You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

நீ வாழவே என் கண்மணி

நிதனிபிரபு

Administrator
Staff member
Arthi Ravi

நிதனி பிரபுவின் நீ வாழவே என் கண்மணி
சிறு கதையாக முன்பு வாசித்தது முதல் பக்கத்திலேயே நினைவு வந்து ஆர்வத்தைத் தூண்டி விட்டது. அப்படியே நள்ளிரவைத் தாண்டி இரண்டு மணி வரை இருந்து வாசித்து முடித்தேன்.
முடித்ததும், இதற்கு இரண்டாம் பாகம் தர மாட்டார்களா என்கிற ஏக்கம் பிறந்தது உண்மை.
காதல் கதையே!
ஆனால், அதைத் தாண்டி ஓர் உன்னத உணர்வு வந்து ஆட்கொண்டது. அபூர்வமாகச் சில கதைகள் நெஞ்சை விட்டு அகல மறுத்துச் சண்டித்தனம் செய்பவைகளாக நின்று விடுகின்றன. இக்கதை அந்த ரகம்.
ஈழப்போரின் சிறு பகுதி. போர் வீரர்களின் இந்நாள் துயரங்கள்... கண்டிப்பாக ஈழமக்களால் கவனிக்கப்பட வேண்டியவை.
துயில்லம்... புதிய வார்த்தையைக் கற்றுக் கொண்டேன். அங்கு ஒரு காட்சி. மறக்க இயலாது. கண்ணீரை வரவழைத்து விட்டது.
உஷா... எப்படி இவளால் முடிந்தது? அதுவும் இரண்டு மாதங்களுக்கு மேல் முன்னால் காதலியுடன் கணவனை அனுமதித்தது. Great!
நிர்மலன்... இவனின் காதல் மனம் தவிக்கும் தவிப்பு. பின்னர் எழும் கோபம். உத்வேகம்.
இவனை, கண்மணியை, காந்தனை உணர, கதையை வாசியுங்கள்.
கண்மணி... a pure love
❤️
.
அந்த இரண்டு கவிதைகள் அருமை. மூன்று கோவில் காட்சிகளும் கண்ணீரை வரவழைத்து விட்டன.
Best wishes

Nitha!
?
❤️
?

அன்புடன்,
ஆர்த்தி ரவி
 

நிதனிபிரபு

Administrator
Staff member
Nathan shan


கதை விமர்சனம்
———————-
நிதனி பிரபு”ன்
“நீ வாழவே என் கண்மணி”
என் மனங்கவர்ந்த முன்னிலை எழுத்தாளர்களில் ஒருவர் தான் நிதனி பிரபு. அவரது கதைகள் எப்பவும் கனமானதாயும்.....நிறைவானதாயும்...
மட்டுமன்றி உணர்வுபூர்வமானதாயும் இருக்கும்...
அதே போல் தான் இந்தக் குறுங்கதையும்
என் மனத்தையும்...விழிகளையும் கசக்கிப் போட்டு விட்டது..
7 அத்தியாயங்கள் மட்டுமேயான இக்கதை காதலின் இனிமையையும்..வலிகளையும் பிழியப் பிழிய உயிர்ப்புடன் இழுத்து வந்து சம்மணம் இட்டுவிட்டது மனதில்...
ஈழத்தில் இனிமையாய்..தொடங்கிய கதை..Switzerland ல் வாழ்ந்து..மீண்டும் ஈழத்தில்
உயிரோட்டமாய்..நிலை கொள்கிறது...
நிர்மலனும்-கண்மணியும் காதலர்களாய் அன்று.
நிர்மலனும்- உஷாவும் , இரு குழந்தைகளும் என்ற
-பந்தத்தில்...இன்று
மீண்டும் கண்கோர்க்கும் காதலுடன் நிர்மலனும்- கண்மணியும் ...
இது விதியின் சதிராட்டமா? அன்றேல்... காதலின் விதியாட்டமா?....
வலி...வலி...என வரிகளெல்லாம் கனமாய்...
வாசித்து நீங்களும் அழுங்கள்...
காதலே !
இனிமையாய் வா...
இயலாமையாய் வராதே..
உணர்வாய் வா.
ஊமையாய் மாளாதே..
வசந்தமாய் வா..
வலியாய் வராதே..!!
 
Top Bottom