You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

ஏனோ மனம் தள்ளாடுதே...!

Status
Not open for further replies.

நிதனிபிரபு

Administrator
Staff member
“ஐயோ அண்ணி! அண்ணா வரமுதல் காரியத்தை முடிக்கோணும்!” அவளின் முன்னே முழங்காலில் நின்றவாறே சேலையை விலக்கி, வயிற்றில் முத்தமிட்டாள்.

“ஐயோ யாழி கூசுது!” வேகமாக விலகியவளை விடாமல் பிடித்து, “அண்ணி அசையாம நில்லுங்க! நான் என்ர மருமகப்பிள்ளைய வெல்கம் செய்றன்! சின்னக்குட்டி! நான் உங்கட அத்தை. உங்கட ஒரே ஒரு அத்தை. நீங்க பிறந்தபிறகு நான்தானாம் உங்களுக்கு பெயர் வைப்பன். நான்தான் உங்களை வளப்பன். உடுப்பெல்லாம் நான்தான் வாங்குவேனாம். என்னோடதான் நீங்க விளையாடோணும். உங்களுக்கு ஒரு சித்தியும் இருக்கிறா. எண்டாலும் அவவோட நீங்க சேரக்கூடாது சரியோ?” வார்த்தைக்கு வார்த்தை முத்தமிட்டபடி பேசிக்கொண்டிருந்தவளை உடல் முழுவதுமே கூசியபோதும் விலக்க மனம் வராமல் முகம் முழுக்கப் பூத்த சிரிப்புடன் பார்த்திருந்தாள் பிரமிளா.

வாசலில் நிழலாட நிமிர்ந்தவள் அங்கு நின்றவனைக் கண்டதும் யாழினியை வேகமாகத் தன்னிடமிருந்து விலக்கிவிட்டுச் சேலையை அவசரமாகச் சரி செய்துகொண்டாள்.

“அது அண்ணா.. குட்டிப்பாப்பாவை.. சும்மா..” என்று உளறிக்கொட்டிவிட்டு அங்கிருந்து சிட்டெனப் பறந்துபோனாள் யாழினி.

கதவைச் சாற்றிவிட்டு தன்னை நோக்கி வந்தவனின் விழிகளில் எதைக் கண்டாளோ வேகமாக அங்கிருந்து வெளியேற முயல, இடையோடு சேர்த்து வளைத்துப் பிடித்தான் அவன்.

அவளைத் தன்னருகில் கொண்டுவந்து, “அந்த டோர எங்களுக்கும் கொஞ்சம் திறக்கிறது.” என்று, சிறு சிரிப்புடன் கேட்டவன் தங்கையின் செயலைத் தனதாக்கிக்கொண்டிருந்தான்.

தன் முன்னே மண்டியிட்டு வயிற்றினில் உதடு பதித்தவனை நம்பமாட்டாமல் இமை தட்டி விழித்தாள் பிரமிளா. எதற்காகவும் தன் உயரம் விட்டு இறங்காத ஒருவன், அக்கிரமக்காரன் ஆணவம் நிறைந்த அகங்காரம் பிடித்தவன் என்று அவளாலேயே நாமம் சூட்டப்பட்டவன் தன் முன்னே மண்டியிட்டிருக்கிறானா?

பெரும் பாடுபட்டு அவனிடமிருந்து தப்பித்து கீழே ஓடியவளை, “மெல்ல நட!” என்றது அவனது சிரிக்கும் குரல்.

அதன்பிறகு அவன் வெளியே சென்றபிறகுதான் தங்களின் அறைக்கே சென்றாள் பிரமிளா. குளித்து, உடைமாற்றி அடுத்த நாளுக்கான வேலைகளைக் கவனித்தபோதுதான் முக்கியமான பயிற்சிப் புத்தகத்தை வீட்டிலேயே விட்டுவிட்டு வந்தது நினைவில் வந்தது. யாழினியை அழைத்து எடுத்துவந்து தரமுடியுமா என்று கேட்டாள். அடுத்த நொடியே தயாராகி வந்து, “அண்ணி, வரேக்க உங்கட ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு வரட்டா?” என்றாள் ஆவல் மின்னும் குரலில்.

“அதுக்கு உன்னட்ட லைசென்ஸ் இருக்கா?”

முகம் வாடிப்போயிற்று அவளுக்கு. ட்ரைவிங் பழகவா என்று கேட்டபோது சின்ன அண்ணாதான் தடுத்துவிட்டிருந்தான். “இல்லை அண்ணி. ஆனா நல்லா ஓடுவன்!” என்றவளைப் பொய்யாக முறைத்தாள் பெரியவள்.

“முதல் லைசென்ஸ் எடு. பிறகு தாராளமா ஓடு. இப்ப சைக்கிள்ல போய்ட்டுவா!” என்று துரத்திவிட்டாள்.

“உங்கட மருமகள் வச்சிருக்கிறது ஓட்ட ஸ்கூட்டி. அத ஓடுறதுக்கு லைசென்ஸ் வேற வேணுமாம்!” தாயிடம் சிடுசிடுத்தான் மோகனன்.

பதட்டத்துடன் வேகமாகப் பிரமிளாவைத்தான் எங்கே என்று தேடினார். நல்லகாலம், யாழினியோடு பேசியபடி கேட் வரை போயிருந்தவள் அப்போதுதான் வீட்டுக்குள் வருவது தெரிந்தது.

“சும்மா கண்டதையும் கதைக்காத தம்பி!” என்று மெல்லிய குரலில் அதட்டிவிட்டு, “பால் பாயாசம் காய்ச்சினான். வாம்மா வந்து குடி.” என்று அவளை அழைத்தார்.

அவள் வரவும் விருட்டென்று அங்கிருந்து அகன்று போனான் மோகனன்.

அண்ணியின் வீட்டுக்குப் போகிறோம் என்றதுமே ரஜீவன் தான் கண்களுக்குள் வந்து நின்றான். இப்போதெல்லாம் அவளின் இரவுகள் அவனின் நினைவுகளால் மாத்திரமே நிறைந்துகொண்டிருந்தது. அன்று ஏன் அவ்வளவு கோபப்பட்டான்? அவனுக்கும் அவளைப் பிடித்திருக்கிறதோ? வீடுவரை கூடவே வந்தானே. வார்த்தைகளால் அவளை ஓடவைத்தவன் செய்கைகளால் நெருக்கமாக உணரவைப்பதை உணர்ந்தானா இல்லையா?

எண்ணங்களுக்குச் சக்தி இருப்பது உண்மை என்பதை நிரூபிப்பதுபோன்று பிரமிளாவின் வீட்டில் நின்றிருந்தான் ரஜீவன். பார்த்தவளின் முகமும் விழிகளும் அன்றலர்ந்த மலரினைப்போன்று மலர்ந்து போயிற்று.

சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு ஓடிவந்து, “மாமி! அண்ணி ஏதோ புக் மறந்து விட்டுட்டாவாம். அதை எடுத்துக்கொண்டு வரச்சொன்னவா.” என்றவளின் விழிகள் அடிக்கடி அவன் புறமாகத் தாவிக்கொண்டிருந்தது.

ரஜீவனும் அவளை எதிர்பார்க்கவில்லை. கூடவே ஆவலும் ஆசையாக தன்னை நோக்கிப் பாய்ந்த அவளின் விழிவீச்சில் மனது தடுமாற, தன்னை மீறியே சிலநொடிகள் விழிகளை அவளிடம் நிலைக்க விட்டவன், அவளின் கண்கள் குறும்புடன் சிரிக்கவும் வேகமாகப் பார்வையை அகற்றிக்கொண்டான். ‘சும்மாவே விடமாட்டாள். இதுல நான் வேற பாத்து வச்சா..’

அதற்குள் சரிதா கொண்டுவந்து கொடுத்த பழக்கலவையை ஒரே மடக்கில் அருந்திவிட்டு, “புக்க நான்போய் எடுத்துக்கொண்டு வாறன்.” என்றுவிட்டு பிரமிளாவின் அறைக்கு ஓடினாள். போனவள் அதே வேகத்தில் திரும்பி வந்து, “ஐயோ மாமி. அங்க நிறைய புக்ஸ் கிடக்கு. அதுல எது எண்டு சரியா தெரியேல்ல. அண்ணிட்ட கேப்பம் ஏண்டா ஃபோனை விட்டுட்டு வந்திட்டன்.” என்றாள் சோகமாக.

சரிதாவுக்கு சின்னவள் ஒவ்வொரு செய்கையும் தீபாவை நினைவுறுத்திற்று. சிரிப்புடன், “பொறம்மா. என்ர ஃபோன் தாறன் கேள்.” என்று அவர் திரும்ப, “உங்களிட்ட அண்ணின்ர நம்பர் இல்லையா?” என்று ரஜீவனை விசாரித்தாள் யாழினி.

“இருக்கு!”

“அப்ப உங்கட ஃபோனை தாங்கோ. வேணுமெண்டா கதைக்கிறதுக்கு காசு தாறன்.” என்றவளை முறைத்துவிட்டு செல்லை பொக்கட்டில் இருந்து எடுத்துக்கொடுத்தான் அவன்.

பிரமிளாவுக்கு அழைத்து எந்தப் புத்தகம் என்று கவனமாகக் கேட்டுவிட்டு திருப்பிக் கொடுத்தவளின் கண்ணில் இருந்த சிரிப்பு என்னவோ சரியில்லை என்று சொல்லிற்று. சரிதாவும் அங்கேயே நின்றதில் பேசாமல் நின்றான் ரஜீவன்.

புத்தகத்தை எடுத்துக்கொண்டு வந்து, “சரி மாமி நான் போயிட்டு வாறன். பாய் ரஜீவன்!” சொல்லிக்கொண்டு புறப்பட்டவளின் நடையில் பெரும் துள்ளல்.

ரஜீவனால் அவளிடமிருந்து விழிகளை அகற்றுவது மிகுந்த சிரமமாக இருந்தது. என்னவோ என்றுமில்லாமல் அவனின் கட்டுப்பாட்டையும் மீறித் தன் புறமாகக் கவர்ந்திழுத்தாள் யாழினி. சைக்கிளின் பாஸ்கெட்டில் புத்தகத்தைப் போட்டவள், உதட்டில் வழிந்த குறுஞ்சிரிப்புடன் தன் பாவாடை பொக்கெட்டுக்குள் இருந்த போனையும் எடுத்து பாஸ்கெட்டுக்குள் போட அடிப்பாவி என்று உதடசைத்தான் ரஜீவன்.

அவள் மறைந்ததும் தனியாகச் சென்று கைபேசியை எடுத்துப்பார்க்க, பிரமிளாவின் இலக்கத்துக்கு அழைக்க முதல் புது இலக்கமொன்றுக்கு அழுத்தப்பட்டிருந்தது. நிச்சயம் அது அவளுடையதுதான். அந்த நொடியிலிருந்து ஒரு எதிர்பார்ப்பில் மனது துடித்துக்கொண்டிருந்தது. அழைப்பாள்.. அல்லது ஏதாவது மெசேஜாவது அனுப்புவாள். எடுக்கட்டும் நல்ல பேச்சு கொடுக்கிறன் என்று பொய்யாக முனகிக்கொண்டான்.

இப்படி அவனைத் தன் நினைவினில் மூழ்கடிக்க என்றே திட்டம் போட்டுச் செய்தவள் அவனுக்கு அழைக்கவே இல்லை. ஒருவித துள்ளலுடனும் சிரிப்புடனும் நடமாடிக்கொண்டிருந்தாள்.


தொடரும்...

சின்ன அத்தியாயம் தான். இருந்தாலும் இவ்வளவுதான் வந்தது. நாளைக்கு மறுநாள் நிச்சயம் ஒரு பெரிய அப்டேட் போடுறன். கருத்திடும் எல்லோருக்கும் நன்றி நன்றி நன்றி!

 

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 33


காலையில் எழுந்ததும் கைப்பேசியை எடுத்துப் பார்த்தான் ரஜீவன். வெறுமையாகவே கிடந்த திரையினால் உண்டான ஏமாற்றம் கோபத்தைக் கொடுக்க அவளின் டிபி நோக்கி ஓடினான். அங்கே, தன் ஸ்டோரியில்,

‘சொன்னது நீதானா
சொல் சொல் சொல் என்னுயிரே
சம்மதம் தானா
ஏன் ஏன் ஏன் என்னுயிரே
ஏன் ஏன் ஏன் என்னுயிரே

இன்னொரு கைகளிலே
யார் யார் நானா
எனை மறந்தாயா
ஏன் ஏன் ஏன் என் உயிரே’ என்கிற வரிகளை வீடியோவா ஏற்றிவிட்டிருந்தாள் யாழினி.

அந்த வரிகள் நெஞ்சுக்குள் புகுந்து குடைச்சலைக் கொடுக்க, குரலில் இழைந்தோடிய சோகம் அவன் உயிரைப் பிசைந்தது. இன்னொரு கைகளில் அவளா? தாடை இறுக ஆத்திரத்தில் கண்கள் சிவந்துபோயிற்று.

வாலிபம் அவளின் கேள்விக்குப் பதில் சொல்லிவிடு என்று உந்திக்கொண்டிருக்க வாழ்க்கையோ வாயை மூடிக்கொண்டு உன் வேலையைப் பார் என்றது. எதன்புறம் இசைவது என்று தெரியாமல் குழம்பித் தவித்தான்.

நிரந்தரமாகவே ஒரு சோர்வு தன்னைப் பற்றிப்பிடித்திருக்கும் உணர்வுடன் எழுந்து கல்லூரிக்குத் தயாராகிக் கீழே வந்தாள் பிரமிளா.

மின்னலாக ஓடிவந்த யாழினி பிரமிளாவின் சேலையை விலக்கி முத்தமிட்டுவிட்டு, “குட்மோர்னிங் செல்லக்குட்டி!” என்று இடையை இறுக்கிக் கட்டிக்கொண்டாள்.

நேற்றைய கணவனின் செய்கை தானாக நினைவில் வர, “அடிதான் வாங்கப்போறாய் யாழி!” என்று பொய்யாக மிரட்டியவளின் முகம் முழுவதும் சிரிப்புப் பரவி படர்ந்திருந்தது.

“அண்ணி! நான் ஒண்டும் உங்கள கொஞ்ச இல்ல. என்ர குண்டுமணியத்தான் கொஞ்சினான். அத தடுக்கிற உரிமை உங்களுக்கு இல்ல சரியோ! பொறாமையா இருந்தா சொல்லுங்கோ உங்களுக்கும் ஒண்டு தாறன்.” அப்போதும் வயிற்றைத் தொட்டு உதட்டில் ஒற்றிக்கொண்டு சொன்னவளை முறைத்தாள் பிரமிளா.

“உண்மையாவே முதுகுல ஒண்டு போடப்போறன். நேரமாகுது ஓடிப்போய்ச் சாப்பிடு!” அவளின் சேட்டைகள் தாங்காமல் துரத்திவிட்டாள்.

மகள் மருமகளின் பேச்சில் உருவான இதமான மனநிலையோடு காலை உணவைக் கொண்டுவந்து மேசையில் வைத்தார் செல்வராணி.

தயாராகி வந்த கணவனுக்கும் யாழினிக்கும் சேர்த்துப் பரிமாறிவிட்டு தானும் போட்டுக்கொண்டு உண்ண ஆரம்பித்தாள் பிரமிளா. அப்போதுதான் தயாரித்த பழரசத்தைக் கொண்டுவந்து அவளின் அருகில் வைத்து, “இதையும் குடியம்மா.” என்றார் செல்வராணி.

உணவை முடித்துப் பழரசத்தை எடுத்துக்கொண்டு, “யாழிய டிரைவிங் ஸ்கூல்ல சேர்த்து விடுங்கோ. காரும் பைக்கும் ரெண்டும் பழகட்டும்.” என்றாள் பிரமிளா கௌசிகனிடம்.

திடீரென்று எதற்கு இந்தப் பேச்சு? தங்கையின் முகம் பார்த்தான் கௌசிகன். அவளின் கண்களில் மின்னிய ஆவல், நீண்டநாள் விருப்பாக அது இருந்திருக்கிறது என்பதை உணர்த்திற்று! தானாகக் கேட்கப் பயந்து சிபாரிசுக்குப் பெரிய இடத்தைப் பிடித்தாளோ? புருவங்கள் சுருங்க பார்வையை இப்போது பிரமிளாவின் புறம் திருப்பினான்.

“அவள் கேக்கேல்ல. நானாத்தான் சொல்லுறன். பதினெட்டு வயசானதுமே நீங்களா பழக்கியிருக்க வேணும். அதைவிட்டுட்டு இப்பவும் யோசிச்சுக்கொண்டு இருந்தா என்ன கதை?”

தன் கடமையைச் செய்யத் தவறிவிட்டதாகச் சொல்லி மண்டையில் குட்டியவளின் பேச்சில் எழுந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு, “கம்பசால வந்ததும் சொல்லு. சேர்த்துவிடுறன்.” என்று தங்கையிடம் சொல்லிவிட்டு எழுந்துபோனான் அவன்.

அதுவரை நேரமும், ‘அண்ணா நிச்சயம் மறுக்கத்தான் போகிறார்’ என்கிற பயத்தில் உறைந்துபோயிருந்த யாழினிக்கு அவனின் சம்மதத்தைக் கேட்டதும் கண்கள் கலங்கிப் போயிற்று. எத்தனை நாள் கனவு. வசதியற்ற வீட்டுப் பெண்கள் கூட லைசென்ஸ் எடுத்து லோனில் ஸ்கூட்டி வாங்கி ஓட்டிக்கொண்டு திரிய இவள் இன்னுமே சைக்கிளைத்தானே வலித்துக்கொண்டிருக்கிறாள்.

இனி எல்லாம் மாறப்போகிறது!

நன்றி அண்ணி என்று சொல்ல நினைத்தாள். சொல்ல முடியாமல் தொண்டை அடைத்துக்கொள்ள உணவுத் தட்டில் முகத்தைப் புதைத்துக்கொண்டாள்.

அப்போது வாசலில் ஸ்கூட்டியைக் கொண்டுவந்து நிறுத்திவிட்டு வந்து,
“சேர், உங்களிட்ட கொண்டுவந்து குடுக்கச் சொன்னவர் அக்கா.” என்றபடி திறப்பை நீட்டினான்.

நன்றி சொல்லிப் பெற்றுக்கொண்டுவிட்டு, “இனி நீ வேலைக்குப் போகவேணும் எல்லா? எப்பிடி போவாய்?” என்று விசாரித்தாள் பிரமிளா.

“வெளில பிரெண்ட் நிக்கிறான் அக்கா. அவனோட போவன். நேரமாகுது வாறன் போயிட்டு!” என்றுவிட்டு, செல்வராணியிடமும் தலையசைத்துவிட்டு வெளியே வந்தவனின் மனதோ சினத்தில் குமுறத் தொடங்கிற்று.

ஒற்றைப் பார்வை பார்த்தாளா? ஒருவன் வந்திருக்கிறான் என்று கூட மதிக்கவேயில்லையே!

சிவனே என்று இருந்தவனின் பின்னால் அலைந்து ஆசை காட்டுவது. சொன்னது நீதானா? இன்னொரு கையில் யார் நானா என்று கேட்டு அவனை உசுப்பி விடுவது. வீட்டுக்கு வந்தால் நிமிர்ந்து ஒரு பார்வை கூடப் பார்க்காமல் உதாசீனம் செய்துவிட்டாளே. எல்லாம் வேசம்! பசப்புக்காரி! வாடி உனக்கு இருக்கு! கருவிக்கொண்டு நண்பனின் பைக்கில் ஏறிக்கொண்டான்.

தான் உணர்ச்சிவசப்பட்டு நின்ற அந்தச் சூழ்நிலையில் அவனை அங்கே எதிர்பாராத யாழினி, அவன் முகம் பார்த்தால் இன்னுமே உடைந்து இதுதான் என்று அவர்களுக்கே முடிவாகிவிடாத ஒன்றை இருப்பதாக வீட்டினருக்குக் காட்டிக்கொடுத்து அவனை மீண்டும் மாட்டி விடுவோமோ என்று பயந்து தலையை நிமிர்த்தாமலேயே தன் அறைக்குள் ஓடி, அப்படியே பல்கலைக்கு நழுவியிருந்தாள்.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
ஹாண்ட் பாக், புத்தகங்கள் சகிதம் வந்த பிரமிளா ஸ்கூட்டியின் திறப்பை எடுக்கப்போக, “கொஞ்ச நாளைக்கு என்னோட வா! ஸ்கூட்டி வேண்டாம்!” என்ற கௌசிகன் அவளின் பதிலை எதிர்பாராமல் காரிலேயே அழைத்துப்போனான்.

அவளுக்கும் சாப்பிட்டது என்னவோ செய்வது போலிருக்க சீட்டில் தலையைச் சாய்த்துக்கொண்டாள். லாவகமாகப் பிரதான வீதியில் காரை மிதக்கவிட்டபிறகு, ஓய்ந்த தோற்றத்தைக் கவனித்துவிட்டு, “ஏலாம இருக்கா?” என்று விசாரித்தான் கௌசிகன்.

அவளிடம் பதில் இல்லை.

தன்னைக் குறித்தான எந்த விடயத்தையும் அவனோடு பகிர்ந்துகொள்ள அவள் எப்போதுமே தயாராயில்லை என்பது புரிந்தது. கடந்த இரண்டு நாட்களாகத் தெரிந்த இளகிய தன்மையும் புதுவரவு அப்போதைக்கு உருவாக்கிவிட்ட மாற்றம்தான் போலும்! ஸ்டேரிங்கில் இருந்த ஒரு கையால் அவளின் கரத்தைப் பற்றி, “என்னோடையும் கொஞ்சம் நீ கதைக்கலாம் பிரமி.” என்றான்.

ஒன்றும் சொல்லாமல் கையை விலக்கிக்கொண்டாள் பிரமிளா. கண்முன்னால் வந்து நின்ற கல்லூரி, சில நாட்களுக்கு முன்னால் அவள் சொன்ன ஒரு சம்மதத்தை நினைவூட்டிவிடத் தொண்டை அடைக்க இறங்கித் தன் வகுப்பை நோக்கி நடந்தாள்.

சற்றுநேரம் போகிறவளையே பார்த்திருந்துவிட்டு காரைக்கொண்டுபோய் மர நிழலின் கீழே நிறுத்தினான் கௌசிகன்.


இவர்கள் எல்லோரும் வெளியேறுவதற்காகவே காத்திருந்த மோகனன் அன்னையிடம் வந்தான்.

“எப்பம்மா கதைக்கப் போறீங்க?”

‘இவன் இதை இன்னும் மறக்கவில்லையா’ என்று அதிர்வுடன் பார்த்தார் செல்வராணி. அந்த நேரத்து ஈர்ப்பில் கதைக்கிறான் என்று நினைத்திருக்க அப்படி இல்லையோ?

“பொறு தம்பி! உனக்கு இன்னும் பொறுப்பு வரேல்ல. அந்தப் பிள்ளைக்குப் படிப்பு முடியேல்ல. அதுக்கிடையில ஏன் அவசரப்படுறாய்? முதல் அண்ணாக்கு உதவியா நிக்கப்பார். அண்ணா அண்ணியோட இந்த நேரம் செலவழிக்க வேணும். குழந்தை பிறக்கட்டும். அதுக்குப்பிறகு…”

“தேவையில்லாம அலட்டாதீங்கம்மா! சொன்னதைச் செய்யத் தெரியேல்ல. சும்மா புத்தி சொல்லிக்கொண்டு..” அவரைச் சொல்லி முடிக்க விடாமல் விருட்டென்று அங்கிருந்து போயிருந்தான் அவன்.

முகம் சிவந்துவிட அப்படியே நின்றுவிட்டார் செல்வராணி. ஆனாலும் அமைதியாகப் போகமுடியாமல் அந்தப் பெண்ணின் பூமுகம் கண்ணுக்குள் வந்து நிற்க, மகனைத் தேடிப்போனார்.

“தம்பி இங்க பார். எல்லாத்துக்கும் முதல் அந்தப் பிள்ளைக்கும் உன்னைப் பிடிக்க வேணும். யோசிக்காம அவசரப்பட்டு எதையும் செய்து போடாத.”

உதட்டோரம் வளைய அன்னையைப் பார்த்தான் அவன். “அண்ணாவும் அவவுக்குப் பிடிச்சுத்தான் கட்டினவரோ?”

பதறிப்போனார் செல்வராணி. எவ்வளவு பெரிய மோசமான முன்னுதாரணத்தைக் கொடுத்துவிட்டான் மூத்தமகன்.

“அண்ணான்ர விசயம் வேற. இது வேற. சும்மா நீ எதையாவது..”

“அம்மா போதும்! போய்ப் பாக்கிற வேலைய பாருங்க. ரெண்டு நாளைக்கு வரமாட்டன். பிரெண்ட்ஸோட வெளில போறன்!” ஒரு பையைத் தூக்கிக்கொண்டு போகிற போக்கில் சொல்லிக்கொண்டே சென்று மறைந்தான் அவன்.

நாட்கள் அதன்பாட்டில் நகர்ந்தன. சொன்னதுபோலவே யாழினியை ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியில் சேர்த்துவிட்டான். வைத்தியரிடம் தானும் கூடவே சென்று தாய் சேயின் நலமறிந்து வந்தான். மாலைகளில் நேரமிருக்கையில் அன்னை வீட்டுக்கும் அழைத்துப்போனான்.

ஒருநாள் வகுப்பு எடுத்துக்கொண்டிருந்த பிரமிளாவுக்கு நிர்வாகியாக அவனிடமிருந்து அழைப்பு வந்தது. அங்கே அன்றுபோலவே அவனோடு காவல்துறை அதிகாரியும் அமர்ந்திருந்து இது எதற்கான அழைப்பு என்று உணர்த்தினார்.

என்றோ ஒருநாள் இது நடக்கும் என்று தெரியும். நடக்காமல் இருந்துவிடாதா மனது மாறிவிட மாட்டானா என்கிற நப்பாசையும் கூடவே தொற்றிக்கொண்டிருந்தது. இல்லை அவன் நினைத்ததை நடாத்தியே முடிக்கப்போகிறான் என்று தெரிந்த இந்த நொடி, எப்போதும்போலவே தன் நம்பிக்கைக்குள் அகப்படாமல் பொய்த்துப்போனவனை வெறித்தாள் பிரமிளா.

அதுவும் நொடிப்பொழுதுதான். ஒருவித அதிர்வு தாக்க அவன் நிமிர்கையிலேயே, “அண்டைக்கே நான் சைன் வச்சிருக்கலாம். தேவையில்லாம நேர்மை நியாயம் எண்டு பேசி உங்களை இழுத்தடிச்சிட்டன். சொறி!” என்றுவிட்டு நின்றநிலை மாறாமல் குனிந்து மேசையில் கிடந்த ஒற்றைகளில் அவர் காட்டிய இடங்களில் எல்லாம் கையொப்பம் இட்டுக் கொடுத்துவிட்டு அங்கிருந்து வெளியேறினாள் பிரமிளா.

அசைவற்றுப்போய் அமர்ந்திருந்தான் கௌசிகன். அவள் பார்த்த பார்வைக்கான பொருளை கலக்கத்துடன் தேடிக்கொண்டிருந்தது அவன் நெஞ்சம். “மிச்சத்தை இனி நான் பாத்துக்கொள்ளுவன் சேர். எதைப்பற்றியும் யோசிக்காம நீங்க நிம்மதியா இருக்கலாம்.” என்றவர், அவனின் கவனம் முழுவதுமாகத் தன்னிடமில்லை என்று உணர்ந்து விடை பெற்றுக்கொண்டார்.


தொடரும்…


எப்பவும் போல சொன்னதுபோல அத்தியாயம் போடா முடியேல்ல. அதற்காய் மன்னிக்க வேண்டுகிறேன்… கருத்திட்ட எல்லோருக்கும் மனம் நிறைந்த நன்றி நன்றி!
 

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 34


எதையும் தருவித்து அருந்தவோ உண்ணவோ பிடிக்காமல் கல்லூரியின் சிற்றுண்டிச் சாலையில் ஒருமூலையாகத் தனிமையில் அமர்ந்திருந்தாள் பிரமிளா.

எல்லாமே முடிந்து போயிற்று. இனி இதைப்பற்றி நினைக்கவே கூடாது என்று ஒவ்வொரு முறையும் நினைத்துக் கொண்டாலும், நியாயம் கிடைக்காமல் அநியாயமாக அடங்கிப்போன வலி, நெருஞ்சி முள்ளாய் நெஞ்சைத் தைத்துக்கொண்டே இருந்தது.

மாணவிகளோ ஆசிரியர்களோ இல்லை பெற்றோர்களோ அவர்களாக வந்து அவளிடம் கேள்வி கேட்கப்போவது இல்லைதான். ஆனால், அவளின் மனதே கேட்குமே! நீ இந்தக் கல்லூரிக்கு நியாயம் செய்யவில்லை என்று சொல்லுமே!

வீட்டில் இளகிய முகம் காட்டினாலும் தான் நினைத்தவற்றை நடாத்தி முடிப்பதில் எந்தத் தயவு தாட்சண்யமும் காட்டாத கணவனின் குணம் அவளை மிகவுமே வருத்திற்று! அவன் இப்படித்தான் என்று தெரியாமலில்லை. ஆனாலும், நல்லது செய்துவிடமாட்டானா தன் மனம்போல் நடந்துவிடமாட்டானா என்று குட்டியாய் உள்ளுக்குள் எதிர்பார்க்கும் மனதை என்ன செய்ய?

“ரெண்டு கோப்பிக்கு சொல்லுறன் மிஸ்…” அந்தக் குரலில் சிந்தனை கலைந்து திரும்பிப் பார்த்தாள். சசிகரனைக் கண்டதும் கண்களை எட்டாத முறுவல் ஒன்று தானாக மலர, “எனக்குப் பழச்சாறு இருந்தா சொல்லுங்கோ சேர்.” என்றாள்.

தன்னைப்போலவே அவளும் ஒரு கோப்பிப் பிரியை என்று தெரிந்திருந்தவன் விழிகளை வியப்பாக விரித்தான். “என்ன மிஸ் புதுசா? இப்பிடி திடீரெண்டு கோப்பியை கைவிட்டா அது கவலைப்படாதா?”

“அடிக்கடி கோப்பி குடிக்கிறது குழந்தைக்கு அவ்வளவு நல்லமில்லையே சேர்?” தன் ரகசியத்தைப் பகிரும் கூச்சமும் சிரிப்புமாகச் சொன்னவளை முதலில் புரியாமல் நோக்கிவிட்டு உடனேயே கண்களை அகலமாக விரித்தான் அவன்.

“மிஸ்ஸ்ஸ்… சொல்லவே இல்ல பாத்தீங்களா? எண்டாலும் மனம் நிறைந்த வாழ்த்துகள். கையத்தாங்க எனக்குநல்ல சந்தோசமா இருக்கு!” என்று அவளின் கரம் பற்றித் தன் வாழ்த்தைத் தெரிவித்தான்.

கேட்டதுபோலவே அவளுக்குப் பழச்சாறையும் தனக்குக் கோப்பியையும் எடுத்துக்கொண்டு வந்து அவளின்முன்னே அமர்ந்துகொண்டான்.

“என்னடா மிஸ் வாட்டமா தெரியுறாவே எண்டு யோசிச்சன். இப்பதானே விசயமே விளங்குது.” என்றுவிட்டு, இப்போது எத்தனை மாதம், அவளின் நலன் குழந்தையின் நலன் என்று அவன் விசாரித்தபோது முழுக்கவனம் இல்லாமல் பதில் சொன்னவளின் முகம் என்னவோ சரியில்லை என்று தெரிந்தது.

“என்ன மிஸ்? சந்தோசமா இருக்கவேண்டிய இந்த நேரத்தில எதைப்பற்றி யோசிக்கிறீங்க? என்னட்ட சொல்லலாம் எண்டா சொல்லுங்கோ.” என்றான் இதமான குரலில்.

அவன் முகம் பார்க்கமுடியாமல் பழச்சாறு இருந்த குவளையின் விளிம்பை வருடியபடி, “நான் கேஸ வாபஸ் வாங்கிட்டன் சசிசேர்.” என்றாள்.

அவனிடமிருந்து பதிலற்றுப்போக அவளுக்கு நெஞ்சுக்குள் அடைத்தது. நல்ல நண்பன். சக ஆசிரியன். எப்போதும் அவளுக்குத் தோள் கொடுப்பவன். அவன் தன்னைத் தவறாக எண்ணுகிறானோ என்று கலங்கி நடந்தவற்றை முழுவதுமாகப் பகிர்ந்தாள்.

“நடந்து முடிஞ்ச விசயத்துக்கான நியாயமா இந்தப் பள்ளிக்கூடத்தின்ர எதிர்காலமா எண்டு வரேக்க ரெண்டாவதைத்தான் என்னால தெரிவுசெய்ய முடிஞ்சது சேர். ஆனா.. இப்ப யோசிச்சா.. நானும் பிள்ளைகளுக்கு நியாயமா நடக்க இல்ல தானே..” என்றாள் கசந்த முறுவல் ஒன்றுடன்.

மறுத்துத் தலையசைத்தான் சசிகரன். “ஒருகாலமும் உங்களால அப்பிடி நடக்கவே ஏலாது. அதுதான் நீங்க. எவ்வளவு பெரிய விசயத்த சாதிச்சு இருக்கிறீங்க எண்டு உங்களுக்கு விளங்க இல்லையா மிஸ்? யோசிச்சுப் பாருங்கோ, இவ்வளவு நாளும் படாத பாடெல்லாம் பட்டு எதுக்காக கௌசிகன் இந்தப் பள்ளிக்கூடத்தைத் தன்ர கட்டுப்பாட்டுக்க கொண்டுவந்தாரோ அது நடக்கவே போறேல்ல. உங்கட அப்பா அதிபரா இருந்தாத்தான் நடக்கும் எண்டு நாங்க எல்லாரும் நினைச்ச விசயத்த அவர் இல்லாமையே நடக்க வச்சிருக்கிறீங்க. அப்பிடி பாக்கேக்க கௌசிகனுக்குத்தான் பெரும் தோல்வி.”

அப்போதும் அவளின் முகத்தில் தெளிவின்மை தெரிய, “எனக்கு விளங்குது. சில கசப்பான சம்பவங்கள் நடந்ததுதான். பிள்ளைகள் வருந்தினவே தான். அதுக்கு ஒண்டும் செய்ய ஏலாது மிஸ். எங்களால தடுத்திருக்கக் கூடியத நாங்க தடுக்காம விட்டிருந்தா மட்டும் தான் கவலைப்பட வேணும். இதெல்லாம் எங்களையும் மீறி நடந்தது. சில விசயங்களைச் சாதிக்கிறதுக்கு இன்னும் சில விசயங்களைக் கடந்துதான் போகவேண்டி இருக்கு.” என்றான்.

அவன் சொல்வது உண்மைதான். ஆனால், இலவசக்கல்லூரி இலவசமாகவே இயங்குவதற்காக ஒன்றை இழப்பது என்பது எந்தவிதத்தில் நியாயம்? அவனுக்குக் கௌசிகன் யாரோ ஒருவன். அவளுக்கு? தன் கணவன் தனக்கும் கல்லூரிக்கும் நியாயம் செய்யவில்லை என்பது உண்மைதானே? குற்றம் ஒன்றுக்குத் தண்டனை கிடைக்கவிடாமல் செய்து அதற்கு அவளையும் கூட்டுச் சேர்த்திருக்கிறான்.

சசிகரனுக்கும் அவளின் மனதின் குமைச்சல் விளங்காமல் இல்லை. கூடவே அவளாகவே அதிலிருந்து வெளியே வந்து விடுவாள் என்றும் தெரியும். அதற்குமேல் அதைப்பற்றிப் பேசப் பிடிக்காமல், “என்ர பிரியமான தோழி அம்மாவா பதவி உயர்வு பெற்றிருக்கிறா. சோ நான் அதைக் கொண்டாடுற மூட்ல இருக்கிறன். பசிக்குது மிஸ் சாப்பாடு வாங்கித் தாங்க!” என்றான்.

நடந்தவற்றை அவனிடம் பகிர்ந்ததே அவளைப் பெருமளவில் ஆற்றுப்படுத்தியிருக்கக் கேட்டதை வாங்கிக்கொடுத்து அவன் உண்டதும் அடுத்த வகுப்பை நோக்கி நடந்தனர் இருவரும்.
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
அன்று கௌசிகன் வீடு வந்து சேர்வதற்கு இரவு எட்டு மணியைத் தாண்டியிருந்தது. அறைக்குள் நுழைந்ததுமே மென் ஊதா நிறத்தின் மீது மல்லிகைகளைத் தூவி விட்டாற்போன்ற முழுநீள நைட்டியில் அமர்ந்திருந்து கல்லூரி வேலைகளில் ஈடுபட்டிருந்த பிரமிளாவைத்தான் கண்கள் தேடிப்பிடித்துத் தேங்கி நின்றது.

அவன் வந்ததை உணராமல் இருக்கச் சாத்தியமில்லை. இருந்தும் அசையாமலிருந்து தன் வேலையிலேயே கவனமாக இருப்பதாகக் காட்டிக்கொண்டவளை எப்படி அணுகுவது என்று சில கணங்கள் யோசித்துவிட்டு மெல்ல அவளருகில் சென்று நின்றான்.

தான் தன் கணவனாலேயே அசையமுடியாமல் கட்டிப்போடப்பட்டு இருக்கிறோம் என்பது அவளுக்கு மிகுந்த மனவுளைச்சலை உண்டாகியிருக்கும் என்று உணர முடிந்தது. எப்படியாவது அவளைத் தேற்றிவிடு சமாதானம் செய்துவிடு என்று மனம் உந்திற்று. எப்படி? வழி தெரியாது மெல்ல பேச்சை ஆரம்பித்தான்.

“சாப்பிட்டியா?”

எதையோ குறிப்பு எடுத்துக் கொண்டிருந்தாள் பேனையை மேசையில் போட்டுவிட்டு எழுந்துபோக முனைய முன்னே வந்து நின்று மறித்தான் கௌசிகன்.

வேகமாக முகத்தைத் திருப்பிக்கொண்டாள் அவள்.

“சாப்பிட்டியா எண்டு கேட்டனான்.” அவளின் முகத்திருப்பல் சுட்டுவிட்டதில் கேள்வி அழுத்தம் திருத்தமாக வந்தது.

“இவ்வளவு நேரத்துக்குப் பிறகும் நான் ஏன் சாப்பிடாம இருக்க?” அந்த அழுத்தம் அவளையும் உசுப்பிவிடப் பதிலும் சூடாகவே வந்தது.

“நீ முதல் என்ன பார்!”

அவன் சொன்னதைச் செய்யாது அவனைச் சுற்றிக்கொண்டு போக முனைந்தவளின் கையை எட்டிப் பற்றினான் கௌசிகன். அதற்கு விடாமல் விருட்டென்று கையை இழுத்துக்கொண்டு இரண்டடி விலகி நின்றாள் அவள்.

அதுவரை நேரம் காத்துவந்த நிதானம் பறந்துவிட அவளை நெருங்கி வலுக்கட்டாயமாக அவளின் கைகள் இரண்டையும் பற்றிக்கொண்டு, “என்னைப் பார் பிரமி!” என்றான் அதட்டலாக.

அப்போதும் கைகளை விடுவித்துக் கொள்ள மட்டுமே முயன்றவளின் செயல் அவனை மிகவுமே தாக்கிற்று!

“இந்த அலட்சியம் உனக்கு நல்லதுக்கில்ல!” என்றவனின் எச்சரிக்கையில், விலுக்கென்று நிமிர்ந்தவளின் விழிகளில் அனல் பறந்தது.

“என்ன செய்வீங்க? சொல்லுங்க! அப்பிடி என்ன செய்வீங்க? அடிப்பீங்களா? இல்ல கட்டிவச்சுக் கொடுமை செய்வீங்களா? இவ்வளவு காலமும் நீங்க செய்ததோட ஒப்பிடேக்க அது ஒண்டும் பெரிய வலிய தரப்போறேல்ல!”

அவளின் சீற்றத்தில் ஒருகணம் திகைத்து நின்றுவிட்டான் அவன். சமாதானம் செய்ய நினைத்து ஆரம்பித்து பாதையே மாறிப்போனதை அப்போதுதான் உணர்ந்து நிதானித்தான். அவளின் கைகளை விட்டுவிட்டு நிதானமாகத் தன்னை விளக்க முயன்றான்.

“நீ சம்மதிச்ச பிறகுதானே எல்லாம் நடந்தது பிரமி.”

“சம்மதிக்க வச்சது ஆரு?” என்று அடுத்த நொடியே சீறினாள் பிரமிளா. “செய்றதை எல்லாம் செய்து போட்டு நல்லவனுக்கு நடிக்கிறீங்க. முதல் உங்களிட்ட வந்து ஏதாவது கேட்டனானா? புதுசா வந்து விளக்கமெல்லாம் சொல்லுறீங்க. பார்த்த முதல் நாளே உன்ன அழிச்சுப்போடுவன் சொன்ன ஆள்தானே நீங்க. அதைத்தானே கொஞ்சம் கொஞ்சமா செய்றீங்க. பிறகும் என்ன?” என்றவளின் பேச்சில் அதிர்ந்து நின்றுவிட்டான் கௌசிகன்.

அன்றைக்கு, ‘யாரோ ஒருத்தி’ தன் திட்டங்களை எல்லாம் தவிடுபொடியாக்க முனைகிறாள் என்கிற கோபத்தில் சொன்னான் தான். அதற்கென்று இன்றைக்கும் அப்படி நினைப்பானா என்ன? ஏற்றுக்கொள்கிற சில கடமைகளும் பொறுப்புகளும் எல்லோருக்கும் நல்லவனாக இருக்க விட்டுவிடுவதில்லையே! ஆனால், காயப்பட்டு நிற்கிறவளிடம் என்ன சொல்லித் தேற்றுவான்?

அன்று அவனிடமிருந்து விலகியவள் தான். அதன் பிறகு மாறவே இல்லை. தாய்மை அடைந்ததில்உண்டாகியிருந்த அந்த மெல்லிய இளகல் தன்மை மறைந்து போயிற்று. அவனை எதிர்கொள்கிற ஒவ்வொரு பொழுதுகளிலும் முகத்தில் மிகுந்த இறுக்கத்துடனேயே எதிர்கொண்டாள்.

யாழினிக்கு ரஜீவனின் மாற்றம் குழப்பத்தை உண்டாக்கிற்று. அன்று அண்ணியின் வீட்டில் வைத்து அவன் ஒன்றும் காதலைச் சொல்லிவிடவில்லை தான். என்றாலும், அவனுக்கும் தன்னைப் பிடித்திருக்கிறது என்று மனது உணர்ந்ததே. அது பொய்யா? அதன்பிறகு பலமுறை அண்ணி வீட்டில் வைத்துக் கண்டிருக்கிறாள். அப்போதெல்லாம் அவளைப் பார்ப்பதையே முற்றிலுமாகத் தவிர்த்தவனை எண்ணி மிகவுமே கவலையுற்றாள். அதற்கிடையில் அப்படி என்ன நடந்தது?

அது தெரியாதபோதும் தன் மனதைச் சொல்லிக்கொண்டே இருந்தாள்.

என் இதயம் வந்ததா தன் நிலமை சொன்னதா
இந்தக் காதல் புரியுதா நான் தொலைந்தேன் மீட்டு தா
உன்னை நேசிக்கிறேன் சுவாசிக்கிறேன்
உன் காதல் மட்டும் வேண்டும்மென்று யாசிக்கிறேன்

இப்படிப் புலனத்தில்(வாட்ஸ் அப்) தினமும் பாடல்களை ஏற்றிவிட்டாள். திருமணத்துக்கான வயது அவர்களுக்கு இல்லை. ஆனால், என்றைக்கும் நான் மாறமாட்டேன் உனக்காகவே காத்திருக்கிறேன் என்பதை உணர்த்திக் கொண்டே இருந்தாள்.

பிரமிளாவுக்கு ஐந்தாம் மாதம் தொடங்கியிருந்தது. அந்த வயிற்றோடு சேலையைக் கட்டிக்கொண்டு கல்லூரியில் எட்டு மணி நேரங்கள் பாடமெடுத்துவிட்டு வருவதற்குள் முற்றிலுமாகவே களைத்துப் போய்விடுவாள். அதற்கு இதமாகச் சத்தான உணவுகளையும் முறையான ஓய்வையும் கொடுத்து அவளை நன்றாகப் பார்த்துக்கொள்வார் செல்வராணி.

தன்னோடு அவள் முகம் கொடுத்துப் பேசுவதில்லை என்று தெரிந்தும், “இப்பிடி உன்னையே வருத்தி படிப்பிக்கவேணும் எண்டு கட்டாயமில்லை பிரமி. இப்ப நிண்டுட்டு பிள்ளை பிறந்தபிறகு வேலைக்குப்போ!” என்று அவன் அழுத்திச் சொல்லியும் காதிலேயே விழுத்தவில்லை.
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
அன்றும் கல்லூரியால் வந்து நன்றாக உறங்கிப் போயிருந்தவளை கீழிருந்து வந்த குரல்கள் தான் எழுப்பியது. அதுவும் யாழினி அழுவது போல் தெரிய எழுந்து முகம் கழுவிக்கொண்டு கீழே வந்தாள்.

கௌசிகனும் அங்கே இருப்பதைக் கண்டு ஆச்சரியமாயிற்று.

மாமியாரிடம் என்னவென்று விசாரித்ததில், கம்பஸில் யாரோ மூன்றாமாண்டு மாணவன் பிரச்சனை கொடுக்கிறானாம் என்று கலக்கத்துடன் பகிர்ந்துகொண்டார் அவர்.

“நீ ஒழுங்கா இருந்திருக்க எவனாவது வாலாட்டி இருப்பானா? பிரண்ட்ஸ் எண்டு சொல்லிக்கொண்டு ஊர்சுத்துறது. கடை கடையா ஏறி மணிக்கணக்கா சாப்பிடுறன் எண்டு சொல்லிக்கொண்டு பல்லை காட்டுறது. இதுக்குத்தான் அண்ணா, ட்ரைவிங் இப்ப தேவையில்லை எண்டு சொன்னனான். கேக்காம நீங்கதான் பழக்கிவிட்டீங்க. இவள் ஸ்கூட்டில பெட்டையலோட சேர்ந்து கூத்தடிச்சிருப்பாள். அவனுக்குக் கண்ணுக்க குத்தியிருக்கும். சொல்லு, அவன்ர பெயர் என்ன? எங்க இருக்கிறான். யாரின்ர தங்கச்சியோட சேட்டை விட்டிருக்கிறான் எண்டு காட்டுறன்!”

அதிர்ந்துபோனாள் பிரமிளா. கூடப்பிறந்த தங்கை குறித்தான இவர்களின் எண்ணப்போக்கு எவ்வளவு மோசமாக இருக்கிறது? ஒருவித திகைப்புடன் கணவனைப் பார்க்க, அவன்தான் மோகனனை விசாரிக்க விட்டுவிட்டுக் கேட்டுக்கொண்டு இருக்கிறான் என்று, யாழினியின் மீதே படிந்திருந்த அவனுடைய கூர் விழிகள் உணர்த்திற்று!

ஒருவித ஆத்திரம் பொங்க, “அண்ணனும் தம்பியும் அவளை நிம்மதியா படிக்க விடாம செய்யப் போறீங்களா?” என்று கணவனை நோக்கிக் கேட்டாள் பிரமிளா.

விசாரணை நடந்துகொண்டிருக்கையில் இடையில் தலையிட்டுப் பேசியது பிடிக்கவில்லை என்பதை உணர்த்தும் புருவச் சுளிப்புடன் அவளைப் பார்த்தான் கௌசிகன். மோகனனுக்குப் பற்றிக்கொண்டு வந்தது. ஆண்களின் விசயத்தில் பெண்கள் தலையிடுவது அந்த வீட்டில் அனுமதிக்கப்படாத ஒன்று! தமயனுக்கு முன்னால் அவளிடம் எதையும் காட்டிக்கொள்ள முடியாமல் அடக்கிக்கொண்டு நின்றான்.

“அவள் அந்தக் கம்பசில இன்னும் மூண்டு வருசம் படிக்கவேணும். இப்பவே ரெட் மார்க் ஆனா சும்மா எல்லாருக்கும் காட்சிப் பொருளாகவேண்டி வரும்.”

“வரட்டும்! இவளின்ர கைய பிடிச்சவன்ர கையவே உடச்சு எறியிறன். அப்பதான் இனி எவனும் வாலாட்ட மாட்டான். எங்கட தங்கச்சியோட சேட்டை விட்டா என்ன நடக்கும் எண்டு தெரிய வேண்டாமா?” என்னவோ உலகத்தில் இல்லாத தங்கையை வைத்திருப்பதுபோல் துள்ளினான் மோகனன்.

பிரமிளாவுக்கு அவனின் இந்தக் கோபம் தங்கை மீதான பாசமாகப் படவில்லை. மாறாக, ஊருக்குள் தன் பலத்தைக் காட்டுவதற்குக் காத்திருந்து சிறிதாக ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததும் அதைப் பயன்படுத்துவது போல்தான் தோன்றிற்று.

கணவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “என்ன நடந்தது எண்டு முழுசா சொல்லு யாழி!” என்றாள் பிரமிளா.

அன்றைக்குக் காதலைச் சொன்னவன் அடிக்கடி அவளிடம் வந்து யோசித்தாயா என்று கேட்டுக்கொண்டே தான் இருந்தான். இன்று எந்தப் பிசாசு அவனுக்குள் புகுந்ததோ, அவனைக் கடந்து ஓடிவர முயன்றவளின் கையைப்பற்றி, பதில் சொல்லியே ஆகவேண்டும் என்றுவிட்டான். பதறிப் பயந்து கையை இழுத்துக்கொண்டு ஓடிவந்தவளுக்கு அழுகையை அடக்கவே முடியாமல் போயிற்று. அன்னையிடம் சொல்லிக்கொண்டு இருக்கையில் அது மோகனனின் காதில் விழுந்திருந்தது.

“ஆக, உனக்கு இப்பவும் எங்களிட்ட சொல்லுற எண்ணம் இருக்கேல்ல என்ன?” என்ற பெரிய தமையனின் குரலில் அவளின் மேனி வெளிப்படையாகவே நடுங்கிற்று. வார்த்தைகள் வராமல் அன்னையையும் அண்ணியையும் பயத்துடன் பார்த்தாள்.

“அங்க என்ன பார்வை! என்னைப் பார்!”

“கடவுளே.. ஏன் அவளைப்போட்டு இப்பிடி அதட்டுறீங்க? மெல்ல விசாரிங்கோவன்.” அதற்குமேல் பொறுக்கமாட்டாமல் அவளைத் தன்னுடன் சேர்த்து அணைத்துக்கொண்டாள் பிரமிளா.

அதுவரை நேரமும் நட்டநடு ஹாலில் குற்றவாளியாகத் தனியாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தவள் பிரமிளா அணைத்துக்கொண்டதும் முற்றிலுமாக உடைந்தாள்.

“எனக்குப் பயமா இருந்தது அண்ணி. ரஜீவனுக்கு மாதிரி அவனையும் அடிச்சுப்போடுவினம் எண்டு. அதுதான் சொல்ல இல்ல..” தமையனின் கேள்விக்கு அண்ணியிடம் பதில் சொன்னாள் அவள்.

ஆக, எல்லாவற்றுக்கும் தானே காரணமாக இருந்துவிட்டு அவளை அதட்டுவது! இவனை.. சினம் வந்தாலும்அடக்கி யாழினியிடம் திரும்பினாள்.

“முதல் நீ என்னத்துக்கு அழுகிறாய்? அவனுக்கு முன்னாலையும் அழுதியா?” என்றாள் கண்டிக்கும் குரலில்.

எப்போதுமே அவளுக்குப் பக்கபலமாக இருப்பவள் அண்ணிதான். அந்த அண்ணியே கோபம் காட்டவும் இன்னும் கண்ணீர்தான் வந்தது.

“பயம் வந்தா அழுகை வரும் தானே அண்ணி.”

“பயம் வந்தா அழுகை வரும்தான். ஆனா பயம் ஏன் வருது. அவன் விரும்புறன் எண்டு சொன்னா எனக்கு இன்ட்ரஸ்ட் இல்லை எண்டு சொல்லவேண்டியது தானே. நீ முதல் அதைச் சொன்னியா?”

அச்சத்துடன் பார்வை தமையனிடம் சென்றுவர இல்லை என்று தலையாட்டினாள். நொடியில் அவனின் உடல்மொழியில் உண்டான கடுமையில் பிரமிளாவின் பின்னே மறைந்தாள் சின்னவள். பார்வையாலேயே அவனை அடக்கி விட்டு, அவளை முன்னே கொண்டுவந்து, “ஏன்? உனக்கும் அவனில..” என்று இழுத்தாள் பிரமிளா.

“ஐயோ அண்ணி இல்ல இல்ல.. எனக்கு அவனுக்குப் பதில் சொல்லவே பயமா இருந்தது. அதுதான் அவன் நிக்கிற பக்கமே போறேல்ல. இன்றைக்குப் பிடிச்சிட்டான். பதில் சொல்லப்போறியா இல்லையா எண்டு கேட்டு அதட்டினவன்.”

“அப்பயாவது சொன்னியா?”

“இல்ல.. ஓடி வந்திட்டேன்.” தலை தானாக நிலம் பார்க்க உள்ளே போன குரலில் சொன்னாள்.

“அப்ப அவனில பிழை இல்ல. உன்னிலதான் பிழை.”

“அண்ணி..?” அதிர்ந்துபோய்ப் பார்த்தவளின் விழிகளில் இருந்து கண்ணீர் கோடாக இறங்கிற்று.

“அவன் ஒரு கேள்வி கேட்டவன். அதுக்கான பதிலை நீ சொல்லி இருக்கோணும். அதுக்குப் பிறகும் அவன் வந்தாத்தான் பிரச்சனை.”

“பதில் சொல்லாம போனா விருப்பம் இல்லை எண்டு அர்த்தம் அண்ணி.”

பிரமிளா இல்லை என்பதுபோல் மறுப்பாகத் தலையை அசைத்தாள். “இழுத்தடிக்கிறாள் தனக்குப் பின்னால சுத்தவைக்கிறாள் எண்டுற அர்த்தமும் வரும்.” என்றாள் நிதானமாக.

“என்ன அண்ணி இப்பிடி சொல்லுறீங்க?” அண்ணியே தன்னை விளங்கிக்கொள்ளவில்லையா என்கிறவேதனையோடு கேட்டாள் சின்னவள்.
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
“முதல் நீ அழுறதை நிப்பாட்டு. நாளைக்கு நீயே அவனைத் தேடிப்போய் எனக்கு விருப்பம் இல்லை. நான் படிக்கோணும் என்னை டிஸ்டப் பண்ணாதீங்கோ எண்டு அவன்ர கண்ணைப் பாத்துச் சொல்லுறாய். அதுக்குப்பிறகு அவன் ஏதும் தொந்தரவு தந்தா அப்ப பாப்பம்.” என்றாள் முடிவுபோல்.

மோகனன் சினத்துடன் என்னவோ சொல்ல வரவும் பார்வையாலேயே அடக்கினான் கௌசிகன். இத்தனை நேரமாக அண்ணனும் தம்பியுமாக அதட்டியும் வரவழைக்க முடியாமல் போன விடயத்தை வந்த ஒற்றை நொடியில் வெளியே கொண்டுவந்து விட்டாளே அவன் மனைவி. மெல்லிய வியப்புடன் அவளை கவனித்திருந்தான் கௌசிகன்.

கோபத்துடன் அங்கிருந்து எழுந்துபோனான் மோகனன்.

“நாளைக்கு அவனை நீயே தேடிப்போய்ச் சொல்லிப்போட்டு என்ன சொன்னவன் எண்டு வந்து சொல்லு. சரியோ? இப்ப போ! போய் முகத்தைக் கழுவிப்போட்டு பாக்கிற வேலையைப் பார்! இதெல்லாம் ஒரு விசயம் எண்டு இதையே யோசிச்சுக்கொண்டு இருக்கிறேல்ல.” என்று அவளை அனுப்பிவிட்டு கணவனை நோக்கியவளின் விழிகளில் கோபம் மிகுந்திருந்தது.

“வீட்டுல இருக்கிற பொம்பிளை பிள்ளைக்கு ஒரு பிரச்சினை எண்டதும் வெட்டுறன் குத்துறன் எண்டுவெளிக்கிடுறதை விட்டுட்டு அவளே அதை எப்பிடி ஹாண்டில் பண்ணுறது எண்டு சொல்லிக் குடுக்கவேணும்.அதைவிட்டுட்டு அவளையே பிழை சொல்லி வீட்டுக்கையே முடக்குவீங்களா? முதல், இதென்ன பேச்சுவார்த்தைகள் பயன்படுத்துறீங்க? ஊர் சுத்துறது, ஒழுங்கா இருக்கிறேல்ல, கூத்தடிக்கிறது எல்லாம் ஒருதங்கச்சிட்ட அண்ணா கதைக்கிற கதையா?


எல்லாத்துக்கும் முதல், மனதில இருக்கிறதை அது சரியோ பிழையோ வீட்டில சொல்லுற அளவுக்கு அவளைக் கதைக்க விடுங்க. அவள் சொல்லுறதையும் கேளுங்க. கூடப்பிறந்த அண்ணனை பாத்தாலே அவளுக்கு நடுங்குது.அந்தளவுக்கு இருக்கு உங்கட செய்கை.” என்னவோ தன் வகுப்பு மாணவனை அதட்டும் ஆசிரியைப்போல் அவனை அதட்டிவிட்டுப் போனாள் பிரமிளா.

அசந்துபோய் அமர்ந்திருந்தான் அவன். அவள் தலையிடாமல் இருந்திருக்க அவனுக்கு வந்த கோபத்துக்கு அந்த அவனை இன்றைக்கு இரண்டில் ஒன்று நிச்சயமாகப் பார்த்திருப்பான். இவளானால், நடந்ததை நொடியில் ஒன்றுமே இல்லாமல் ஆக்கிவிட்டாள். கூடவே அவனையே குற்றவாளியாகவும் மாற்றிவிட்டிருக்கிறாள்.

உதட்டோரம் அரும்பிய சிரிப்புடன் மேடிடத் துவங்கியிருந்த வயிற்றுடன் மாடி ஏறிக்கொண்டிருந்தவளையே பார்த்திருந்தான். எத்தனையோ நாட்களுக்குப் பிறகு அவனின் முகம் பார்த்துக் கதைத்திருக்கிறாள். இல்லையில்லை அதட்டியிருக்கிறாள். ஆயினும் மனம் உல்லாசத்தில் மிதந்தது. அன்னை தன் அறைக்குள் செல்வது தெரிந்ததும் பள்ளிச் சிறுவனைப்போலத் துள்ளி எழுந்து அவளிடம் ஓடினான்.

மகளோடு சேர்ந்து இனி என்னாகுமோ என்று நடுங்கிக்கொண்டிருந்த செல்வராணிக்கு, மருமகள் தலையிட்டுச் சுமூகமாக முடித்தபிறகே மூச்சே வந்தது. இல்லாமல் அவரின் முரட்டு மகன்களை யாராலாவது அடக்க முடியுமாஎன்ன?

அவன் அறைக்குள் வந்தபோது யாருடனோ கைபேசியில் உரையாடிக்கொண்டிருந்தாள் அவள்.

“நீ தலையிடாத தீபன். ஆனா தூர நிண்டு கவனி. யாழி சொன்னதை வச்சு பாத்தவரைக்கும் இவள்தான் பயந்திட்டாள் போல இருக்கு. எண்டாலும் ஒருக்கா கவனி. நல்லா பயந்து போயிருக்கிறாள். இப்ப மட்டுமில்லை எப்பவும்.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தாள்.

“யார் அது?” தனக்குள் பொங்கிய உற்சாகத்தை மறைத்தபடி சாதாரணம்போல் விசாரித்தான்.

“எனக்குத் தெரிஞ்ச பெடியன்.” மொட்டையாகப் பதில் வந்தது.

அது தெரிந்தபோதும் காட்டிக்கொள்ளாமல் பேச்சுக்கொடுத்தான் அவன்.

“பிறகு அவனால ஏதும் பிரச்சனை வராதா?”

அவன் கேட்க வருவது விளங்க, “அவனுக்கும் இவள் தங்கச்சிதான்.” என்றாள் அப்போதும் சுருக்கமாக.

“அது எப்படி அவ்வளவு உறுதியா சொல்லுறாய்?”

“அவனை நல்லா தெரிஞ்ச படியாலதான்.”

பிடிகொடுக்காமலேயே பேசும் அவளை உதட்டில் மலர்ந்த சிரிப்புடன் பார்த்தான். அவன் முகம் பார்க்கமாட்டாளாம். இன்முகமாக ஒரு வார்த்தையேனும் பேசமாட்டாளாம். ஆனால் குட்டுவதற்குச் சந்தர்ப்பம் கிடைத்தால் மாத்திரம் நன்றாகக் குட்டுவாளாம்! இவளை என்ன செய்தால் தகும்?

அவனைக் கண்டுகொண்டாள் பிரமிளா. கைபேசியை மின்னேற்றியில்(சார்ஜரில்) சேர்ப்பித்துவிட்டு அப்படியே அங்கிருந்து நழுவப் பார்க்க கண்கள் சிரிப்பில் மின்ன அவளை எட்டிப் பற்றித் தன்னிடம் கொண்டு வந்தான் கௌசிகன்.

“எப்ப பாத்தாலும் என்னட்ட இருந்து ஓடுறதிலையே குறியா இருப்பியா நீ?” செல்லமாகக் கோபித்துக்கொண்டவனின் விழிகள் மனைவியின் முகத்தில் ஆசையோடு படிந்தது.

அகப்பட்டுக்கொண்டதில் முதலில் திகைத்தாலும் வேகமாகச் சமாளித்து, “விடுங்கோ!” என்று விலக முயன்றவளின் இடையை மெல்ல வளைத்தான். நெற்றியைத் தீண்டி கண்களை முத்தமிட்டுக் கன்னத்தில் நழுவிய அவன் இதழ்கள் தாபத்துடன் கழுத்து வளைவில் பதிந்தது.

“விடுறதுக்கா வளைச்சுப் பிடிச்சனான்?” காதோரம் உதடுகளை உரசவிட்டபடி கேட்டான் அவன்.

இந்தத் தாக்குதலைப் பிரமிளா எதிர்பார்க்கவில்லை. “என்ன செய்றீங்க?” என்று தடுமாறினாள். நிறைய நாட்களுக்குப் பிறகான கணவனின் நெருக்கம் அவளையும் என்னவோ செய்தது.

இதழ்களின் பயணமும் விரல்களின் விளையாட்டும் தன்னிலை இழக்கச் செய்வதை உணர்ந்து, “கௌசி பிளீஸ்!”என்றாள் தன்னை மறந்து.

அவளின் அதரங்கள் அவனுடைய பெயரினை சுருக்கி உச்சரித்தபோது மனம் கிறங்க அவ்விதழ்களைச் சிறை செய்தான் அவன்.

தொடரும்….

கருத்துக் சொல்லும் எல்லோருக்கும் மிக்க மிக்க நன்றி. தனித்தனியா பதில் போட இல்லையே தவிர உங்க எல்லோரினதும் கமெண்ட்ஸ் ஒன்றுவிடாமல் படிச்சுக்கொண்டுதான் இருக்கிறேன். நன்றி நன்றி நன்றி!

அப்பிடியே எங்கட ரோசி அக்கான்ர you tube சேனலையும் நேரம் இருக்கேக்க தட்டிப்பாருங்க. எங்கட ஊர் பலகாரங்கள் சமைக்கும் முறைகள் உங்களுக்கும் அறிமுகமாகும்.

 
Last edited by a moderator:

ரோசி கஜன்

Administrator
Staff member
அத்தியாயம் 35

அடுத்த நாள் பல்கலையில் நடந்தவற்றைப் பற்றித் தீபன் தெரிவித்திருந்தாலும் யாழினியையும் கேட்டுத் தெரிந்துகொண்டாள் பிரமிளா.

“இப்ப பயமில்லையே?”


பளிச்சென்று புன்னகைத்தாள் யாழினி. “இப்பதான் அண்ணி மூச்சே விடக்கூடிய மாதிரி இருக்கு. அவரிட்ட கதைக்கேக்க கைகால் எல்லாம் நடுங்கினதுதான். ஆனா, சொன்னபிறகு பெரிய ரிலீபா இருந்தது. அவரும் சொறி சொன்னவர்.” பெரும் தளையிலிருந்து விடுபட்ட உணர்வுடன் சொன்னவளைப் பார்க்கையில் திருப்தியாக உணர்ந்தாள் பிரமிளா.


“இது உனக்கு ஒரு நல்ல பாடம் யாழி. பயந்து ஓடுறதோ அழுகையோ உன்ர பிரச்சினைக்கு எந்தத் தீர்வையும் தராது. நிண்டு நிதானிச்சு யோசிச்சு ஒவ்வொரு விசயத்தையும் கையாளப் பழகவேணும்.” என்று புத்தியும் சொன்னாள்.


பெரும் பாடமொன்றைக் கற்றுக்கொண்ட தெளிவோடு ஆம் என்று தலையசைத்துவிட்டு, “அப்பிடித்தான் அண்ணாவையும் சமாளிக்கிறீங்களா அண்ணி?” என்று, படக்கென்று கேட்டிருந்தாள்.


மெல்லிய அதிர்வு தாக்க அவசரப்பட்டு எதையும் சொல்லாமல் அவளைப் பார்த்தாள் பெரியவள். சின்னவளுமே அப்படிக் கேட்க எண்ணியிருக்கவில்லை. சங்கடத்தோடு அண்ணி கோபித்துக்கொள்வாரோ என்கிற எண்ணம் உள்ளே ஓடினாலும், “நான் பிழையா கேட்டுட்டேனா தெரியேல்ல அண்ணி. ஆனா, உங்களுக்கு எங்கட வீட்டையும் அண்ணாவையும் பிடிச்சிருக்கோ இல்லையோ தெரியாது. எனக்கு நீங்க என்ர பெரிய அண்ணியா வந்ததுல நிறையச் சந்தோசம். என்ர ரோல் மோடலே நீங்கதான்! ‘எனக்கு எதிரா நிண்டாலும் கூடப்பிறந்த உன்னட்ட இல்லாத நேர்மை அவளிட்ட இருக்கு’ எண்டு அண்ணாவும் ஒருக்கா என்னட்ட சொன்னவர்.” என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டே சிட்டாகப் பறந்திருந்தாள் அவள்.


இத்தனை நாட்களாக வீட்டில் சொல்லவும் பயந்து அவனை எப்படிக் கையாள்வது என்றும் தெரியாமல் மனதுக்குள்ளேயே இருந்து நச்சரித்த ஒரு விடயம் நல்லபடியாக முற்றுப்பெற்றுவிட்டதில் மிகுந்த உற்சாகமாக உணர்ந்தாள் யாழினி. அதன் பிரதிபலிப்பாக,


எனக்கெனப் பிறந்தவன் உண்மையில் நீதானே

உன் முகம் பார்க்கையில் பெண்மையில் தீதானே

கண்களை மூடினால் உன்னுடன் வாழ்ந்தேனே

நீ வரும் வரை நிலவெனத் தேய்ந்தேனே

அன்றாடம் நான்தூங்க அன்பே உன் மடிவேண்டும்

என் தாயின் அன்பெல்லாம் அன்பே நீ தரவேண்டும்


என்று பாடலைப் புலனத்தில் ஏற்றிவிட்டாள். இரண்டு நாட்களாக வெறுமையாகக் காட்சியளித்த அவளின் ஸ்டோரியை தேடிக்கொண்டிருந்த ரஜீவனுக்கும் அப்போதுதான் மனது அமைதியாகிற்று. அவள் மீது மிகுந்திருந்த சினம் கோபமாக உருமாறி இப்போது மனத்தாங்களாக வந்து நின்றிருந்தது.


தன் வீட்டு ஆட்களின் முன் என்னைப் பாக்க மாட்டாளாமா? மதிக்க மாட்டாளாமா? பிறகு எதற்கு ஆசையைத் தூண்டிவிட்டாளாம்? போடி! நீயும் வேண்டாம் ஒண்டும் வேண்டாம்! என்று ஏக்கத்துடன் எண்ணிக்கொண்டான்.


அவர்களுக்கிடையிலான ஏற்றத்தாழ்வுதான் அவனை அவளிடமிருந்து தள்ளி நிறுத்துவதே. அப்படியிருக்கையில் அவளும் அதைக் குத்திக் காட்டுவதைப்போல நடந்துகொண்டது அவனை மிகவுமே பாதித்திருந்தது.

அறைக்கு வந்து சேர்ந்திருந்த பிரமிளாவின் மனது கணவனின் வார்த்தைகளிலேயே சிக்குண்டு நின்றது. நேற்றைய அவனின் நெருக்கமும் இன்று தெரிந்துகொண்ட அவளைப்பற்றிய அவனின் கணித்தலும் மனதிலேயே நின்று அவனையே நினைவூட்டிக்கொண்டிருந்தது.


கைபேசி சத்தமிடவும் சிந்தனை கலைந்து எடுத்தாள். தீபன் எதற்கு அழைக்கிறான்? காலையில் தானே பேசினாள்.


“சொல்லு தீபன்”

"அக்கா.. அது மோகனன் நாலஞ்சு பெடியளோட வீட்டுக்கே போய் அந்தப் பெடியன வெருட்டி(மிரட்டி) இருக்கிறான். அவன்ர அம்மா அப்பா வயசான மனுசர். நல்லா பயந்திட்டினம் போல. அம்மா ஒரே அழுகையாம். அப்பா அடிச்சுப்போட்டாராம். அதுல இவன் நல்லா குடிச்சிட்டு ரோட்டில விழுந்து கிடந்தவன். நல்லகாலம் நாங்க கண்டுட்டோம்.”


அவன் சொன்னதைக் கேட்டுப் பிரமிளாவுக்குத் தலையை வலித்தது. “கடவுளே…” படித்துப் படித்துச் சொன்னாளே. கேட்டானா! வாலிப வயதில் சாதாரணமாகக் கடந்துபோகவேண்டிய எதிர்பாலினத்தின் மீதான ஈர்ப்பை ஒரு விடயமாக்கி அந்தப் பெடியனுக்கு அதை ஆறாத வடுவாக்கிவிட்டானே இந்தப் புத்தி கெட்டவன்!


“இப்ப எங்க அந்தப் பெடியன். பயப்படுற மாதிரி ஒண்டும் இல்லயே?” கவலையோடு விசாரித்தாள்.


“இல்லையில்லை. நடந்ததைச் சொல்லி இனி ஒண்டும் இதைப்பற்றிக் கதைக்கவேண்டாம் எண்டும் சொல்லி அவனை அவன்ர வீட்டிலேயே கொண்டுபோய் விட்டுட்டு வந்திட்டம். அந்த அம்மா அப்பா பாவம் அக்கா. மகன் குடிச்சிட்டு நினைவில்லாம கிடக்கிறத பாத்து ஒரே அழுகை. இனியாவது வேற பிரச்சனைகள் வராம இருக்கிறதுதான் உங்கட மச்சாளுக்கும் நல்லம் அக்கா. இப்பவே இங்க கம்பஸ்ல நிறையப்பேருக்கு விசயம் தெரிஞ்சுபோச்சு. அதுதான்..” என்று, தற்போதைய நிலையைச் சொன்னான் அவன்.


மோகனன் மீது மிகுந்த சினம்தான் வந்தது அவளுக்கு. இனி யாழினியைக் குற்றவாளியைப்போல் பார்ப்பார்கள். அதையே சொல்லி மற்ற மாணவர்கள் சீண்டப் பார்ப்பார்கள். என்னவோ செய்யக் கூடாததைச் செய்துவிட்டதைப்போல ஒதுக்கப் பார்ப்பார்கள். இதற்காகத்தானே கணவனையே பேசாமல் இருக்கச் சொன்னாள்.


“சரி நான் என்ன எண்டு பாக்கிறன். யாழிய கொஞ்சம் இன்னும் கவனமா பாத்துக்கொள்.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தாள்.


யாழினியிடம் இதைப்பற்றிச் சொல்லி எச்சரித்து வைக்க எண்ணி கீழே இறங்கிவர சரியாக மோகனனும் வீட்டுக்குள் வந்தான்.


“அவனை ஒண்டும் செய்யாத எண்டு உனக்கு ஏற்கனவே சொன்னது மோகனன். பிறகும் என்னத்துக்கு வீட்டுக்கே போய் வெருட்டி இருக்கிறாய்?”
 

ரோசி கஜன்

Administrator
Staff member

கேள்வி கெட்டவளை நோக்கி ஏளனமாக உதடு வளைத்துவிட்டு நிற்காமல் நடந்தான் அவன்.


“நில்லு மோகனன்! கேட்ட கேள்விக்குப் பதிலைச் சொல்லிப்போட்டு போ!”


அவளின் அதட்டலில் போனவன் திரும்பி வந்தான்.


“ஹல்லோ! நிப்பாட்டுங்க! என்னையே கேள்வி கேக்கிற வேலை எல்லாம் இங்க வேண்டாம்! விளங்கிச்சா?”


திடீரென்று கேட்ட பேச்சுச் சத்தத்தில் வெளியே வந்த யாழினி மோகனனின் பேச்சைக் கேட்டு அதிர்ந்து நின்றாள்.


பிரமிளாவின் விழிகளில் அனல் பறந்தது. “நான் உனக்கு அண்ணி! ஒழுங்கு மரியாதையா கதைக்கப்பழகு. நீ உன்ர வேலைய பாத்தா நான் ஏன் உன்ன கேள்வி கேக்கப்போறன்?”


திமிர் மிகுந்த உடல்மொழியோடு அவளை ஏளனமாக நோக்கி, “நீங்க முதல் உங்கட வேலைய மட்டும் பாருங்க. அண்ணாவை கட்டிடம் எண்டு எல்லாத்திலையும் தலையிடாதீங்க. இப்பிடித்தான் பள்ளிக்கூட விசயத்திலையும் துள்ளினீங்க. சத்தமே இல்லாம அடக்கினமா இல்லையா? அதேமாதிரி எப்பவும் அடங்கி இருங்க! இல்ல அடக்கவேண்டி வரும்!” என்றுவிட்டு அறைக்குள் புகுந்து கதவை அறைந்து சாற்றினான் அவன்.


ஆத்திரத்தில் உடம்பெல்லாம் நடுங்க அப்படியே நின்றுவிட்டாள் பிரமிளா. முகத்திலேயே அறைந்தது போலிருந்தது. ஆனால் அவனைச் சொல்லி பிழை இல்லையே! இந்தத் தைரியத்தைக் கொடுத்தவன் வேறு ஒருவனாயிற்றே!


யாழினிக்குப் பிரமிளாவின் அருகில் போகவே முடியாமல் நடுங்கிற்று! அந்தளவில் செந்தணலைப்போன்று கோபத்தில் சிவந்து போயிருந்தது அவளின் முகம். என்ன நடந்தது என்று முழுமையாகத் தெரியாமல் விஜிதாவுக்கு அழைக்க அறைக்கு ஓடினாள்.


மாலையில் வீடு வந்த கணவனைச் சற்றும் தணியாத கோபத்துடன் எதிர்கொண்டாள் பிரமிளா.


விடயத்தை அறிந்துகொண்டவன், “அத நீ என்னட்ட சொல்லி இருக்க வேண்டியதுதானே?” என்று அவளைத்தான் குற்றம் சாட்டினான்.


பிரமிளா திகைத்துப்போனாள். இவனுடைய நியாயங்கள் எப்போதுமே தலைகீழானவை தானா? “இப்பவும் உங்களுக்கு அவன் எவ்வளவு பெரிய பிழை செய்திருக்கிறான் எண்டு விளங்க இல்லை. ஆனா நான் கதைச்சது மட்டும் பிழை.”


அதற்கும், “ப்ச்! அவன் சின்னப்பிள்ளை. அவனோட மல்லுக்கட்டிக்கொண்டு நிப்பியா நீ.” என்றுதான் சொன்னான் அவன்.


“ஆரு? உங்கட தம்பி சின்னப்பிள்ளை? ஒரு குடும்பத்தையே குலை நடுங்க வைக்கிறது எல்லாம் சின்னப்பிள்ளை செய்ற காரியம் போல?”


“விடு! இதெல்லாம் ஒரு விசயமே இல்ல. அப்பிடி அவனை அடக்கி வைக்கிறதும் நல்லதுதான். இனி சேட்டை விடமாட்டான் தானே.” என்றான் வெகு சாதாரணமாக.


என்ன சொல்கிறான் இவன்? பிரமிளாவுக்குப் பேச்சே வரமாட்டேன் என்றது. இவனாவது மோகனனைக் கண்டித்து அந்தக் குடும்பத்துக்கு ஏதாவது செய்வான் என்று நினைக்க, அவன் செய்ததே சரி என்பதுபோல் பேசுகிறானே. அதிர்வுடன் அவனை நோக்கினாள்.


அந்தப் பார்வையில் என்ன உணர்ந்தானோ அவளை நெருங்க, வேகமாக விலகி நின்றவளின் விழிகளில் பெரும் சீற்றம்!


“அது சரி! அண்ணா எப்பிடியோ அதப்பாத்துத்தானே தம்பி நடப்பான். அப்பிடியிருக்க அவனைச்சொல்லி பிழை இல்லையே! பள்ளிக்கூட விசயத்துல எப்பிடி அடங்கி இருக்கிறனோ அப்பிடி அடங்கி இருக்கட்டுமாம். இல்லாட்டி அடக்குவானாம்! அவன் சொன்னதும் உண்மைதானே..” என்றவளுக்கு, மேலே பேசமுடியாமல் தொண்டை அடைத்துக்கொண்டது.


அதைக் கேட்டவனின் முகம் இறுகிற்று. அவளின் சீற்றமும் ஏன் என்று புரிந்து போயிற்று.


அவளையும் விடச் சின்னவன். எப்படி அவளிடம் பேசினான். அதற்கு இடம் கொடுத்தவன் இவன் தானே? என்றைக்கு இவனின் கண்ணில் பட்டாளோ அன்றிலிருந்து அவளின் சுயமரியாதை சுரண்டப்பட்டுக்கொண்டே தானே இருக்கிறது. துணைவனாக நின்று காக்கவா போகிறான். இல்லையே! அவன் முன்னே உடைய பிடிக்காமல் விருட்டென்று அங்கிருந்து வெளியேற முனைய, அதற்கு விடாமல் தடுத்துப் பிடித்துச் சமாதானம் செய்தான் அவன்.


“சரி சரி! நான் அவனை என்ன எண்டு கேக்கிறன். நீ சும்மா கவலைப்படாத!” என்றபடி அவளின் முகம் பார்க்க முனைய அவளோ காட்ட மறுத்தாள்.


“நீங்க ஒண்டுமே கேக்க வேண்டாம். பிறகு அண்ணாவுக்கும் தம்பிக்கும் மூட்டிவிட்டுட்டாள் எண்டு அதுக்கும் ஒரு கதை சொல்லவா? என்னை விடுங்க முதல்!” கலங்கிச் சிவந்திருந்த விழிகளில் மின்னிய கோபம் நெஞ்சை அள்ள, “அடியேய் மனுசி. அவன கேக்கிறன் எண்டுதானே சொல்லுறன். நீ கொஞ்சம் அமைதியா இருக்கமாட்டியா?” என்று அதட்டினான் அவன்.


“ப்ச்! நீங்க விடுங்க என்ன!” அவனின் எந்தச் சமாதானமும் எடுபடாமல் விலகி நின்றாள் அவள். “நீங்க கேளுங்க கேக்காம விடுங்க. அது உங்கட பிரச்சினை. ஆனா, நான் ஒண்டும் அடங்கி வாழ இங்க வரேல்ல. உங்களுக்கு மனுசி. அவனுக்கு அண்ணி. அந்த மரியாதை எனக்கு வேணும்! முகத்தில அறையிற மாதிரி கதவை அடிச்சுச் சாத்திப்போட்டுப் போறான். இப்பிடி நடக்கிறது இதுதான் கடைசி முறையா இருக்க வேணும் எண்டு உங்கட சின்னப் பிள்ளையிட்ட சொல்லிவிடுங்கோ!” என்றாள் அழுத்தம் திருத்தமாக அவள்.


முகம் இறுகத் தம்பியைத் தேடிப்போனான் கௌசிகன்.


அவன் வந்த வேகத்திலேயே எல்லாம் தெரிந்துகொண்டுதான் வருகிறான் என்று விளங்க வேகமாக எழுந்து நின்றான் மோகனன். தமையனின் விழிகளில் தெரிந்த சீற்றத்தில் நடுக்கம் பிறக்க தலை தரையை நோக்கிற்று!


“அதென்ன அண்ணிய அடங்கி இருக்கச் சொன்னியாம்? அவள் ஆரு உனக்கு? என்ன கதப்பேச்சு இதெல்லாம்? எனக்கும் அவளுக்கும் ஆயிரம் பிரச்சினை இருக்கும். அத நீ உனக்குச் சாதகமா பயன்படுத்துவியா? தம்பி, சின்னப்பிள்ளை, பொறுப்பு வர இன்னும் காலமிருக்கு எண்டு நினைச்சா என்ன வேலையெல்லாம் பாக்கிறாய் நீ? எனக்கு என்ன மரியாத தாறியோ அதே மரியாதையை அவளுக்கும் குடுக்கோணும்! இந்த வீட்டுல நான் வேற அவள் வேற இல்ல. விளங்கினதா உனக்கு!” தமையன் போட்ட அதட்டலில் தம்பியின் குனிந்திருந்த தலை ஆம் என்பதாக மாத்திரமே ஆடிற்று!


“முதல், அவனை ஒண்டும் செய்யாத எண்டு சொன்னேனா இல்லையா? என்ர சொல்ல மீறி நடக்கிற அளவுக்கு உனக்கு எங்க இருந்து தைரியம் வந்தது? உன்ர போக்கும் வரவர பிழையா இருக்கு மோகனன். சொல்லுக்கேக்காம நீ நடக்கிறது இதுதான் கடைசியும் முதலுமா இருக்கவேணும்.” விரல் நீட்டி தமையன் எச்சரிக்கவும் முகம் கருத்துச் சிறுத்துப் போயிற்று அவனுக்கு.

“சொறி அண்ணா. இனி இல்ல..” என்றான் முணுமுணுப்பாக.

அப்போதும் விடாமல் வாங்கு வாங்கென்று வாங்கிவிட்டு அவன் வெளியே வந்தபோது மோகனனின் முகம் முற்றிலுமாக இரத்தப்பசை இழந்து வெளுத்துப் போயிருந்தது
.
 
Status
Not open for further replies.

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Latest posts

Top Bottom