You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

நினைவெல்லாம் நீயாகிட வந்தேன்! - Comments

நிதனிபிரபு

Administrator
Staff member
26219364_615733068758448_7925069601695284569_n.jpg

நினைவெல்லாம் நீயாகிட வந்தேன் வெகு சாதாரணமாக எழுத நினைத்து 2017ல் எழுதிய கதை. ஆனால், உங்கள் பலருக்கு மிகவுமே பிடித்துப்போனது மிகுந்த மகிழ்ச்சிக்குரிய விசயமே! போனவாரம் அளவில் இதே கருவை வைத்து வேறு ஒருவர் கதை எழுதி இருப்பதைக் கண்டு உண்மையிலேயே அதிர்ச்சியோடு கவலையாகத்தான் இருந்தது. நாயகனுக்கு ஒரு மகன் இருப்பான், அப்படியே அந்தக் கதையிலும். நாயகிக்கு ஒரு மகள் இருப்பாள். அதுவும் அந்தக் கதையில் அப்படியே. நாயகனின் நண்பனின் அம்மா வீட்டுக்கு பக்கத்து வீட்டில் நாயகி இருப்பாள். அதுவும் அப்படியே. இப்படி காட்சிகள் அனைத்தும் ஒரே விதம். என்ன என் பாணியில் நான் எழுதியதை அவர் அவர் பாணியிலும் அவரின் பேச்சு வழக்கிலும் எழுதி இருப்பார். அப்படியே கொஞ்சமாய் தேனே, மானே, பொன்மானே க்களை அங்கங்கே சேர்த்து இருப்பார். இது வேறு கதை அது வேறு கதை என்று காட்ட வேண்டாமா? அதைப் பார்த்தபோது கோபம் என்பதை விட கவலையாகத்தான் போயிற்று!


இதைக் கேட்டுக்கொண்டு போகலாம் என்று நினைக்கிறீர்களா? கும்பலாய்ச் சேர்ந்து கும்மி அடிப்பார்கள். இல்லையோ உங்களுக்கு வந்த கற்பனை எனக்கு வந்திருக்காதா என்பார்கள். எப்படி கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் நம்ம பக்கம் தான் வீக். சொந்தமாய் எழுதியவள் நான் இல்லையா. பேசாமல் தான் இருக்கவேணும்.

காப்பி அடித்து எழுதுகிற அளவில் என் கதை இருக்கிறது என்று பெருமையும் பட்டுக்கொள்வோம். வேறு என்னதான் செய்வது?


அவரவருக்கு அவரவரின் மனச்சாட்சிகள் தான் நீதிபதி! அதற்கு ஏற்றவாறு நடந்துகொள்ளட்டும்! நம்முடைய கற்பனைகள் மாத்திரமே நம்மைத் தலைநிமிர வைக்கும்; பெருமைகொள்ள வைக்கும்! அடுத்தவரின் கற்பனைகளைத் திருடினால் தலை குனிந்துதான் நிற்கவேண்டி வரும்!


 
Last edited:

Suvitha

Member
எனக்கு மிகவும் பிடித்த கதை...
யாஸ்மின் கேரக்டரைக் கூட ஒருவிதத்தில் குறைசொல்ல முடியாமல் பதிவு செய்திருந்த விதம் நல்லா இருந்தது...

அப்படியே ஆரணியையும் சீக்கிரம் கூட்டிட்டு வாங்க சகோ
 

M.girija

New member
வேறு என்னதான் செய்வதும்?

அவனை வேண்டாம் என்று முடிவுசெய்துவிட்டு, தனக்கான அடுத்த துணையாக இன்னொருவனை தேர்வும் செய்துவிட்டு, அவனை தன்னிடமே அவள் அறிமுகப் படுத்தியபோது அவனால் என்ன செய்துவிட முடியும்? அப்படி செய்தாலுமே அதில் ஏது பலன்?

காதலித்து கட்டிய கணவனை பற்றி அவள் சிந்திக்கவில்லை. பத்துமாதம் சுமந்து பெற்ற மகனை பற்றி சிந்திக்கவில்லை. அவர்கள் மூவரினதும் எதிர்காலம் பற்றி யோசிக்கவில்லை.

அவளில்லாமல் அவனும் மகனும் என்னாவார்கள் என்றுகூட அவள் சிந்திக்கவே இல்லையே.

“மகன் என்னட்ட இருக்கட்டும்.” அவளின் முகம் பாராது அவன் சொன்னபோது, கலங்கிய விழிகளை மூடித்திறந்து சம்மதித்துவிட்டு அவனை பிரிந்து சென்றாள் யாஸ்மின்.

இதெல்லாம் நடந்து நான்கு வருடங்கள் ஓடியிருந்தன. இருபத்திமூன்று வயதில் நடந்த திருமணம் இருபத்தியெட்டு வயதில் முறிந்தே போயிற்று! ஆனாலும், அன்றைய நினைவுகள் இன்றும் மனதில் ரணமாய் கிடக்க, கண்களை இறுக மூடிக்கொண்டு சிலையென அப்படியே நின்றான் விக்ரம்! அன்று அவள் என்ன சொல்ல வந்தாள் என்பது இன்று அவள் சொல்லாமலே புரிந்தது அவனுக்கு.

முகம்பார்த்து சிரிக்க ஒருவரின்றி, மனதிலிருப்பதை கொட்ட ஒரு துணையின்றி, தலைசாய ஒரு மடியின்றி, சிகைகோத இரு கரங்களின்றி அவன் வாழ்க்கையே மரத்துப்போயிற்று!

அந்த தனிமையை அது தரும் வலியை இன்று அவன் உணர்கிறான்தான். ஒரு பெண்ணாக மனைவியாக அவளின் உணர்வுகளையும் விளங்கிக்கொள்ள முடிகிறதுதான். ஆனால், ஒரு தாயாக? தன்னைப் பற்றி மட்டுமே யோசித்து மகனை முற்றிலுமாக மறந்து இன்னொரு வாழ்க்கை தேடிப்போக எப்படி முடிந்தது?

எந்தக் கோணத்திலிருந்து சிந்தித்தாலும் இந்தக் கேள்விக்கு மட்டும் அவனிடம் நியாயமான பதில் இல்லவே இல்லை. நியாயப்படுத்தவும் விரும்பவில்லை!

அன்று தாய்க்காக ஏங்கிய குழந்தையை வைத்துக்கொண்டு எவ்வளவு கஷ்டப்பட்டான்? தன்னோடு வைத்துக்கொண்டது பெரும் தவறோ? தாயிடமிருந்து பிள்ளையை பிரித்துவிட்டேனோ? என்று எப்படியெல்லாம் துடித்துப்போனான்.

ஆயினும், பிள்ளையை பற்றி சிந்தியாது தன் வாழ்க்கையை தேடித் போனவளிடம் அவனை விடவும் விருப்பமில்லை. பிள்ளை மீது பாசம் இருந்திருக்க அவளால் இப்படி ஒரு காரியத்தை செய்திருக்க முடியாதே! பிறகும் ஏன் மகனை அவளிடம் கொடுக்க வேண்டும்?

ஆனால், அந்த மகனை தாயின் ஏக்கத்திலிருந்து வெளியே கொண்டுவர ஆறுமாதத்துக்கும் மேலாகிப் போனது விக்ரமுக்கு. அத்தனை வேலைகளையும் பொறுப்பையும் நண்பனிடம் கொடுத்துவிட்டு வீட்டோடு இருந்துகொண்டான். எந்தக் காரணத்துக்காகவும் மகனையும் இழக்க அவன் தயாரில்லை. ஒருமுறை பட்ட காயமே போதும்!

உண்ணும் உணவு முதல்கொண்டு, குளியலுக்கு, விளையாட்டுக்கு, டிவி பார்ப்பதற்கு, உறங்குவதற்கு, காலையில் விழித்ததும் தாயின் கதகதப்பான அணைப்புக்கு என்று அத்தனைக்கும் ஏங்கிய மகனை ஒருநிலைக்கு கொண்டுவருவதற்குள் அவன் பட்டுவிட பாடு.. சொல்லி மாளாது.

அவளை மறக்க முயலும் ஒவ்வொரு நொடியிலும் அம்மாவுக்காக உதடு பிதுக்கி அழுது பிள்ளை நினைவு படுத்தும்போது, தன் வலி ஒருபக்கம், மகனின் வலி ஒருபக்கம் என்று அந்த நாட்கள் நரகத்திலும் நரகம்தான்.

தாயுமானவனாகவே மாறி ஒருவழியாக மகனை அந்த தவிப்பிலிருந்து வெளியே கொணர்ந்துவிட்டான். இன்று வரையிலும் தாய் என்கிற ஒருத்திக்காக மகன் ஏங்கிவிடக் கூடாது என்பதில் மிகவுமே கவனமாக இருக்கிறான். அந்தளவில் அவனுக்கு வெற்றியே! அந்தளவில் மட்டும்தான்! இதோ இன்றுவரை நெஞ்சை திண்ணும் அந்த ரணத்திலிருந்து அவனால் வெளியே வரவே முடியவில்லை.

அப்போது அவனது கைபேசி அழைக்கவும், சலிப்புடன் பாக்கெட்டுக்குள் கையை விட்டு எடுத்து காதுக்கு கொடுத்து, “சொல்லுடா..” என்றான், அழைப்பது நண்பன் அசோக் என்றறிந்து.

“என்ன மச்சான்? ஏன் ஒருமாதிரி கதைக்கிறாய்?”

“தெரியேல்லடா… என்னவோ எல்லாமே மனம் விட்டுப்போன மாதிரி இருக்கு...” எல்லையற்ற வலியும் விரக்தியும் அவனிடத்தில்.

விக்ரமை பற்றி முழுவதும் அறிந்தவன் அசோக். இன்னொரு திருமணம் செய்துகொள் என்று எத்தனையோ தடவைகள் சொல்லிவிட்டான். கேட்ட பாடே இல்லை.

“தனிமை இவ்வளவு கொடுமையா இருக்கும் எண்டு நான் நினச்சே பாக்கேல்ல அசோக். சிலநேரம் வாழ்க்கையே வெறுத்துப்போகுது. ஆறுதலுக்கு கூட பக்கத்தில ஒருத்தர் இல்ல மச்சான்.” சொல்லிக்கொண்டு போனவனுக்கு குரல் அடைத்துக்கொண்டது.

இன்று அவன் எப்படி தாயாக தாரமாக அவனை தாங்க ஒரு உயிரை தேடுகிறானோ, அன்று அவளும் அப்படித்தான் தன் அருகாமையை தேடி இருப்பாளோ என்று தோன்றவும், காலம் கடந்து உரைத்த உண்மையின் கசப்பை தாங்கமுடியாமல் நின்றான் விக்ரம். பிள்ளையை அவன் தங்குவான். அவனை?

அசோக்குக்கும் பேச்சே வரவில்லை. இப்படியெல்லாம் மனதை தளர விடுகிறவன் அல்ல விக்ரம். அதோடு, எதையும் இலேசில் வெளியில் சொல்லவும் மாட்டான். அப்படியானவன் இப்படி புலம்புகிறான் என்றால்?

“இதுக்குத்தான் சொன்னனான் இன்னொரு கல்..” என்று ஆத்திரத்தோடு ஆரம்பித்துவிட்டு, இதை இப்போ கதைப்பது உசிதமல்ல என்றுணர்ந்து அதை நிறுத்தினான்.

ஏற்கனவே நொந்துகொண்டு நிற்பவனிடம் கத்தி என்ன பிரயோசனம்?

“நேரமாச்சே.. ஆபீஸ்க்கு உன்னை இன்னும் காணேல்லையே எண்டுதான் எடுத்தனான். இன்றைக்கு நீ வராத. நானே எல்லாத்தையும் பாக்கிறன். நீ ஒண்டையும் யோசிக்காம நிம்மதியா இரு..” என்றுவிட்டு செல்லை அணைத்தான் அசோக்.

விக்ரமுக்கு ஏனோ யாஸ்மினை பார்க்கவேண்டும் போலிருந்தது. அவள் எப்படியிருக்கிறாள், அவள் வாழ்க்கை எப்படிப் போகிறது, இப்போது எப்படியிருப்பாள் என்று தெரியவேண்டும் போலிருந்தது.

உடனேயே சொல்லாமல் கொள்ளாமல் அவள் வீட்டுக்கே போனான்.



தொடரும்..

இது பழைய கதைதான். நிறையப்பேர் வாசிச்சு இருப்பீங்க. ஆனாலும் கமெண்ட் போட்டா குறைஞ்சா போவீங்க.:cautious::cautious::cautious::cautious: அதால உங்கள் பொன்னான கருத்துக்களை மண்ணாக்காமல் பதிவு செய்திட்டு போங்கோ!
Thank U for rerunning this story waiting for next ud?????
 
Top Bottom