You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

தேனின் பயன்களும் சுத்தமான தேனினைக் கண்டறியும் வழிமுறைகளும்.

ரோசி கஜன்

Administrator
Staff member
1583230448158.png
படம்: இணையம்



கெட்டுப்போகாத, மருத்துவ குணங்கள் பல கொண்ட தேன், பழங்காலம் தொட்டே நம் மருந்துகளிலும், உணவுகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

ஆரம்பத்தில் மரத்தேன், பொந்துத்தேன் என்பவை பாவனையில் இருந்த நிலை மாறி, இன்றைய நாட்களில் வளர்ப்புத் தேனீக்கள் மூலம் கிடைக்கும் தேன் பாவனை அதிகரித்துள்ளது.



 

ரோசி கஜன்

Administrator
Staff member
தேன் உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள்:



- தேனின் பயனறிந்தே, நமது ஆயுர்வேத வைத்தியத்திலும் சித்த வைத்தியத்திலும் பல சூரணங்களைத் தேனில் குழைத்து உண்ணத் தருகிறார்கள். தேனை உண்டால் பசியும் ருசியும் உண்டாவதோடு, நல்ல உறக்கமும் ஏற்படுகிறது.



- இதய நோயிலிருந்து தப்பவேண்டுமெனில், தினமும் காலையில் வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடித்து வர நல்ல பயனிருக்கும்.



- தினமும் உணவில் சர்க்கரை சேர்ப்பதைத் தவிர்த்துத் தேனைச் சேர்ப்போமாயின் , அது உடலில் இரத்த சர்க்கரையின் அளவை சீராக்கி, கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும்.



-வாய்வுத் தொல்லையிலிருந்து நீங்குவதோடு, வயிற்று உப்புசம் குறைந்து, புத்துணர்வு கிடைப்பதை உணரலாம்.



-நோய்களை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழித்து, நோயெதிர்ப்பு மண்டலத்தின் சக்தி மற்றும் வலிமையை அதிகரிக்கச் செய்யும் ஆற்றலும் தேனுக்குண்டு.



- உடல் பருத்தவருக்கும், உடல் இளைத்தவருக்கும் தேனே சிறந்த மருந்தாக உள்ளது.

உடல் பருமனானவர்கள், தினமும் வெந்நீரில் இரண்டு தேக்கரண்டி விட்டு அருந்திவர, உடலிலுள்ள ஊளைச்சதை குறையும், பலம் அதிகரிக்கும்.

உடல் மெலிந்தவர்கள், இரவு உணவிற்குப் பின், ஒரு கோப்பை பசும்பாலில் இரண்டு தேக்கரண்டி தேனை விட்டு அருந்திவர, உடல் பருமன் கிட்டும், ஆயுளும் நீடிக்கும்.


- உட்கொள்ளப்படும் தேன், உடலின் மூலை முடுக்குகளில் தங்கியுள்ள டாக்ஸின்கள் அனைத்தையும் சிறுநீர் பெருக்கத்தின் மூலம் முழுமையாக வெளியேற்றி விடும்.

அதேபோல், உடலில் உள்ள கழிவுப்பொருட்களை வெளியேற்றி, சருமத்தை பாக்டீரியாக்களின் தாக்குதல்களிலிருந்து பாதுகாத்து, பொலிவான சருமத்தைப் பெற உதவுகிறது.


- தேன் பருகுவதன் மூலம் பல தொற்று நோய்கள், மலேரியா, அம்மை போன்ற நோய்களை வரமால் தடுக்கலாம்.

பேரீச்சம்பழத்தைக் தேனில் ஊற வைத்து உண்பதால் நல்ல இரும்புச்சத்தோடு. தேனிலுள்ள சத்துக்களும் கிடைக்கும்.

அதுபோல், ரோஜா மலரிலுள்ள இதழ்களை தேனில் ஊறவைத்து உண்பதால், உடலுக்குபலமும், குளிர்ச்சியும், தாதுவிருத்தியும் உண்டாகும்.


 

ரோசி கஜன்

Administrator
Staff member
இத்தனை பயன்களைக்கொண்ட தேனில், கலப்படம் என்பது அதிகரித்துள்ள நிலையில், நல்ல தேனை இனம் காண்பதெப்படி எனப் பார்ப்போம்:



- கண்ணாடி டம்ளரில் நிறைய தண்ணீரை எடுத்து, அதில் ஒரு சொட்டுத் தேனை விட்டால், அத்தேன் துளி தண்ணீரில் கரையாமல் அப்படியே அடியில் சென்றால் அது சுத்தமான தேன் ஆகும். கரைந்துவிட்டால் அது கலப்படத்தேன்.



- சுத்தமான காட்டன் துணியை தேனில் நனைத்து, எரியும் தீக்குச்சியில் காண்பித்தால், நன்றாக சுடர்விட்டுப் பற்றி எரியும். அப்படி எரிந்தால் அது சுத்தமான தேன்.



- சிறிதளவு தேனை எடுத்து வாணலியில் சூடு செய்தால், அதன் அடர்த்தி குறைந்து, உருகிவிடும். பின்னர் அடுப்பை அணைத்து விடவேண்டும். சுத்தமானதாக இருந்தால், சில மணி நேரங்களானதும், பழைய அடர்த்தியை அடைந்துவிடும். கலப்படம் செய்யப்பட்டதாக இருந்தால், இழந்த அடர்த்தியைத் திரும்பப் பெறாது.



- தேனை கண்ணாடி ஜாரில் ஊற்றி, சில மணிநேரம் வைத்திருக்க வேண்டும். சுத்தமான தேனாக இருந்தால், அடர்த்தி ஒரே சீராக இருப்பதுடன், நிழல் போன்ற அடுக்குப் படலம் ஏற்படாது. தேனின் நிறம் ஒரே சீராக இருக்கும். கலப்படம் செய்த தேனின் அடர்த்தி மாறுபடும்.



- சுத்தமான தேனுக்கு அடர்த்தி அதிகம். அதை கரண்டியில் எடுத்து கிண்ணத்தில் விட்டால், மெல்லிய நூல் இழை போல் இறங்கும். கலப்படம் செய்யப்பட்ட தேன், சொட்டுச் சொட்டாக வடியும்.



-சுத்தமான தேனை ஒரு பாத்திரத்திலிருந்து மற்றொரு பாத்திரத்துக்கு மாற்றினால், அதன் அடர்த்தி காரணமாக உடனே ஒட்டாமல் குமிழ் போல பரவி, பாத்திரத்தின் வடிவத்துக்கு ஏற்ப சமநிலை பெற சிறிது நேரம் எடுத்துக்கொள்ளும்.

கலப்படம் மிகுந்த தேனை பாத்திரத்தில் ஊற்றினால், உடனேயே தண்ணீர் போல பாத்திரத்தில் சமநிலையில் இருக்கும்.



இவ்வகையில் , நல்ல தரமான தேனை இனம்கண்டு உட்கொள்வதன் மூலம் நம் உடல் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்திக்கொள்வோம்.
 
Top Bottom