பற்று/ பற்றி

நிதனிபிரபு

Administrator
Staff member
பற்றி - இடைச்சொல்

(குறிப்பிடப்படும் ஒருவரின் அல்லது ஒன்றின்) தொடர்பாக’ என்ற பொருளில் ஒரு வாக்கியத்தில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்; ‘சம்பந்தமாக’; ‘குறித்து’

மொழிப் பிரச்சினைபற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

சுற்றுப்புறச் சூழல் தூய்மைக்கேடுபற்றி ஆய்வு மேற்கொள்ளப்படும்.

எதைப்பற்றிப் பேசுகிறார்கள் என்றே புரியவில்லை.

இடைச்சொல்லாக வரும் பற்றி பிரித்தெழுதுதல் கூடாது.

-------------------------------------------------

பற்று - வினைச்சொல்


பற்ற, பற்றி

1.(கையினால் ஒன்றை) பிடித்தல்


பயத்தில் குழந்தை அம்மாவின் கையைக் கெட்டியாகப் பற்றிக்கொண்டது.

வெற்றி பெற்றவரின் கையைப் பற்றிக் குலுக்கினான்.

கிணற்றில் தவறி விழுந்தவன் பற்றிக்கொள்ள ஏதாவது கிடைக்காதா என்று துழாவினான்.

2.(தீ) மூளுதல்; பிடித்தல்

ஒரு குடிசையில் பற்றிய தீ, காற்றினால் அருகிலிருந்த குடிசைகளுக்கும் பரவ ஆரம்பித்தது.

காடு பற்றி எரிந்தது.

3.(நோய், பழக்கம் முதலியவை ஒருவரை) தொற்றுதல்

ஒருவரைப் பற்றியிருக்கிற கண் நோய் பிறருக்கும் பற்றக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.

நல்ல பழக்கங்களைவிடக் கெட்ட பழக்கங்கள் நம்மை உடனே பற்றிக்கொள்வது ஏன்?

4.(பாத்திரம் முதலியவற்றில் உணவுப் பொருள்) படிதல்; ஒட்டுதல்

பாத்திரத்தில் பற்றியிருந்த சோற்றுப் பருக்கைகளைச் சுரண்டிக் கழுவினாள்.

------------------------------------------------------------

பற்று - பெயர்ச்சொல்

1.(உலக வாழ்க்கைமீது ஒருவர் கொண்டிருக்கும்) பிடிப்பு; விருப்பு


வாழ்க்கையில் பற்றுள்ளவர்களுக்குத்தான் முன்னேற வேண்டும் என்ற துடிப்பு இருக்கும்.

நான் என்ன பற்றற்ற துறவியா, எந்த ஆசையும் இல்லாமல் இருப்பதற்கு?

2.(ஒருவர் ஒன்றின் மேல் கொண்டிருக்கும்) தீவிர ஈடுபாடு

கட்சிப் பற்று வெறியாக மாறிவிடக் கூடாது.

தேசப் பற்று

மொழிப் பற்று


--------------------------------------------

பற்று - பெயர்ச்சொல்

(வியாபாரத்தில்) ஒருவர் திருப்பித் தர வேண்டிய பணத்தைப்பற்றிய விவரக் குறிப்பு

ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு என் பற்றில் எழுதிக்கொள்.

அவருடைய பற்றில் வர வேண்டிய பணம் பாக்கி ஏதாவது இருக்கிறதா?

---------------------------------

பற்று(பெயர்ச்சொல்)

  1. விருப்பம்
பற்று (வினைச்சொல்)

  1. கைப்பற்று
  2. வருவாய்
  3. விரும்பு
சொல்வளம்
  • கைப்பற்று, பின்பற்று
  • அகப்பற்று, புறப்பற்று
  • நாட்டுப்பற்று, சமயப்பற்று, மதப்பற்று, இனப்பற்று, மொழிப்பற்று
 
Top Bottom