You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

என்னைப்பற்றி...

நிதனிபிரபு

Administrator
Staff member
என்னைப்பற்றி?1582993655049.png
நீங்க என்ன அவ்வளவு பெரிய ஆளா நிதா எண்டெல்லாம் கேட்கப்படாது. நான் பாவம்..

முகப்புத்தகம் முழுக்க இது சிரிப்போடு ஓடிக்கொண்டு இருக்கு. அதையே நான் நம் தளத்துல கேட்டுப்பாக்கலாமே எண்டு நினைச்சேன்.

எனக்கு என்னைப்பற்றித் தெரியும். அதே உங்களுக்கு? நாம் யாருமே நேரடியாக முகம் பார்த்துப் பழகி என்று பரிட்சயமானவர்கள் அல்லதான்.

ஆனாலும், என் கதைகள்.. அதிலே வரும் சம்பவங்கள்.. அதை நான் சொல்லும் பாங்கு என்று ஏதோ ஒன்று உங்கள் ஒவ்வொருவர் மனதிலும் எனக்கான ஒரு முகத்தை வரைந்துவிட்டிருக்கும் தானே. அந்த எண்ணெய் பற்றிக் கேக்கிறேன்.

நீங்க சொல்லுங்கோ.. அப்படியே உங்களை நான் அறிந்திருந்தால் எனக்குத் தெரிஞ்சதை சொல்லுறேன்.
 

Umaganesan

Member
Hai mam...I love your stories...in your story the importance of the all chacters is good...i really wounder how you can manage by balacing all of those things...even in sometimes i may wounder whether it is a true story or not....
But my fav part is naming ur character and those nick names...really superb mam...soulful...and the way of expressing their love also very nice....
So by guessing You r a very lovelable person...who take care of all...wounderful mother to your children...and (kandeepa) lovable wife...(sometimes i may think that ur romance part in your story is may be your realtime experince)(just for kidding mam dont mind it)
You may consider good and bad side of each person...from.your writing it seems clear....
As like you know NNV is my all time fav story....
My one of the comfort zone is include your writing mam...those words you used describe the emotional part is my fav...
Keep on writing mam...we all are waiting for your stories...
 

நிதனிபிரபு

Administrator
Staff member
Hai mam...I love your stories...in your story the importance of the all chacters is good...i really wounder how you can manage by balacing all of those things...even in sometimes i may wounder whether it is a true story or not....
But my fav part is naming ur character and those nick names...really superb mam...soulful...and the way of expressing their love also very nice....
So by guessing You r a very lovelable person...who take care of all...wounderful mother to your children...and (kandeepa) lovable wife...(sometimes i may think that ur romance part in your story is may be your realtime experince)(just for kidding mam dont mind it)
You may consider good and bad side of each person...from.your writing it seems clear....
As like you know NNV is my all time fav story....
My one of the comfort zone is include your writing mam...those words you used describe the emotional part is my fav...
Keep on writing mam...we all are waiting for your stories...

ஹாய் உமா,

எப்போதுமே உங்களின் அன்பு அலாதியானது. மென்மையான இதயம் கொண்டவர் என்று நிறையமுறை நினைத்து இருக்கிறேன். உங்களின் அன்பை எதிர்பார்ப்பை கேள்வியை ஆசையை கூட மென்மையாக தனிப்பட்ட முறையில் எப்போதுமே வெளிப்படுத்தும் பண்பான ஒருவர்தான் நீங்கள். அதை திரும்பவும் நிரூபித்து இருக்கிறீங்க.

இது பதில் புகழாரம் இல்லை. உண்மையிலேயே நான் உணர்ந்து இருக்கிறேன். உங்களின் எதிர்பார்ப்பில் கூட ஒரு மென்மை இருக்கும். அதே மென்மையோடும் அன்போடும் நீங்கள் சொல்லியிருக்கும் வார்த்தைகள் மிகுந்த நிறைவை தருது. என் இதயத்தில் இருந்து நன்றி.

சும்மா விளையாட்டுக்கு என்று ஆரம்பித்த கதை எழுதுவது உங்களைப்போன்ற நல்ல அன்பான உள்ளங்களை எனக்கு அறிமுகப்படுத்தி இருக்கு என்று நினைக்கும்போது, இதைவிட வேறு என்ன வேண்டும்?

எப்போதுமே எனக்கு என்னைப் பிடிக்கும். குடும்பத்தை தொழிலை பிள்ளைகளை என்று எல்லாவற்றிலும் மிகுந்த கவனமாக இருப்பேன். அப்படியே எனக்குப் பிடித்த எழுத்திலும். முடிந்தவரை என்னுடைய முழுமையைத்தான் கொடுப்பேன். ஆக நான் என்னையும் கைவிட்டுவிடவில்லை. என் ஆசைகளை எனக்குப் பிடித்தவைகளைத்தான் நானும் செய்கிறேன். அதன்மூலம் என் எழுத்தை நேசிக்கும், என் எழுத்தின் மூலம் அறிந்துகொண்ட என்னை நேசிக்கும் உங்களை போன்றவர்களின் அன்பு கிடைப்பது பாக்கியமே. நன்றி.

பெயர்களை தேர்வு செய்வதில் உண்மையிலேயே கொஞ்சம் கவனம் எடுப்பேன் தான். நல்ல தமிழ் பெயர்களை முடிந்தவரை அறிமுகம் செய்ய விரும்புவேன். உங்களுக்கு ஒரு விசயம் தெரியுமா, ஒரு தோழி அவரும் என் கதைகளை விரும்பி வாசிப்பவர் தான். மிகுந்த அன்பானவர். அவருடைய மகனுக்கு செந்தூரன் பெயராம். அந்தப் பெயரைச் சூட்ட, நிலவே நீ என் சொந்தமடி என்கிற என் கதையின் நாயகன் செந்தூரனும் ஒரு காரணம் என்றார். உணர்வுகளை தெளிவாகச் சொல்லுவேன் என்பார்கள். அவர் அப்படிச் சொன்னபோது எனக்கு என் சந்தோசத்தை சொல்ல வார்த்தைகளே இல்லை. அப்படி ஒரு சந்தோசம்.


(sometimes i may think that ur romance part in your story is may be your realtime experince)(just for kidding mam dont mind it)

ஹாஹா... இதை என் கணவரைத்தான் கேக்கவேணும். கொடுமைக்காரி என்பாராக இருக்கும்.

உண்மை, யாரையுமே குற்றவாளியாகவோ அல்லது அப்பழுக்கற்ற நல்லவராகவோ காட்ட விரும்புவது குறைவுதான். யாரிடம் குறைகள் இல்லை சொல்லுங்கோ.. அப்படித்தான் இயல்பான மனிதர்களை அவர்களின் ஆசாபாசங்களோடு முடிந்தவரை சொல்ல நினைப்பேன்.

My one of the comfort zone is include your writing mam...those words you used describe the emotional part is my fav..

இதைவிட வேறென்ன வேண்டும் எனக்கு? மிக்க மிக்க மிக்க நன்றி உமா.

வேற என்ன சொல்ல? மிக்க மிக்க நன்றி உமா. நிச்சயமாக இத்தனை அழகான என்னை நெகிழ வைக்கும் அன்பான வார்த்தைகளை எதிர்பார்க்கவே இல்லை. நன்றி நன்றி.
 

ரோசி கஜன்

Administrator
Staff member
2011 அல்லது 2012 என்று நினைக்கிறன் , அதற்குப் பிறகாகவும் இருக்கலாம் .

ஒரு கதை, நாயகன் பெயர் முகிலனோ என்னவோ. விருப்பம் இல்லாத பெண்ணைக் கலியாணம் செய்ததா கதையில் வருமாக்கும். யார் கதையென்று நினைவில்லை . வாசிக்கவேண்டும் என்று நினைத்துவிட்டு அப்படியே போயிட்டு.
அக்கதைக்கான விமர்சனம் , விவாதம் சூடுபறக்க இணையத்தளமொன்றில் நடந்துகொண்டிருந்தது . அப்போது இணையத்துக்கு நானும் எனக்கு இணையமும் மிக மிகப் புதிது. அதில் மாறி மாறி விவாதமும் சண்டையும் போட்டவர்கள் முன்னரே ஒருவருக்கொருவர் அறிந்தவர் தெரிந்தவரோ என்றெல்லாம் தான் முதலில் நினைத்தேன். அக்குறித்த திரிக்குச் சென்று அவர்களின் விவாதங்களை பார்ப்பதில் எனக்கு மிகவும் சுவாரசியம். காரணம் ் அதில் இருவர் அவ்வளவு உன்னிப்பாக விவாதிப்பார்கள். அவர்கள் பேசாமல் கிரிமினல் லோயராக வந்திருக்கலாம் அல்லது லோயரோ என்றெல்லாம் நினைத்திருக்கிறேன்.

அவர்கள் விவாதமும் விமர்சனமும் என்னையும் ஒரு கதைக்கு முன்னோட்டம் போல் எழுத வைத்தது . தங்கிலீசில் தான் இரு கதைகளுக்கு ஒன்றாக முன்னோட்டம் போல் எழுதி அங்கு போட்டேன் . அதுதான் என் எழுத்துக்கான திறவுகோல்.

மேலே நான் சொன்ன இருவர் எழுத்தாளர்கள், நிதாவும் தேனு என்பவரும் . அதுமட்டுமின்றி அப்போது அங்கு விவாதித்த அநேகர் இப்போது எழுத்தாளர்கள்.

வாசிப்பில் மிகுந்த விருப்பம் இருந்தாலும் என்னால் சுட சுட கிடைப்பதெல்லாவற்றையும் வாசிப்பது என்பதோ தொடர்கதைகள் காத்திருந்து வாசிப்பதென்பது முடியாத காரியம் .


ஆனாலும் நிதாவின் தொடர் காத்திருந்து ஒவ்வொரு அத்தியாயமாக வாசித்தேன் .

அவரின் கதைகள் மூலமாக கதைகளுக்கான காரசாரமான விமர்சனங்கள் மூலமாகவே எங்களுள் பழக்கம் . வந்து போகும் தூரத்தில் இருக்கவே சந்தித்து இன்று நிறைய நாட்கள் பழகிய உறவு போலாகி விட்டது .

படபடவென்று அடியடா பிடியாடா என்று அப்போதெல்லாம் கதைத்து எனக்குள் நிறையவே தயக்கத்தை விதைத்திருந்தாலும் , அக்குணமே நிதாவுக்குக் கம்பீிரம்!

வயதுக்கு மீறிய முதிர்வு, தவறா பிழையா அது மிகச் சிறிய விடயமென்றாலும் சட்டென்று மாற்றவோ திருத்தவோ நினைக்கும் குணம் , அதாவது தன்னைத் தானே சீர்துக்கிப் பார்க்கும் நிதாவின் குணம் எனக்கு மிகவும் பிடிக்கும்.

அன்பும் கண்டிப்பும் நிறைந்த தாய் , பாசக்கார மனைவி , சகோதரி


Love you always Nitha :love:
 

Amu87

Active member
Nitha mam...ungalai pattri... நான் ரொம்ப respect செய்யும் ஒருவர் நீங்கள் ...
உங்களின் எழுத்துக்கள் அதில் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் விதம் என்னை மட்டும் அல்ல உங்களின்புத்தகம் வாசிக்கும் அனைவரையும் கவர்ந்தது அதுவாகத்தான் இருக்கும்நீங்கள் ஒரு யதார்த்தவாதி and sensitive person ஆகவும் இருக்க வேண்டும் hmmm.... கண்டிப்பா உறவுகளைசேர்த்து நடக்கும் ஒருவர் என்றே நினைக்கிறன் அது உங்களின் பெரும்பாலான கதைகளில் வெளிப்படுது ....உங்களின் இரண்டு கதைகளில் வெளிநாட்டில் இருக்கும் கணவருடன் சேரஇருக்கும் அந்த காலப்பகுதிக்குள்மனைவியின் நிலை அவளின்ர தவிப்பு எல்லாம் அவ்வளவு detailல இருக்கும் .... ஒவ்வொரு முறை அத வாசிக்கும்போது எனக்கு தோணும் அது உங்களின்ர சொந்த அனுபவமாக இருக்குமோ எண்டு .. he he ... sorry if am wrong ... because அதை அனுபவித்தவர்களுக்கு தான் தெரியும் அந்த நிலை... அந்த waiting period சொர்க்கமும்இல்லாமல் நரகமும் இல்லாத நிலை .. may god bless you mam.. keep writing ... keep entertain us ...
 

Gowri

Active member
நிதாக்கா, நீங்கள் மிக நன்றாக கதை எழுதும் திறமையானவர், அது உலகறிந்த ஒன்று. நான் உங்களை பற்றி கூறுவதென்றால்.. நீங்கள் மிகுந்த நகைச்சுவை உணர்வு உடையவர், நல்ல அம்மா, தன்னம்பிக்கை உடையவர், அன்பானவர், ஆனால் எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை வைத்திருப்பவர்.. சரியா அக்கா?!
 

Umaganesan

Member
Thank u for your kind reply mam....your message made my day spl....actually i send thz for praising ur good side....but u did same to me... by denoting some good points about me...you are the first author whom i can contact directly without hesiation..it's really spl to me mam...
 

Vathsala

Member
Dear NP. For the past few months I am reading your all stories. Silva stories Thirumba thirumba padikkiren. Awesome NP. Thanimai Thuyar story padithuvittu Appaji azhuthu irukkiren. U r chance less. Kandippa neenga vayathil chinnavaraga than irupeerkal enbathal ennudaya blessings. Menmelum neengal Neena ayuludan ungal familyodu santhoshamaga irukka aandavanai prarthikkiren.
 

seethavelu

Active member
நான் உங்களின் இரண்டு கதைகளை வாசித்திருக்கிறேன்
என் பார்வையில் நீங்கள்
உங்கள் கதைகளின் மூலம் தெரிந்து கொண்டது .....
அன்பானவர், உறவுகளுக்கும் ,உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுப்பவர்
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Latest posts

Top Bottom