You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

காதல் காயங்களே

நிதனிபிரபு

Administrator
Staff member
Pop Popநிதனிபிரபுவின் "காதல் காயங்களே"
காயம் செய்பவரே மருந்தாக மாறும் மாயம் காதலில் மட்டுமே. அப்படியான கதைகளம் தான் "காதல் காயங்களே". ஆரம்பம் முதல் முடிவு வரை
அருமையான

கதையாக கொடுத்திருக்காங்க நிதா மா
😍
.
வாழ்த்துகள்

நிதா மா
💐
💐
..
நாயகன் நாயகிக்கு ஏற்படுத்திய காயம் என்ன? அதனால் என்ன மாதரியான வலிகளையும் வேதனைகளையும் அனுபவிக்கிறாள்,
அவன் ஏற்படுத்திய காயத்திற்கு எவ்வாறு மருந்தாக மாறுவான்?
இதையெல்லாம் கதையில் படித்து தெரிந்து கொள்ளவும்
😍
😘
.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
Nathan Shan


நாவல் விமர்சனம்
———————-
நிதனி பிரபு” வின்
“காதல் காயங்களே..!”
ஈழத்து இளம் நாவலாசிரியர்களின் பட்டியலில் தனக்கான தனியிடம் ஒதுக்கி வாசகர்கள் மனங்கவர்ந்த நாயகியாக வலம் வரும் இவரது படைப்புக்களில் அனைத்துமே கனமானவையே..
இதோ.....
கதைப்படி ..தீபனும், மயூரியும் வட பகுதித் தமிழர்கள் .அவர்கள் வேலை செய்வது தென்பகுதியில் , எதிர்பாரத ஒரு சாலை விபத்தில் முதல் சந்திப்பு..நட்பாகி..,காதலாகி..நகரும் வேளையில் ..
மயூரின் தாயின் இழப்பு...அவளை தன்னிலை இழக்கச் செய்கிறது. அவளது தனிமையும் ..வேதனையும் தீபனில் தஞ்சம் கொள்ளச் செய்கிறது. இருவரும் living together வாழ்வு முறைக்குள் .......முறையற்றுப் போன விளைவுகளும் தீர்வுந்தான் கதை...
மயூரி கன்னித் தாயாய் கருசுமக்கிறாள்..தீபன் கலைக்கச் சொல்கிறான்..விதி விடுமா?
மயூரிக்கோ அது கருவல்ல தனது தாய் ..தீபனுக்கோ இரு சகோதரிகளின் கனம் அவன் தலையில் ..விதி அவர்களை திசை மாற்றி இழுத்துச் சென்றது...அவளது கரு மகளாகிப் போனது அவனுக்கு தெரியாமலே.
பத்து வருடப்பிரிவின் பின்னும் இளகாத காதலுடன் ..இணையாகிப் போவதும் தான் கதை.
பிரிவின் துயர் ..காதல்க் காயங்களாய் ..
அழகான கதை நகர்த்தல் ..உயிரூட்டும் வசனங்களால் வனப்புயர்ந்து நிற்கிறது . Romance....romance...romance..,என அலைபவர்களுக்கு நல்ல விருந்து.
ஈழத்து உரை நடையில் ஒரு காதல் காவியம்.ஆவலுடன் வாசிக்கத் தோன்றும் வரிகள்...
கட்டாயம் வாசியுங்கள்.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
suvitha

எப்பவுமே நிதாவின் எழுத்தில் எனக்கொரு தீராத மயக்கம் உண்டு. இந்த கதையில் கூடுதலாகவே மயங்கிப் போனேன்...
அருமையான

கதைக்கரு... காயங்களை தந்தவனே மருந்தும் ஆகிப்போவது காதலில் மட்டுமே நடக்கும் மாயம்... மயூரியின் மனகிலேசத்தை போக்கியது தீபனின் அவளது அப்பாவுடனான நாட்கள்...
அருமையான

முடிவு.அதிலும் தற்போதைய சிக்கலான நாட்களை கதையில் இணைத்தமை
அருமையாக

இருந்தது சகோதரி. "காதல் காயங்களே" என்ற
அருமையான

இந்த நாவலுக்கு நன்றிகள். அடுத்து "அவள் ஆரணிக்காக" ஆவலோடு காத்திருக்கிறேன் நிதா.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
Sri Vr


காதல் காயங்கள்....நிதனி பிரபு.
காதல் என்றாலே காயங்கள் கண்டிப்பாக இருக்கும்.
யாருக்கு என்றால் பொதுவாக பெற்றோருக்கு அதிகமாக இருக்கும்.
இங்கு காதலர்களுக்கு காயம்.
அதுவும் அதிகமான காயம்.ஆறாத காயம்.
இந்த காயம் ஆறி வடுவாக மாறி விடுவது தான் கதை.
இவரது பாணியில் அழகாகவே கொடுத்துருக்கார்.
எனக்கு இவரிடம் பிடித்தது ஒவொவருவர் மன நிலையும் அழகாக எடுத்து சொல்லுவார்.
இந்த கதையிலும் அதை செய்து இருக்கார்.
எனக்கு கோவதை கொடுத்த கதை ரவி வர்மன் கதை.அதிலும் அவங்க அம்மா மீது கோவம் அதிகம் இருக்கும்.
ஆனாலும் அவங்களுக்கும் ஒரு நியாயம் இருக்கும் என்று அவங்க பார்வயை கதையில் கொடுத்துருபங்க.
உணர்வுகளை அழுத்தமாக இவ்வளவு
அருமையாக

உங்களால் மட்டும் சொல்ல முடியும்.
40 ஆண்டுகள் கழித்து உங்கள் கதை பேச படுமா என்றால் இலங்கை தமிழ் படிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு உங்கள் கதை கண்டிப்பாக ஞாபகம் வரும்.
இதிலும் இன்னும் வித்தியாசமான தமிழை பார்க்க முடிகிறது.தேவகி அம்மா பேசியதை நீங்கள் சொன்னது .
இங்கு மதுரை தமிழ் ,கோவை தமிழ் போல் அங்கும் மாவட்டம் ஏற்ப தமிழும் மாறுமோ.
மொத்தத்தில் தீபன் மைய்ய்யு சூப்பர்.
ஆதிரா பேச்சும் tiktak நடிப்பும் இப்போ இருக்கும் தலைமுறையினரை அப்படியே பிரதிபலிக்கிறது.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
sudha Ravi

காதல் காயங்களே! – நிதனி பிரபு
இக்கதையின் தலைப்பு மிக அழகு...காதலில் காயங்கள் இல்லாமல் போகாது. ஆண், பெண் இருவருக்கும் ஏதோ ஒரு விதத்தில் காயம் உண்டாகும். அது காதலின் சாபம் என்றே சொல்லலாம். ஏதோ ஒரு சிலருக்கு மட்டுமே அந்த சாபமில்லாமலும், காயமில்லாமலும் காதல் கை கூடும்.
பெண்மையில் இருந்தே நிதாவின் கதைகளுக்கு ரசிகை நான். தான் முன் வைக்கும் களத்தை மிக அழுத்தமாக மனதில் பதிய வைக்கும் கைவண்ணம் அவரிடம் உண்டு.
கதையின் கரு புதியதல்ல என்றாலும் அதை அவர் கொண்டு சென்ற விதம் அருமை...கதையைப் பற்றி கூறி படிக்க விடாமல் செய்து விட எண்ணமில்லை. பிரதீபனும், மயூரியும் மனதை உரசிச் சென்றார்கள் என்றால் ஆதிரா அழுத்தமாக அமர்ந்து கொண்டாள்.
அனைவரையும் விட என்னை மிகவும் கவர்ந்தவர் பிரதீபனின் அன்னை புஸ்பவதி. மிஸ்டர் கேகே விடம் உரிமையோடு சண்டையிடும் தோழி நந்தினியையும் மிகவும் பிடித்து விட்டது. ஒவ்வொரு காதாபாத்திரத்தின் குணாதிசங்களை இறுதி வரை மாறாது அழகாக கொடுத்திருக்கிறார்.
தங்களின் பிழைகளின் மேல் புதிய வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் போது ஏற்படும் மன குழப்பங்களையும், போராட்டங்களையும் வழக்கம் போல தனது அழுத்தமான வசனங்களாலும், காட்சிகளாலும் திறமையாக கையாண்டிருக்கிறார்.
வெகுநாட்களுக்குப் பிறகு உங்களின் கதையை படிக்கிறேன் நிதா...
அருமையான

கதையை கொடுத்ததற்கு
வாழ்த்துக்கள்

நிதா!
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Latest posts

Top Bottom