ரோசி கஜன்

Administrator
Staff member
நான் பல சமயங்கலில் பின் நடக்க இருப்பது முன்னமே தெரியும். நல்ல விசயம் லா இல்ல.உதாரணமாக இப்போ கண்டிப்பா யாரிடமோ திட்டு வாங்க போகிறோம் விடு ஜூட். அப்புறம்
.ஆஹா இப்போ இங்க திடீர்னு யாரோ வர மாறி இருக்கு நு நின ச்சா முன் பின் தெரியாத வர்கள் வருவார்கள். சில சமயங்களில் இது ஒரு prevention mari காப்பாற்றி இருக்கு. நினைவுக்கு சரியா வரல. எனக்கு school days la இருந்தே அதிகமாக இருக்கு. நல்லா recall பண்ணிட்டு பல சம்பவங்கள் சொல்கிறேன் தோழிகளே....
ஆவலோடு காத்திருக்கின்றோம் Rena .
 
Top Bottom