You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

திருடிய இதயத்தை திருப்பிக்கொடு கருத்துத் திரி

Archana

New member
Hello Nitha ma'am... i m ur polar fan, usha fan, aparam vera enna ellam irukko avalo periya FAN ..Naan intha story ah erkanave padichiten n it is my most favourite story ever...but I forgot the name n I was searching for soooo long 2 read it again... thedi thedi manda kaanchadudhan micham... But by God's grace unga site la pathathum en feelings ah solla varthai illa...Naan avalo happy...night fulla thoongama padichen till 3... Enna love n enna romance apadiye flat agiten... I m still not able 2 come out of ur story...
Thanks a lot 4 sharing
 

Archana

New member
Enaku hero name, heroine name even story name kooda gnabagam illa but dat Letter from his amamma Chinna Kannapa was d only thing I remembered n I could feel d impact of those words till my soul...appaaaa enna oru pasam peran mela... I literally felt tears in my eyes reading those 2 words... na ithu varaikum entha stories kum comment panathe illa.. but i couldn't resist this time.. na padicha first ilangai tamil storyum ithuthan...ippa thedi thedi ilangai tamil novels ah padikiren.. antha perumaiyum ungalsi than serum...Thanks a million ??
 

Thamizhselvi

Active member
இந்த நாவலை புத்தக வடிவில் நான் பலமுறை படித்து விட்டேன். நளினமான உரையாடல்கள்.வேறு என்ன சொல்ல? அருமை நிதா.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
Hello Nitha ma'am... i m ur polar fan, usha fan, aparam vera enna ellam irukko avalo periya FAN ..Naan intha story ah erkanave padichiten n it is my most favourite story ever...but I forgot the name n I was searching for soooo long 2 read it again... thedi thedi manda kaanchadudhan micham... But by God's grace unga site la pathathum en feelings ah solla varthai illa...Naan avalo happy...night fulla thoongama padichen till 3... Enna love n enna romance apadiye flat agiten... I m still not able 2 come out of ur story...
Thanks a lot 4 sharing
Enaku hero name, heroine name even story name kooda gnabagam illa but dat Letter from his amamma Chinna Kannapa was d only thing I remembered n I could feel d impact of those words till my soul...appaaaa enna oru pasam peran mela... I literally felt tears in my eyes reading those 2 words... na ithu varaikum entha stories kum comment panathe illa.. but i couldn't resist this time.. na padicha first ilangai tamil storyum ithuthan...ippa thedi thedi ilangai tamil novels ah padikiren.. antha perumaiyum ungalsi than serum...Thanks a million ??
ஹாய் அர்ச்சனா,

உண்மையிலேயே எனக்கு மிகவும் நெகிழ்வான தருணம் இது. மிக்க நன்றி! நானுமே உங்களை மாதிரித்தான். என் கதைகளின் தலைப்பே எனக்கு மறந்துபோகும். ஆனால், ஏதோ ஒரு சம்பவம் நம் நெஞ்சில் ஆழமாய் பதிந்துபோயிருக்கும். அப்படி ரமணி அம்மாவின் கதைகள் நிறைய தேடி இருக்கேன். அப்படி என் கதையும் உங்கள் மனதில் பதிந்து இருப்பதில் மிகவுமே சந்தோசம். அதைவிட, இலங்கை தமிழை தேடி வாசிக்கிறேன் என்று சொன்னதற்கு மிக்க மிக்க நன்றி!
 

நிதனிபிரபு

Administrator
Staff member
இந்த நாவலை புத்தக வடிவில் நான் பலமுறை படித்து விட்டேன். நளினமான உரையாடல்கள்.வேறு என்ன சொல்ல? அருமை நிதா.

மிக்க நன்றி தமிழ். புக்கா வேற உங்ககிட்ட இருக்கா? சந்தோசம் தமிழ்.
 

Susi

New member
அவன் காதலின் ஆழத்தை உணரும் ஒவ்வொரு தருணத்திலும் அவள் இப்படித்தான் வாயடைத்துப் போகிறாள்!

“இப்ப எனக்கு எந்த தவிப்பும் இல்ல. என்ர செல்லம் என்னட்டையே வந்திட்டாள்.” என்றவன் பற்றியிருந்த அவள் கரத்தில் மென்மையாய் இதழ் ஒற்றினான்.

கவிந்திருந்த இருளில், கடல்காற்று வீச, அம்மம்மாவின் காலடியில் தன் மனதை அவன் பகிர்ந்துகொண்ட அந்த நொடிகள் மிக அற்புதமானதாய் தோன்றிற்று ஜீவனிக்கு. சுகமாக அவன் தோளில் சாய்ந்துகொண்டாள்.

அவளிடம் காதலை மட்டுமே காட்டும் அவளின் காதலனுக்குள் ஒரு இரும்பு மனிதன் இருக்கிறான். ஒழுக்கம் நிறைந்த உன்னதமானவன் இருக்கிறான். அவனை செதுக்கியது அவனின் அம்மம்மா. அவரின் வழி நடத்தல் எவ்வளவு சிறந்ததாக இருந்தால் இப்படி ஒரு சிறப்பான மனிதன் இந்த சமுதாயத்துக்கு கிடைத்திருப்பான். இப்படியானவனின் சந்ததியும் இவனைப் போன்றவர்களாகவே உருவாக வேண்டும். அது அவளின் கடமை! தன்னால் அது முடியுமா என்று மலைத்துப் போனவள் அம்மம்மாவை பாசத்துடன் நோக்கினாள்.

‘எனக்கும் நீங்க அம்மம்மாதான். எப்பவும் எங்க ரெண்டு பேரோடையும் கூட இருந்து நீங்கதான் எங்களை வழி நடத்தோணும்.’ மனதார அவரிடம் வேண்டிக் கொண்டாள்.

நினைவு வந்தவனாகச் சொன்னான் நிரஞ்சன். “உனக்கு தெரியுமா, எனக்கு மாதிரியே அம்மம்மாவுக்கும் உன்ன மிகவுமே பிடிக்கும்.”

“உண்மையாவா?” ஆச்சரியமாகக் கேட்டாள்.

“ம்! அப்போதெல்லாம் உன்ர கலாட்டாக்களை அன்னம்மா.. அவவின் பேத்தி எல்லாரிட்டையும் கேட்டுக் கேட்டு சிரிப்பா. இந்தக் காயம் நீ தந்ததுதான் எண்டும் அம்மம்மாக்கு தெரியும். அன்றைக்கு இத நான் சொன்னதும் அவா என்னட்ட கேட்ட முதல் கேள்வியே, ‘அவளுக்கு நீ என்ன செய்தாய்? சும்மா உன்ர மண்டைய உடைச்சிருக்க மாட்டாள்’ எண்டுதான்.” என்றான் அன்றைய நாட்களை எண்ணிச் சிரித்தபடி.

அதைக் கேட்டவளுக்கு நெகிழ்ச்சியில் கண்களில் நீர் பூத்தது. அன்றே அவளை நன்றாக புரிந்து வைத்திருந்திருக்கிறார். திரும்பி அவரைப் பார்த்து சொன்னாள், “அம்மம்மா, உங்கட பேரன நான் நல்லா வச்சிருப்பன். நீங்க ஒண்டுக்கும் கவலைப் படாதீங்க.” என்று!

நிரஞ்சன் சிரிக்க அவளோ அவனை முறைத்தாள்.

அவனுக்கோ அவள் கோபத்தை ரசிக்கும் சிரிப்புத்தான் வந்தது எப்போதும்போல. என்ன என்று கேட்க,

“அண்டைக்கு ஏன் என்ன பிடிச்சு தள்ளி விட்டீங்க? இங்க பாருங்க இன்னும் தழும்பு இருக்கு.” என்றவள் தன் முழங்கையை திருப்பிக் காட்டினாள்.

“சாரிடா செல்லம். உனக்கு இந்தளவு அடிபடும் எண்டு நானும் நினைக்கேல்ல. நாங்க குளிக்கேக்க நீ பாத்தியே ஒருத்தன... அவன் அங்க மாடில நிண்டு உனக்கு கல்லால அடிக்க குறி பாத்துக்கொண்டு இருந்தவன். அதுவும் கூரான கல்லு. அவ்வளவு தூரத்துல இருந்து வேகமா வர்ற கல்லு பட்டா நீ தாங்க மாட்டாய் எண்டுதான் ஓடிவந்து தள்ளி விட்டனான். பாத்தா, அதுவே உனக்கு பெரிய காயமா வந்திட்டுது.” என்றவன் அன்று பட்ட காயத்துக்கு இன்று தடவிவிட்டான். அவளும் கையை அதற்கு வாகாக அவனிடம் கொடுத்துவிட்டு அமர்ந்திருந்தாள்.

தடவிக்கொடுத்தவன் அந்த இடத்தில் ஒரு முத்தத்தை பதிக்க அவளுக்கு தேகமெல்லாம் சிலிர்ப்போடியது.

“உனக்கு குளிருது. வா உள்ளுக்கு போவம்.” என்று அவளை அழைத்துவந்தான்.

வீட்டுக்குள் காலடி பட்டதுமே அவளுக்குள் படபடக்கத் தொடங்கிவிட்டது. சமாளித்துக்கொண்டு மெல்ல மாடி ஏறினாள். அவர்களின் அறையின் கதவருகில் சென்றதும் திரும்பி அவளைப் பார்த்தான் நிரஞ்சன்.

தயங்கித் தயங்கி மெல்ல வந்துகொண்டிருந்தாள் அவள்.

இவன் பார்க்க, அவள் பார்வையை திருப்பிக்கொள்ள, இதென்ன திடீர் வெட்கம் என்று புருவங்களை உயர்த்தியவன் விஷயம் பிடிபட்டதுமே சத்தமாகச் சிரிக்கத்தொடங்கினான்.

“நிர..ஞ்ச..ன்!” முறைக்க முயன்றவளும் சிணுங்கிச் சிரிக்க,

“யாரோ வெக்கமெல்லாம் வராது எண்டு சொன்னாங்களே..” என்றபடி அவளை அப்படியே அள்ளிக்கொண்டான்.

“ஐயோ நிரஞ்சன் விடுங்க..” கூச்சத்தில் அவள் நெளிய, அப்படியே அவளை அறைக்குள் கொணர்ந்து கதவை சாத்திவிட்டு அவளை கதவோடு சாத்தி கரங்களால் சிறையிட்டான்.

அடுத்து என்ன செய்யப் போகிறானோ.. வெட்கமும் கூச்சமும் ஒருபக்கம் வதைத்தால் ஆர்வமும் ஆசையும் மறுபக்கம் வந்து நின்று அவளை பாடாய் படுத்த அவன் முன்னால் நிற்க முடியாமல் தடுமாறினாள்.

அவனோ அவளின் திணறலை ரசித்தபடி, இதழோரம் பூத்த புன்னகையோடு அவளையே பார்த்திருக்க, இதற்கு அவன் தொட்டுவிட்டாலே பரவாயில்லை என்றாகிப் போனது அவளுக்கு.

அந்தளவுக்கு அவன் விழிகள் அவளை பாடாய் படுத்தின.

ஒரு அளவுக்கு மேல் முடியாமல் போக, சட்டென நிமிர்ந்து, “இப்ப என்ன வேணும் உங்களுக்கு?” திமிராக காட்டிக் கேட்டாள்.

“என்னட்ட திருடினத திருப்பித் தா?” அவளின் காதருகில் குனிந்து கிசுகிசுத்தான்.

அவனது மூச்சுக்காற்றின் தீண்டலில் தேகமெல்லாம் தீப்பற்ற, “திருட்டா? எதை திருடினான்? முதல்ல நான் திருடுற அளவுக்கு உங்கள்ட்ட என்ன இருக்கு?” தெனாவெட்டாக கேட்டவளை அவன் கண்கள் சிறை செய்தது.

அவனுடைய கண்கள்.. அவை மாயக் கண்ணனுக்கு சொந்தமானவை. அவையே போதும் அவளை வசியம் செய்ய, வசியமிக்க அந்த விழிகளில் தோற்றுக்கொண்டே அவள் கேட்க, “என் இதயத்தை..” என்றான் அவன்.

“அது என்னட்டயா இருக்கு? இல்லையே.. நீங்க நேற்று போன பார்ல போய்தேடிப்பாருங்க.. மப்புல விட்டுட்டு வந்திருப்பீங்க..” என்றாள் அப்போதும்.

“மப்புத்தான்.. ஆனா, இது வேற மப்பு..” என்றவனின் விழிகள் இப்போது தேனூறும் அவள் இதழ்களை மொய்த்தது.

கடவுளே..! இவனுக்கு இந்தக் கண்ணே போதும்! அடிவயிற்றில் என்னவோ செய்ய, அதற்குமேலும் முடியாமல் அவன் மார்பில் ஒளிந்துகொண்டாள் அவனின் இதயத்தை திருடியவள்!

தன் ஜீவனாகவே ஆகிப்போனவளை அப்படியே பூவாக அள்ளிக்கொண்டு மஞ்சத்தை நோக்கி நடந்தான் நிரஞ்சன்.


முற்றும்!



[/QUOTEi]
Iyalbana nadaiyil arumaiyaha sollapatta oru nagareegamana kadhal kadhai nithani
 

Jailogu

Member
Sis,story open panna athiyam pathi padiga mudiyuthu,meethi theriyala sis,eppadiyey oru oru athiyayam pathi than theriyuthu sis,enna problem sis
 
Top Bottom