You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

காதல் காயங்களே...! - Comments

Meera

New member
Super story. Nijamave oru variyila mudika mudiyala, niraiya sollanum pola irukku, ana enna solrathu entrum theriyala, avalavu alka unrvukalai velipaduthi irukireenka, kaathalai velipaduthuvathum sari, valikalai velipadithuvathum sari, valikkana aaruthal tharuvathilum sari vaaskarkalai appadi thirupthi paduthi irukireenka. Intha epi yil ithai maatri irukalam entru solrathuku ontrume illai. Appdiye naankalum kathaiyinil vaalvathj pola oru unarvunka. Super.
 

Sankarvani

New member
நிதாக்கா மற்றும் ரோசி அக்காவிற்கு
வணக்கம்
செந்தூரம் சிறப்புடன் நடைபோடுகிறது. உங்கள் கதை களம் அருமை,சென்ற ஆண்டு ஏப்ரல் முதல் உங்கள் தளம் எனக்கு அறிமுகம். புத்தகத்தில் படிக்கவே மிக்க விருப்பம், ஆதலால் ரமணியம்மாவின் சாயல் தேடி களைத்திருந்த வேளையில் தோழி ஒருவர் உங்கள் கதை பற்றி கூறினார்.விருப்பமின்றியே தளத்தில் எந்தன் உறவுக்கொரு உயிர் கொடு வாசித்தேன்.மனம் நிறைந்தது ,அருமையான எழுத்து.
உங்கள் அடையாளமாய் நீங்கள் கூறும் ஈழத் தமிழ் நடை இனிமை தருவதுடன் அன்பாயினும் கோபமாயினும் அவ்வுணர்வினை மனதில் அழுத்தமாக நீட்டிக்கச் செய்கிறது. பெற்றோர்களாய் வரும் மாந்தர்களின் பக்குவமான அணுகுமுறை பதப்படுத்துகின்றன.பாவை,ஆதிரா இருவரின் தந்தை படைப்பு அருமை.
எவருக்கும் கருப்பு வண்ணமிட்டு எதிர் நிலையில் நிறுத்தாமல் எண்ணங்களே எதிரிகளாய் காட்டி அதனை நேராக்குவது நிதாக்கா உங்களின் மிகுந்த திறமை,
வாசித்துச் செல்ல மட்டுமே எண்ணியிருந்தேன் ,
நீ வாழவே என் கண்மணி படிக்கும் வரை,சொற்கள் தட்டுப்பட வில்லை. கண்கள் குளம் கட்டுகின்றன, முடிவு சுபம் ஆயினும் நெஞ்சம் வலிக்கிறது. எப்படி எங்கிருந்து வார்த்தைகளை கோர்த்துச் செல்கிறீர்கள்.
உங்கள் பணி மேன்மேலும் வளர இறைவனிடம் வேண்டுகிறேன்.
சிறு குறை சில கதைகள் புத்தகமாக கிடைக்கவில்லை.கிடைத்தவற்றை ரமணிம்மாவின் வரிசையில் அடுக்கியயிற்று.
முகமறியாமல் நீளும் உங்கள் நட்புக் கரத்துடன் என்னையும் இணைத்துக் கொண்டேன்.

ரோசி அக்கா உங்கள் கதைகள்
மிக அருமை தேடி தேடி வாசித்தேன். ஒவ்வொரு நாயகியும் தனித்துவம் பெற்றவர்களாக காட்டுவது சிறப்பு. மலருமோ உந்தன் இதயம் காலத்திற்கேற்ற மாற்றமெனினும் அவர்களின் பின் வாழ்வில் எவற்றை எதிர்கொள்ள வேண்டுமோ என நினைத்தேன். மீரா அதற்கு விடை தருகிறது அருமை. நட்சத்திராவினை எதிர்நோக்கியிருக்கிறேன்.
தனுவின் கதைகள் இரண்டும் நன்றாக உள்ளன.கதையினை எழுதுவதற்கு மூன்று நான்கு ஆண்டுகள் ஆகுமா, அதன் சிரமங்களை உணர முடிகிறது. இருப்பினும் இராவணனே என் இராமனாய் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
இன்னும் சில கதைகள் பாதியில் உள்ளனவே தொடருமா தெரிவியுங்கள்.
மிக நீள கருத்திட்டுவிட்டேன்.
(நிதாக்கா புத்தகமாக வராத கதைகள் எவை என கூறி கடைக்காரரிடம் திட்டு வாங்காமல் காப்பாற்றுங்கள்.)பணியிடத்திலும் சரி மனக்கவலையிலும் சரி உங்கள் புத்தகம் எனக்கு தாய் மடியே. நன்றி
 

Chitra ganesan

Active member
Romance ராணி எழுத முடியாமல் சிரமப்பட்டிங்களா?அட கடவுளே!
ஆனால் லாஸ்ட் scene ரொமான்ஸ்.???
கலக்கிட்டீங்க.
கொரனோவை கொண்டுவந்த
உங்க தொலை நோக்கு சிந்தனை நல்ல முயற்சி தான்.
இறுதியில் தீபன் அவளின் அப்பாவிடம் உண்மை சொன்னதும் அவர் கூட நேரம் செலவழித்ததும் நன்று.அவளின் குற்ற உணர்வை நீக்கியவிதம் எல்லாமே நிறைவை கொடுத்தது.
அருமையான கதை.
 

Subamurugan

Well-known member
என்னது கதை முடிஞ்சு போச்சா?.. அப்புறம் 10 நாள் லீவா?.. சும்மாவே என்னால் சும்மா இருக்க முடியாது இதுல கதை ஏதும் இல்லாது போனால் என்ற கதை என்னாகிறது?.. ஆனாலும் அருமையான கதை அற்புதமான வாசிப்பு நேரம் என்று நிறைவாக இருந்தது நிதா நன்றி. சீக்கிரம் ஆரணி வருவாள் என்பதால் சமாதானமாகிறேன்.
 

Bhuvanashree Dathan

Active member
???Nitha sema ponga?...mothama oru week'ku serthu treat thandhutinga?...mayuri deepan kadhal endrum ninaivadukil???....covid-19 incident kadhaiku yetradhupol arumaya use panni irukinga?....matra kadhaikalavida idhula romance nirayave kuduthu irukinga....after marriage romance superp??...waiting for next treat aarani???.....
 
Top Bottom