You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

தை ஒன்று

ரோசி கஜன்

Administrator
Staff member
1542054044350.png

சரியாகப் பதினைந்து வருடங்களுக்கு முதல், இதே தை ஒன்று பிறந்து சில நிமிடங்களில் புறப்பட்டிருந்தேன்.

ஆமாம்! இலங்கையை விட்டு நெதர்லாந்து நோக்கிய பயணம்!

அன்று, அந்த நடுச்சாமத்திலும் என் செல்லம்மா கொட்டக் கொட்ட முழித்திருந்தாள். ‘செக் இன்’ செய்ய நகரும் கடைசித் தருணத்தில் தான் என்னிடமிருந்து அவளின் தந்தையிடம் சென்றாள். மூன்று வயதும் நிரம்பாத அவளின் ‘மாமி’ என்ற மழலைக் குரல் இப்போதும் காதுகளில் ஒலிக்குது. இன்று, அவள் வளர்ந்து தனக்கென ஒரு பாதையை அமைத்து அதில் பயணித்துக்கொண்டிருக்கிறாள். அவள் கனவுகள் அனைத்தும் நனவாகிடட்டும்.

திருமணம், அதுவும் பேசிச் செய்யும் திருமணங்கள் என்றாலே, ஆரம்ப காலகலட்டத்தில் ஆண் பெண் இருவர் மனங்களிலுமே பலபல எதிர்பார்ப்புகளும், சிறுசிறு பயங்களும் இருப்பது சகஜம் தானே?

நான் மட்டும் விதிவிலக்கா என்ன?

அதிலும் சும்மாவே மிக மிகப் பயந்த சுபாவம் எனக்கு! (ஹலோ மக்களே நம்பவேணும்) ஆதலால், கொஞ்சம் அதிகமாகவே பயம் கலந்த சஞ்சலம்.

95 வரை, யாழ் விட்டு நகரும் எண்ணம் கனவில் கூட வந்ததில்லை.

வெளிநாடு பற்றிய உரையாடல்கள் வராதும் இருக்கவில்லை.

எதிர்காலம் இடமளித்தால் சுற்றிப் பார்க்க வேணும் என்ற பெரிய பெரிய கனவுகள் மட்டுமே அப்போது. சத்தியமாகக் கனவு மட்டும் தான்.

அந்த வயதில் இப்படி எத்தனை எத்தனையோ கனவுகளும் கற்பனைகளும். காசா பணமா என்ன? அதில், இதுவும் ஒன்றாக இருந்தது.

‘இடம் பெயர்வு’ வலுகட்டாயமாக யாழ் விட்டு நகர்த்தி வேடிக்கை பார்த்தது.அதன்பின், பலவிஷயங்கள் என் கையில் இருக்கவில்லை.

ஏதோ போகின்ற போக்கில் இழுபட்டது போல் சென்ற நாட்கள் அவை.

மனதுள், ஒருவகை விரக்தி; யாரில் என்றே தெரியாது கோபம்; கண்ணால் காணாவிட்டாலும் பலத்த நம்பிக்கை கொண்டிருந்து, அதுவும் ஆட்டம் கண்டு, அப்படியும் இப்படியும் ஒட்டிக்கொண்டிருந்த துளி நம்பிக்கையும் அழிந்து ‘தெய்வம்’ என்ற வார்த்தை மீதே வெறுப்பு என இருந்தாலும், எதையாவது செய்யவேணும் என்ற உந்துதல்;( அங்கு பொதுநலம் இருக்கவில்லை. மிகச் சராசரியாக நான், என் குடும்பம் என்ற வட்டத்துள் மட்டுமே சிந்தனை சுழன்ற காலம்.) இவை எல்லாம் சேர்ந்து ‘தனிமை’யை அறிமுகப்படுத்திய நாட்கள்.

மீண்டும் யாழ் வாசம். அதுவும் தனியாக.

அதுவரை இருந்த, அம்மா, அப்பா, தம்பி, தங்கச்சிகள் என்றில்லாது போய், இவை எல்லாவுமாக ‘நட்பு’ என்பது மிக மிக நெருக்கமான கால்பகுதி!

பின், ‘அடுத்து என்ன?’ என்று மலைத்து நின்ற கணம். ஆமாம் கணமே தான்.

எதிர்பாராது கிடைத்த ‘வேலை’ அந்தக் கனத்தை, கணத்தில் கடக்க வைத்திருந்தது.

இடம்பெயர்ந்திருக்கும் பொழுது பளையில் வைத்து எழுதிய ஆரம்ப பாடசாலை ஆசிரியர்களுக்கான பொதுப்பரீட்சை, சற்றும் எதிர்பாராது வா என்றழைத்தது.

அப்படி யாழில் ஆரம்பித்து, மீண்டும், வேலை வேறு ரூபத்தில் சற்றும் எதிர்பாராது கொழும்புக்கு அழைத்து வந்தது. அப்படியே திருமணம், நாட்டை விட்டு நெதர்லாந்துக்கு அழைத்து வந்திருந்தது.

அறிந்தவர் தெரிந்தவர் யாருமின்றி, சில மாதங்களுக்கு முன்னர் அறிமுகமானவரை நம்பி, வெடவெடக்கும் பனிப்பொழியும் ஒரு அதிகாலையில் இங்கு வந்திறங்கினேன். சில படங்களில் பார்த்திருப்பது போலவே, அன்று கண்ணுக்கெட்டிய இடமெங்கும் வெண்பனியின் அலங்காரம். இன்று அப்படிக் காண ஏங்கினாலும் அவ்வளவு இலகுவில் கிடைக்காதாம்.

இந்தப் பதினைத்து வருடங்களில் அந்த வெண்பனி மெல்ல மெல்ல குறைந்து போயிற்று!

என் மனப் பயங்களும் மிகக்குறுகிய காலத்தில் விடைபெற்றிருந்தது.

அமைதியும் மகிழ்ச்சியும் ஆரவாரமாகவே அரவணைத்துக் கொண்டது. தன் பிடியில் தினம் தினம் தக்கவைத்து அழகுபார்க்கின்றது.

என்றோ நழுவித் தொலைந்திருந்த ‘தெய்வம்’, ‘நான் இருக்கிறேனா?’ என்று வேறு அடிக்கடி கேட்டுப் பார்க்கின்றது.

ஊரில், எங்கள் வீட்டு வாசலில் ஒரு இயேசு நாதரின் படம் சட்டம் போட்டு மாட்டி இருந்தோம். ஒரு கட்டத்தில், ‘சலீர்’ என்று அதை அடித்து நொறுக்கி இருக்கிறேன். கண்ணாடித் துகள்கள் சிதறித் தெறிக்க ஒரு ஓரமாக பறந்து விழுந்த இயேசு படம், அன்று என்னையே பார்த்தது இப்பவும் நினைவில் இருக்கு.

‘தெய்வம் உண்டா? இல்லையா?’ ஆராய்ச்சி ஏன்?

‘கடவுள்’ என்றால் ‘இயற்கை’ என் கணவர் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்ததையே நானும் தக்கவைத்துக் கொண்டேன்.

கணவர், வீடு, குழந்தைகள் என, கிட்டத்தட்ட பத்து வருடங்கள் என் சிந்தனை செயல்கள் அனைத்துமே அந்த வட்டத்துள் தான்.

மீண்டும், சற்றும் எதிர்பாராது அறிமுகமானது இந்த ‘எழுத்து’ என்பது.

வாசிப்புப் தந்த பரிசு என்று சொல்லலாம். அங்கும் அழகிய நட்பு என்பதும் கரம் பற்றியதும் நடந்தது.

கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக, குடும்பம் தவிர்த்து எஞ்சிய மணித்துளிகள் எழுத்து என்பதோடு நகருகின்றது. அதிலும், இதெல்லாம் நமக்குத் தேவையா? சரிப்படுமா? என, எத்தனையோ தடவைகள் நினைத்தாலும் வேண்டாம் என்று விலக விடாது பற்றியிருப்பது வாசகர்களின் அன்பு நெஞ்சங்கள் தான்.

நன்றி நன்றி செல்லங்களா!

இப்போ யோசித்துப் பார்த்தால், ‘இது தான் வேண்டும்’ என்று என்னுள் நினைத்தவை அநேகம் எனக்குக் கிடைக்கவே இல்லை.

பத்தாம் வகுப்பு முடிய இன்ன பாடம் செய்யவேணும் என்ற எனது விருப்பில் இருந்து, என்றைக்குமே இலங்கையில் தான் வாழவேணும் என்றது வரை நான் நினைத்தது நடக்காவிடினும், அதை எண்ணி வருந்தும் சந்தர்ப்பங்கள் எதுவும் அமையாது, சற்றுமே எதிர்பாராது கிடைத்தவை அனைத்துமே என்னைப் பூரணமாகத் திருப்தி கொள்ள வைத்துள்ளது.

அமைதியையும் சந்தோசத்தையுமே அளவின்றித் தந்துள்ளது.

இன்று, இதையெல்லாம் ஏன் எழுதுகிறேன் என்றால், ‘அட! நாம வந்து பதினைந்து ஆண்டுகளா?’ என்ற எண்ணம் தன் பாட்டில் கிறுக்க வைத்துவிட்டது. இதோடு முடித்துக் கொள்கிறேன்.

பிறந்துள்ள புத்தாண்டும், இனிவரும் ஆண்டுகள் ஒவ்வொன்றும் நம் அனைவருக்குமே அமைதியும் இனிமையும் ஆரோக்கியமும் வழங்கிடும் எனும் ஆவலும் நம்பிக்கையுமாக,உங்கள் அனைவருக்கும் ‘இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!’ பலபல! (2018)
 
emilypeter

Well-known member

பிறந்துள்ள புத்தாண்டும், இனிவரும் ஆண்டுகள் ஒவ்வொன்றும் நம் அனைவருக்குமே அமைதியும் இனிமையும் ஆரோக்கியமும் வழங்கிடும் எனும் ஆவலும் நம்பிக்கையுமாக,உங்கள் அனைவருக்கும் ‘இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!’ பலபல! (2018)Yarendru theriyathavarudan Nedharland sentrathalthan intru Rose yengindra arumaiyana ezhuthalar yengalukku kidaithullar.
Un yennappadi kadavulthan yearkkai yendral sila maathangalukku mun therintha varai koduthathathum antha yearkkaithan, koodave nalla makkalaium. Un kannottathil yearkkai athu yenakku Deivam. Ithuthan vidhyasam. Sri Lankalavil mattum alla ulagathil yengu iruthalum ippothaya nilaithan unakku yenbathu yezhuthappadadatha yearkkain vidhi. Keep it up .God(yearkkai )will stand near you all in your wishes.my hearty pongal wishes to you & your family members
 
ரோசி கஜன்

Administrator
Staff member
Yarendru theriyathavarudan Nedharland sentrathalthan intru Rose yengindra arumaiyana ezhuthalar yengalukku kidaithullar.
Un yennappadi kadavulthan yearkkai yendral sila maathangalukku mun therintha varai koduthathathum antha yearkkaithan, koodave nalla makkalaium. Un kannottathil yearkkai athu yenakku Deivam. Ithuthan vidhyasam. Sri Lankalavil mattum alla ulagathil yengu iruthalum ippothaya nilaithan unakku yenbathu yezhuthappadadatha yearkkain vidhi. Keep it up .God(yearkkai )will stand near you all in your wishes.my hearty pongal wishes to you & your family members
அன்பான வார்த்தைகள் , வாசிக்கையில் சந்தோசமாக இருந்திச்சு எமிலி.

உங்கள் எல்லாருக்கும் இனிய தைத்திருநாள் வாழ்த்துகள் பல!பல!
 
Rena

Active member
சரியாகப் பதினைந்து வருடங்களுக்கு முதல், இதே தை ஒன்று பிறந்து சில நிமிடங்களில் புறப்பட்டிருந்தேன்.

ஆமாம்! இலங்கையை விட்டு நெதர்லாந்து நோக்கிய பயணம்!

அன்று, அந்த நடுச்சாமத்திலும் என் செல்லம்மா கொட்டக் கொட்ட முழித்திருந்தாள். ‘செக் இன்’ செய்ய நகரும் கடைசித் தருணத்தில் தான் என்னிடமிருந்து அவளின் தந்தையிடம் சென்றாள். மூன்று வயதும் நிரம்பாத அவளின் ‘மாமி’ என்ற மழலைக் குரல் இப்போதும் காதுகளில் ஒலிக்குது. இன்று, அவள் வளர்ந்து தனக்கென ஒரு பாதையை அமைத்து அதில் பயணித்துக்கொண்டிருக்கிறாள். அவள் கனவுகள் அனைத்தும் நனவாகிடட்டும்.

திருமணம், அதுவும் பேசிச் செய்யும் திருமணங்கள் என்றாலே, ஆரம்ப காலகலட்டத்தில் ஆண் பெண் இருவர் மனங்களிலுமே பலபல எதிர்பார்ப்புகளும், சிறுசிறு பயங்களும் இருப்பது சகஜம் தானே?

நான் மட்டும் விதிவிலக்கா என்ன?

அதிலும் சும்மாவே மிக மிகப் பயந்த சுபாவம் எனக்கு! (ஹலோ மக்களே நம்பவேணும்) ஆதலால், கொஞ்சம் அதிகமாகவே பயம் கலந்த சஞ்சலம்.

95 வரை, யாழ் விட்டு நகரும் எண்ணம் கனவில் கூட வந்ததில்லை.

வெளிநாடு பற்றிய உரையாடல்கள் வராதும் இருக்கவில்லை.

எதிர்காலம் இடமளித்தால் சுற்றிப் பார்க்க வேணும் என்ற பெரிய பெரிய கனவுகள் மட்டுமே அப்போது. சத்தியமாகக் கனவு மட்டும் தான்.

அந்த வயதில் இப்படி எத்தனை எத்தனையோ கனவுகளும் கற்பனைகளும். காசா பணமா என்ன? அதில், இதுவும் ஒன்றாக இருந்தது.

‘இடம் பெயர்வு’ வலுகட்டாயமாக யாழ் விட்டு நகர்த்தி வேடிக்கை பார்த்தது.அதன்பின், பலவிஷயங்கள் என் கையில் இருக்கவில்லை.

ஏதோ போகின்ற போக்கில் இழுபட்டது போல் சென்ற நாட்கள் அவை.

மனதுள், ஒருவகை விரக்தி; யாரில் என்றே தெரியாது கோபம்; கண்ணால் காணாவிட்டாலும் பலத்த நம்பிக்கை கொண்டிருந்து, அதுவும் ஆட்டம் கண்டு, அப்படியும் இப்படியும் ஒட்டிக்கொண்டிருந்த துளி நம்பிக்கையும் அழிந்து ‘தெய்வம்’ என்ற வார்த்தை மீதே வெறுப்பு என இருந்தாலும், எதையாவது செய்யவேணும் என்ற உந்துதல்;( அங்கு பொதுநலம் இருக்கவில்லை. மிகச் சராசரியாக நான், என் குடும்பம் என்ற வட்டத்துள் மட்டுமே சிந்தனை சுழன்ற காலம்.) இவை எல்லாம் சேர்ந்து ‘தனிமை’யை அறிமுகப்படுத்திய நாட்கள்.

மீண்டும் யாழ் வாசம். அதுவும் தனியாக.

அதுவரை இருந்த, அம்மா, அப்பா, தம்பி, தங்கச்சிகள் என்றில்லாது போய், இவை எல்லாவுமாக ‘நட்பு’ என்பது மிக மிக நெருக்கமான கால்பகுதி!

பின், ‘அடுத்து என்ன?’ என்று மலைத்து நின்ற கணம். ஆமாம் கணமே தான்.

எதிர்பாராது கிடைத்த ‘வேலை’ அந்தக் கனத்தை, கணத்தில் கடக்க வைத்திருந்தது.

இடம்பெயர்ந்திருக்கும் பொழுது பளையில் வைத்து எழுதிய ஆரம்ப பாடசாலை ஆசிரியர்களுக்கான பொதுப்பரீட்சை, சற்றும் எதிர்பாராது வா என்றழைத்தது.

அப்படி யாழில் ஆரம்பித்து, மீண்டும், வேலை வேறு ரூபத்தில் சற்றும் எதிர்பாராது கொழும்புக்கு அழைத்து வந்தது. அப்படியே திருமணம், நாட்டை விட்டு நெதர்லாந்துக்கு அழைத்து வந்திருந்தது.

அறிந்தவர் தெரிந்தவர் யாருமின்றி, சில மாதங்களுக்கு முன்னர் அறிமுகமானவரை நம்பி, வெடவெடக்கும் பனிப்பொழியும் ஒரு அதிகாலையில் இங்கு வந்திறங்கினேன். சில படங்களில் பார்த்திருப்பது போலவே, அன்று கண்ணுக்கெட்டிய இடமெங்கும் வெண்பனியின் அலங்காரம். இன்று அப்படிக் காண ஏங்கினாலும் அவ்வளவு இலகுவில் கிடைக்காதாம்.

இந்தப் பதினைத்து வருடங்களில் அந்த வெண்பனி மெல்ல மெல்ல குறைந்து போயிற்று!

என் மனப் பயங்களும் மிகக்குறுகிய காலத்தில் விடைபெற்றிருந்தது.

அமைதியும் மகிழ்ச்சியும் ஆரவாரமாகவே அரவணைத்துக் கொண்டது. தன் பிடியில் தினம் தினம் தக்கவைத்து அழகுபார்க்கின்றது.

என்றோ நழுவித் தொலைந்திருந்த ‘தெய்வம்’, ‘நான் இருக்கிறேனா?’ என்று வேறு அடிக்கடி கேட்டுப் பார்க்கின்றது.

ஊரில், எங்கள் வீட்டு வாசலில் ஒரு இயேசு நாதரின் படம் சட்டம் போட்டு மாட்டி இருந்தோம். ஒரு கட்டத்தில், ‘சலீர்’ என்று அதை அடித்து நொறுக்கி இருக்கிறேன். கண்ணாடித் துகள்கள் சிதறித் தெறிக்க ஒரு ஓரமாக பறந்து விழுந்த இயேசு படம், அன்று என்னையே பார்த்தது இப்பவும் நினைவில் இருக்கு.

‘தெய்வம் உண்டா? இல்லையா?’ ஆராய்ச்சி ஏன்?

‘கடவுள்’ என்றால் ‘இயற்கை’ என் கணவர் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்ததையே நானும் தக்கவைத்துக் கொண்டேன்.

கணவர், வீடு, குழந்தைகள் என, கிட்டத்தட்ட பத்து வருடங்கள் என் சிந்தனை செயல்கள் அனைத்துமே அந்த வட்டத்துள் தான்.

மீண்டும், சற்றும் எதிர்பாராது அறிமுகமானது இந்த ‘எழுத்து’ என்பது.

வாசிப்புப் தந்த பரிசு என்று சொல்லலாம். அங்கும் அழகிய நட்பு என்பதும் கரம் பற்றியதும் நடந்தது.

கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக, குடும்பம் தவிர்த்து எஞ்சிய மணித்துளிகள் எழுத்து என்பதோடு நகருகின்றது. அதிலும், இதெல்லாம் நமக்குத் தேவையா? சரிப்படுமா? என, எத்தனையோ தடவைகள் நினைத்தாலும் வேண்டாம் என்று விலக விடாது பற்றியிருப்பது வாசகர்களின் அன்பு நெஞ்சங்கள் தான்.

நன்றி நன்றி செல்லங்களா!

இப்போ யோசித்துப் பார்த்தால், ‘இது தான் வேண்டும்’ என்று என்னுள் நினைத்தவை அநேகம் எனக்குக் கிடைக்கவே இல்லை.

பத்தாம் வகுப்பு முடிய இன்ன பாடம் செய்யவேணும் என்ற எனது விருப்பில் இருந்து, என்றைக்குமே இலங்கையில் தான் வாழவேணும் என்றது வரை நான் நினைத்தது நடக்காவிடினும், அதை எண்ணி வருந்தும் சந்தர்ப்பங்கள் எதுவும் அமையாது, சற்றுமே எதிர்பாராது கிடைத்தவை அனைத்துமே என்னைப் பூரணமாகத் திருப்தி கொள்ள வைத்துள்ளது.

அமைதியையும் சந்தோசத்தையுமே அளவின்றித் தந்துள்ளது.

இன்று, இதையெல்லாம் ஏன் எழுதுகிறேன் என்றால், ‘அட! நாம வந்து பதினைந்து ஆண்டுகளா?’ என்ற எண்ணம் தன் பாட்டில் கிறுக்க வைத்துவிட்டது. இதோடு முடித்துக் கொள்கிறேன்.

பிறந்துள்ள புத்தாண்டும், இனிவரும் ஆண்டுகள் ஒவ்வொன்றும் நம் அனைவருக்குமே அமைதியும் இனிமையும் ஆரோக்கியமும் வழங்கிடும் எனும் ஆவலும் நம்பிக்கையுமாக,உங்கள் அனைவருக்கும் ‘இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!’ பலபல! (2018)

எவ்வளவு ஷார்ட் ஆ 15 வருட ஃப்ளாஷ் பேக் சொல்லிட்டீங்க
 
Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Latest posts

Top Bottom