You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

ரோசி கஜன்

Administrator
Staff member

தேவையான பொருட்கள்:

கோதுமை மா -750 கிராம்
முட்டைகள் -2
ஒலிவ் ஒயில் - 3 மேசைக்கரண்டி( நீங்கள் பாவிக்கும் எண்ணெய், அல்லது பட்டர் சேர்க்கலாம்)
ஈஸ்ட் - 7 கிராம்
சீனி - 3 தேக்கரண்டி
மிக இலேசான சூட்டில் பால் - 250 ml
தேவையானஅளவு உப்பு

உள்ளே வைக்கும் கறி:

கடுகு - அரைத்தேக்கரண்டி
பெருஞ்சீரகம் - அரைத்தேக்கரண்டி
பெரியவெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 3
இஞ்சி உள்ளி பேஸ்ட் - 2 தேக்கரண்டி
டின் மீன் - 2
உருளைக்கிழங்கு - 500 கிராம்
தனி மிளகாய்த்தூள் - 4 தேக்கரண்டி ( உங்கள் உறைப்புக்கு ஏற்ப போட்டுக்கொள்ளலாம்)
மஞ்சள்தூள் - ஒரு தேக்கரண்டி
கருவேப்பிலை கொஞ்சம்
எண்ணெய் -1மேசைக்கரண்டி

செய்முறை :

-முதலில் பாலில் சீனியையும் ஈஸ்டையும் கலந்து ஐந்துநிமிடங்கள் மூடிவையுங்கள். ஈஸ்ட் நன்றாக நொதித்து புசுபுசுவென்று மேலெழும்பியிருக்கும்.

-இதனுள் முட்டைகள், எண்ணெய், உப்புச் சேர்த்து ஒருதடவை கலக்கிவிட்டு மாவையிட்டு நன்றாகப் பிசைந்துகொள்ளுங்கள்.

இலேசாக ஓட்டும் பதத்தில்தான் மா இருக்கும் . கையால் பிசைவது என்றால் இருப்பது நிமிடம் சரி நன்றாகப் பிசைந்து மிகமென்மையாக எடுக்கவேண்டும். அதன் பின்னர் இரு மணித்தியாலங்கள் மூடிவையுங்கள்.

இரு மணித்தியாலத்தில் பின்,

கறி :

- உருளைக்கிழங்கை அவித்துத் தோல் நீக்கி பிசைந்தெடுத்து வையுங்கள்.

- எண்ணெய் சூடானதும் கடுகையிட்டு வெடித்ததும் பெருஞ்சிரகம், சிறிதாக வெட்டிய பச்சை மிளகாய், சிறிதாக வெட்டிய வெங்காயம் என்பவற்றை இட்டு வதக்கவும். மெல்லிய பொன்னிறம் வருகையில் இஞ்சி உள்ளி பேஸ்ட் சேர்த்துக்கொள்ளுங்கள். பின் கருவேப்பிலையையும் சிறிதாக அரிந்து சேர்த்துக்கொள்ளுங்கள்.
-நன்றாக வதங்கியதும் டின் மீனை உதிர்த்து விட்டுச் சேருங்கள். கூடவே மஞ்சள் தூள், மிளகாய்த்தூளும் இடவும். இரு நிமிடங்கள் கிளறிவிட்டு உருளைக்கிழந்கையிட்டு நன்றாகக் கலந்து இறக்கி ஆறியதும் தேசிப்புளி விட்டு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வையுங்கள்.

- எத்தனை பணிஸ் செய்ய வருதோ அந்தளவுக்கு உருட்டலாம்.

- மா தூவிய இடத்தில் மாவை எடுத்து வைத்து இன்னொருதடவை பிசைந்துவிட்டு( தூவியுள்ள மாவோடு சேர்த்துப் பிசைகையில் கையில் ஓட்டும் தன்மை போய்விடும். அதற்கென்று அதிகளவு மா சேர்த்துவிடவேண்டாம்.) நீட்டுவாக்கில் உருட்டிக்கொள்ளுங்கள். பின்னர் பண் செய்ய அளவாக வெட்டிக் கொள்ளுங்கள்.

(பணிஸ் செய்யும் போது எடுத்த PIC மிஸ் ஆகிவிட்டது. இது முதல் SOFT DINNER BUN செய்யும் போது எடுத்தது. இப்படித்தான் வெட்டவேண்டும் என்கிறதுக்குப் போட்டுள்ளேன்.)

- ஒவ்வொன்றையும் உருண்டையாக்கி வட்ட வடிவில் தட்டி உள்ளே கறியுருண்டை வைத்து முக்கோணமாக மூடி பேக் செய்யும் தட்டில் வைத்து விடுங்கள்.

பதினைந்து நிமிடங்களின் பின்னர் அடித்த முட்டையால் மேலே தடவி பேக் செய்து கொள்ளுங்கள். ( 180 C ல் 25 -35 நிமிடங்கள்)
 
Last edited by a moderator:

நிதனிபிரபு

சூப்பரா இருக்கு அக்கா
 
Top Bottom