You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

எந்தன் உறவுக்கொரு உயிர்கொடு..! கருத்துத் திரி

நிதனிபிரபு

Administrator
Staff member
வணக்கம் நிதா மேடம்,
தங்களது எந்தன் உறவுக்கொரு உயிர் கொடு நாவல் மிக அருமையாக இருந்தது. கதையை வாசிக்க ஆரம்பித்தபோது ஒரு எதிர்மறை கருத்தையே எனில் தோற்றுவித்தது. அதன் காரணம் கதையின் தலைப்பு மற்றும் முதல் இரண்டு அத்தியாயங்கள் முடிந்ததும் கதையின் கரு என்னவென்று புரிந்துகொள்ள முடிந்தது தான். இந்த அளவு ஒரு தப்பை/ துரோகத்தை செய்தவனை எப்படி ஒரு கதாநாயகனாக சித்தரிக்கிறீர்கள் என்று யோசித்துக் கொண்டே தான் கதையை வாசித்தேன். ஆனால்.. என்ன சொல்வது என்று தெரியவில்லை .ரவிவர்மனை தவிர யாரும் என் மனதில் நிற்கவில்லை கதையை முடிக்கும் பொழுது. அவனின் தவிப்புகளையும் மனக்குமுறல் களையும் அருமையாக பகிர்ந்துள்ளீர்கள்க.கவியின் கஷ்டங்களை வாசிக்கும் பொழுது கண்களில் கண்ணீருடனும் ரவியின் மன உளைச்சலை (பாவையை பற்றி தெரிந்த பொழுது) வாசிக்கும் பொழுது பரிதாபப்படவும் ஆக தப்பை செய்தவர்களுக்காகவும் அதன் விளைவை அனுபவித்தவர்கள் காகவும் நாங்கள் கவலைப்பட்டது இந்தக் கதையில் தான் என்று நினைக்கிறேன்.

கதையின் அனேக இடங்களில் சூழ்நிலையை முடிவுகளை எடுக்கும் தங்களின் நிலைப்பாடு மிகவும் அருமை. உதாரணமாக மாற்றம் என்பது வற்புறுத்தி கொடுப்பதில்லை அது தானாக நிகழ வேண்டும் இன்று பாவையையும் சகுந்தலையும் காட்டியது மிகவும் அருமை. மனதிற்கு இனிய மனதை கணக்க செய்யும் அருமையான கதை. உண்மையில் ரவிவர்மன் கிடைக்க கவி கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
நம்முடைய வாழ்வில் மன்னிக்க முடியாத துரோகத்திற்கு உள்ளாகும் பொழுது அதிலிருந்து மீண்டுவர உற்ற துணையும் நண்பர்களும் கிடைத்தால் எந்த ஒரு தப்பையும் மன்னிக்கலாம் மறக்கலாம் என்பதை இக்கதை உணர்த்துகிறது. இன்னும் நிறைய சொல்ல ஆசைதான் ஆனால் இதோடு முடித்துக்கொள்கிறேன் வாழ்த்துக்கள் மேடம்.??
ஹாய் மனோ,

எவ்வளவு அருமையான கருத்து. நான்கைந்து முறை வாசித்துவிட்டேன். அவ்வளவு சந்தோசம் எனக்கு.

எல்லா விதத்திலும் சிறந்த ஒருவனை, அல்லது தவறுகளே செய்யாத ஒருவனை நாயகனாக்குவதில் அவ்வளவு ஈடுபாடில்லை எனக்கு. தவறுகளுக்கு உட்பட்டவன் தான் மனிதன். அப்படித்தான் இங்கே ரவிவர்மனும். வாழ்வில் மிகப்பெரிதாக தவறிழைத்தவன். அதனால்தான் தான் பெற்ற குழந்தையுடனான பத்து வருட வாழ்க்கையை இழந்து விட்டான். அதேபோல, அங்கே கவிக்கோ, அவனது மகளுக்கோ அவன் தேவைப்படவே இல்லை. அதாவது அவனது உறவு.. கணவனாக அவளுக்கோ அப்பாவாக பாவைக்கோ தேவைப்படவே இல்லை. அதுவே ஒரு ஆணுக்கு மிகப்பெரிய அடிதானே. அதைவைத்துத்தான் எந்தன் உறவுக்கு ஒரு உயிர் கொடு என்று தலைப்பும் இட்டேன்.

எது எப்படியானாலும், உங்களை போன்றவர்களின் கருத்துக்கள் தருகிற மனநிறைவுக்கு ஈடு இணையில்லை. மிக்க மிக்க நன்றி மனோ!
 
Mano

New member

அருமையான விளக்கம் மேடம். உண்மைதான். தவறு இல்லாத மனிதன் இல்லை. செய்த தவறை உணர்ந்து திருத்திக் கொள்வதில் தங்களது எழுத்து திறமையை காண்பித்துள்ளார்கள் தங்களது பதில் கண்டு மிக்க மகிழ்ச்சி.
 
நிதனிபிரபு

Administrator
Staff member
அருமையான விளக்கம் மேடம். உண்மைதான். தவறு இல்லாத மனிதன் இல்லை. செய்த தவறை உணர்ந்து திருத்திக் கொள்வதில் தங்களது எழுத்து திறமையை காண்பித்துள்ளார்கள் தங்களது பதில் கண்டு மிக்க மகிழ்ச்சி.

மிக்க நன்றி மனோ...
 
Thamizhselvi

Active member
மிக அருமையான கதை.படிக்கும் ஒவ்வொரு முறையும் புதியதாக இருக்கிறது.ஆரம்பத்தில் ரவியின் நடவடிக்கையில் கோபம் வந்தாலும் இறுதியில் தன் தவற்றை உணர்ந்து மனைவிக்கும் மகளுக்கும் முறையே அன்பான கணவனாக தந்தையாக வாழும் ரவி நிச்சயம் போற்றுதலுக்குரியவன்.மனதை தொட்ட நாவல்.நன்றி நிதா.
 
Babi

New member
Hi mam
Unga story enaku romba pidikummm pratilipi la than first unga story padichennn intha story padikumpothu office poratha kuda cut panitu continue va padichen ?? Ravi romba pidichithuuu.. nan fb la request koduthen Prabha iniya name la nenga accept panala yen mam so request cancel paniten.. Niaivelam Neyakida Vanthen full story podunga mam please pratilipi la oru part than padichen please
 
நிதனிபிரபு

Administrator
Staff member
மிக அருமையான கதை.படிக்கும் ஒவ்வொரு முறையும் புதியதாக இருக்கிறது.ஆரம்பத்தில் ரவியின் நடவடிக்கையில் கோபம் வந்தாலும் இறுதியில் தன் தவற்றை உணர்ந்து மனைவிக்கும் மகளுக்கும் முறையே அன்பான கணவனாக தந்தையாக வாழும் ரவி நிச்சயம் போற்றுதலுக்குரியவன்.மனதை தொட்ட நாவல்.நன்றி நிதா.

மிகவும் நன்றி தமிழ். எழுதி எவ்வளவோ நாட்களாயிற்று. ஆனாலும் இப்படியான அருமையான வார்த்தைகள் மனதை எப்போதுமே நெகிழ வைத்துக்கொண்டுதான் இருக்கிறது. மிக்க நன்றி தமிழ்
 
நிதனிபிரபு

Administrator
Staff member
Hi mam
Unga story enaku romba pidikummm pratilipi la than first unga story padichennn intha story padikumpothu office poratha kuda cut panitu continue va padichen ?? Ravi romba pidichithuuu.. nan fb la request koduthen Prabha iniya name la nenga accept panala yen mam so request cancel paniten.. Niaivelam Neyakida Vanthen full story podunga mam please pratilipi la oru part than padichen please

முதலில் மிகவும் சாரி; பிரென்ட் ரிக்குவெஸ்ட் அக்செப்ட் பண்ணாததற்கு. இப்போதெல்லாம் நான் அக்செப்ட் பண்றது இல்லை. அதனாலதான் உங்களையும் விட்டுட்டேன் என்று நினைக்கிறேன். கோபப்படாமல் இன்னொரு முறை அனுப்புறீங்களா. அக்செப்ட் பண்ணுறேன்.

அடுத்ததா, ஹாஹா ஆபீஸ் போகாம படிச்சீங்களா.. அம்மாடி, சந்தோசப்படவா கவலைப்படவா என்றே தெரியாம இருக்கே. எதுவானாலும் மிகவும் சந்தோசம். மிக்க நன்றி Babi.
 
Sahana7

Member
Hi nidha

Unga name correct ah ?Indha novel ippo oru 3 years munnadi enaku en friend gift ah kuduthathu. Athuvareikum theriyathu Namma ilangaila ivalo arumaiyana ezhuthalar orthanga irupanga nu.

Sathyama unga periya fan aagiten ma'am. Indha site pathi enaku theriya vandhathu ippo thaan. Seekirame ID onnu create pani ungakuda na share panikiten, en manasula ullatha

Ninga innum innum nalla padaipugala tharanum, niraya vetrigal ungala thedi varanum.

Na aandavana prarthikiren. Nanum srilankan tha. But Kandy la iruken. Jaffna tamil super ah iruku ?

Enthan uravukkoru uyir kodu- vechi senjutinga ma'am. Solla theriyala but ennavo onnu ullukulla deep ah touch paniruchu ❤
 
நிதனிபிரபு

Administrator
Staff member
Hi nidha

Unga name correct ah Indha novel ippo oru 3 years munnadi enaku en friend gift ah kuduthathu. Athuvareikum theriyathu Namma ilangaila ivalo arumaiyana ezhuthalar orthanga irupanga nu.

Sathyama unga periya fan aagiten ma'am. Indha site pathi enaku theriya vandhathu ippo thaan. Seekirame ID onnu create pani ungakuda na share panikiten, en manasula ullatha

Ninga innum innum nalla padaipugala tharanum, niraya vetrigal ungala thedi varanum.- மிக்க மிக்க நன்றி சஹானா.

Na aandavana prarthikiren. Nanum srilankan tha. But Kandy la iruken. Jaffna tamil super ah iruku

Enthan uravukkoru uyir kodu- vechi senjutinga ma'am. - ஹாஹா நன்றி நன்றி.

Solla theriyala but ennavo onnu ullukulla deep ah touch paniruchu

ஹாய் சஹானா,

என் பெயரை சரியாத்தான் சொல்லி இருக்கிறீங்க. மிக்க மிக்க மிக்க நன்றி உங்களின் அன்புக்கும் பாராட்டுக்கும். மிகவுமே நிறைவா இருக்கு. என் கதையை உங்களுக்கு பரிசாக தந்து என்னை அறிமுகம் செய்துவிட்ட அந்த தோழிக்கும் மனம் நிறைந்த நன்றியை சொன்னேன் என்றும் சொல்லி விடுங்கோ.

உங்களின் வேண்டுதலிலும் அன்பிலும் நெகிழ்ந்துதான் போனேன் சஹானா. அறிமுகமே இல்லாத ஒருவர் நம்மை மனமார வாழ்த்துகிறார் என்றால் அது எவ்வளவு பெரிய விடயம்? மிக்க நன்றி! இதை எனக்கு வாய்க்கப்பண்ணியது என் எழுத்து எனும்போது இன்னுமே சந்தோசமா இருக்கு.

நம்ம நாட்டு ஆட்கள் நான் மட்டுமில்லை, ரோசிகஜன் அக்கா இவங்க கதைகளும் இங்கயே வாசிக்கலாம். தணு - அவாவும் இலங்கைதான். இங்கயே வாசிக்கலாம். உஷாந்தி, யாழ் சத்யா இப்படி இன்னும் நிறையப்பேர் எழுதுறாங்க. அவர்களின் எழுத்தும் மிக மிக நல்லாருக்கும்.
 
Sahana7

Member
Kandippaa ? site la iruka matha ella kathaigalayum, alagaana padaipugalai ungalamathri avangalum tharuvanga apdeengira nambikkayoda padikiren.

KK unga ongoing story, padichitu iruken. seekirame epdi iruku nu soliduven.

Romba alaga reply onnu kuduthinga enaku ❤? screenshot kuda eduthu anupiten en friend ku ?

Thank you ma'am
 
Top Bottom