You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

எந்தன் உறவுக்கொரு உயிர்கொடு..! கருத்துத் திரி

Mano

New member
வணக்கம் நிதா மேடம்,
தங்களது எந்தன் உறவுக்கொரு உயிர் கொடு நாவல் மிக அருமையாக இருந்தது. கதையை வாசிக்க ஆரம்பித்தபோது ஒரு எதிர்மறை கருத்தையே எனில் தோற்றுவித்தது. அதன் காரணம் கதையின் தலைப்பு மற்றும் முதல் இரண்டு அத்தியாயங்கள் முடிந்ததும் கதையின் கரு என்னவென்று புரிந்துகொள்ள முடிந்தது தான். இந்த அளவு ஒரு தப்பை/ துரோகத்தை செய்தவனை எப்படி ஒரு கதாநாயகனாக சித்தரிக்கிறீர்கள் என்று யோசித்துக் கொண்டே தான் கதையை வாசித்தேன். ஆனால்.. என்ன சொல்வது என்று தெரியவில்லை .ரவிவர்மனை தவிர யாரும் என் மனதில் நிற்கவில்லை கதையை முடிக்கும் பொழுது. அவனின் தவிப்புகளையும் மனக்குமுறல் களையும் அருமையாக பகிர்ந்துள்ளீர்கள்க.கவியின் கஷ்டங்களை வாசிக்கும் பொழுது கண்களில் கண்ணீருடனும் ரவியின் மன உளைச்சலை (பாவையை பற்றி தெரிந்த பொழுது) வாசிக்கும் பொழுது பரிதாபப்படவும் ஆக தப்பை செய்தவர்களுக்காகவும் அதன் விளைவை அனுபவித்தவர்கள் காகவும் நாங்கள் கவலைப்பட்டது இந்தக் கதையில் தான் என்று நினைக்கிறேன்.

கதையின் அனேக இடங்களில் சூழ்நிலையை முடிவுகளை எடுக்கும் தங்களின் நிலைப்பாடு மிகவும் அருமை. உதாரணமாக மாற்றம் என்பது வற்புறுத்தி கொடுப்பதில்லை அது தானாக நிகழ வேண்டும் இன்று பாவையையும் சகுந்தலையும் காட்டியது மிகவும் அருமை. மனதிற்கு இனிய மனதை கணக்க செய்யும் அருமையான கதை. உண்மையில் ரவிவர்மன் கிடைக்க கவி கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
நம்முடைய வாழ்வில் மன்னிக்க முடியாத துரோகத்திற்கு உள்ளாகும் பொழுது அதிலிருந்து மீண்டுவர உற்ற துணையும் நண்பர்களும் கிடைத்தால் எந்த ஒரு தப்பையும் மன்னிக்கலாம் மறக்கலாம் என்பதை இக்கதை உணர்த்துகிறது. இன்னும் நிறைய சொல்ல ஆசைதான் ஆனால் இதோடு முடித்துக்கொள்கிறேன் வாழ்த்துக்கள் மேடம்.??
 
Top Bottom