You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

பயணம் புதிது

நிதனிபிரபு

Administrator
Staff member
Nathan Shan

“நிதனி பிரபு” எழுதிய
“பயணம் பதிது”
பெண்ணியம் பேசாது…பதாதைகள் தூக்காது தனக்கான பிரச்சனைகளை ஒரு பெண் துணிவோடும் நிமிர்வோடும் எதிர்கொள்ளும் போது எழும் சிக்கல்களும் அவள் மீதான அழுத்தங்களும் என கையாளப் படும் அழகே தனி ..மனதைக் கவர்ந்த நாவல்.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
Chitrasaraswathi


நிதனி பிரபுவின் பயணம் புதிது எனது பார்வையில். கோகுல் மற்றும் பிரியநந்தினி மின்பொறியியல் துறையில் உள்ள இருவருக்கும் பெற்றோர்கள் பார்த்து நடத்தி வைக்கும் திருமணம். இருவருக்கும் வீட்டில் இளையவர்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் கடமை இருக்கிறது. ஆனால் சமூகத்தில் ஆணிற்கு உரிய கடமைகளையும், பெண்ணின் பிறந்த வீட்டிற்கு செய்யும் கடமையையும் வேறு வேறாக பார்க்கிறது. இருவரும் தங்கள் தொழிலின் முன்னேற்றம் என்று வரும் பொழுது பெண்தான் விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கிறது. தன் குடும்ப வாழ்விற்காக தன் வேலையின் நிலையைக் குறைத்துக் கொள்ள எடுக்கும் முடிவில் குடும்ப வாழ்வு நன்றாக இருந்தாலும் மனச் சுணக்கம் ஏற்படுவது இயல்புதான். ஆனால் கோகுல் சிறிய பிரிவிற்கு பின் சேர்ந்த பிறகு மனைவியை புரிந்துக் கொள்வதால் பிரியநந்தினிக்கு வேலை, வீடு என்று அனைத்திலும் உதவியாக இருப்பது அருமை. எல்லா கணவன்மார்களும் இப்படி உதவுவார்கள் என்பது கடினமான ஒன்று. வேலைக்கு செல்லும் இன்றைய தம்பதிகளின் இன்றையக் காலத்திற்கான் கதை. அழகிய இலங்கைத் தமிழில்.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
Sudha Ravi

பயணம் புதிது - நிதனி பிரபு
வெகு நாட்களும் பிறகு நிதாவின் கதையை வாசிக்கிறேன்...இந்தப் பயணம் என்னை மொத்தமாக உள்ளே இழுத்துக் கொண்டது.
இன்றைய வாழ்க்கையின் யதார்த்தத்தை அதன் ருசியோடு மிக அழகாக கொடுத்திருக்கிறார்.
பெண்ணியம் என்பது வெறும் வார்த்தைகள் அல்ல. வாழ்ந்து காட்டுவது..
திருமண உறவென்பது இருபாலரும் ஒருவருக்கொருவர் அனுசரித்து வாழ்வது...இரு மனங்களின் சேர்க்கை என்பதை தாண்டி இரு குடும்பங்களின் சேர்க்கையும் கூட...அதை ஒவ்வொரு சம்பவத்திலும் சரியான சொல்லாடல்கள் மூலம் உணர்த்தியிருக்கிறார்.
கோகுலன், பிரியந்தினி இருவரின் உணர்வு போராட்டத்தையும் மிகைப்படுத்தாமல் கொடுத்ததற்கு நன்றி நிதா..அதிலும் அவளை எந்த இடத்திலும் தன் நிலையிலிருந்து இறங்க விடாமல் செய்திருப்பது அருமை...அதே சமயம் திருமணத்தின் அடிநாதத்தை அவளது தாயின் மூலமாக உணர்த்தி போராடி பெற வைத்ததற்கு சபாஷ்.
ஆண் வளர்ப்பு பற்றி சொன்னதற்காகவே உங்களை நிச்சயம் பாராட்ட வேண்டும் நிதா...நிச்சயம் இதை ஒவ்வொரு தாயும் செய்ய வேண்டும்...அப்போது தான் வருங்கால சந்ததியினருக்கு நல்லது.
அற்புதமான படைப்பை கொடுத்ததற்கு மனமார்ந்த
வாழ்த்துகள்

நிதா!...மேலும் இது போல் பல படைப்புகளை தர வேண்டும்.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
Nathan shan



“நிதனி பிரபு” அவர்களின் பயணம் புதிது குறு நாவல் . அழகான பயணமாக . அந்தந்தக் கதாபாத்திரங்களோடான ஒன்றிப்பு உயிர்ப்பாய் வரிகளாக்கப் பட்டுள்ளது.
வேலைக்குப் போகின்ற பெண் எதிர் கொள்ளும் சவால்கள் ..அவளது விருப்பு வெறுப்புகளுக்கிடையிலான ஒருவிதப் போராட்டம் அழகாக அலசி …அருமையான தீர்வோடு கதை நகரும் விதம் அழகு.
கோகுலன்-ப்ரியந்தினி யின் பயணத்தை இடர் களைந்து ..பயணிக்க வைத்த எழுத்தாளருக்குப் பாராட்டுகள்.
 
Top Bottom