You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

முகப்புத்தகத்தின் முகங்கள் - உஷாந்தி கௌதமன் - இதழ் 7

ரோசி கஜன்

Administrator
Staff member
1547576981197.png


பணம், மகிழ்ச்சி, பொன், பெண் எல்லாவற்றையும் தாண்டிக்கொண்டு மனிதனின் உள்ளார்ந்த தேடலில் முதலிடத்தில் இருக்கிறது, அடையாளம்! ஒவ்வொரு மனிதனும் தான் சார்ந்த கூட்டத்தில் somebody ஆக அறியப்பட விரும்புகிறான் /ள். அதற்காக அவர்களை அறியாமலே உழைக்கிறார்கள். அந்தக் கூட்டத்தில் அவர்களது நகர்வுகள் எல்லாமே அதை நோக்கித்தான் இருக்கும்!

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு ராணித்தேனீ இருக்கிறது. தாம் சார்ந்த வட்டத்தில் ராணித்தேனீயாகவே இருக்கிறான் /ள் . அந்தக் கூட்டத்தில் ஒரு தொழிலாளி, நண்பன், புகழ்பாடி, எதிரி இப்படிப் பலவகைகள் இருக்கும். இப்படிச்சொல்வது பொருத்தமாய் இருக்கும், நான் ஒரு ராணித்தேனீ! எனக்குத் தொழிலாளி, நண்பி, எதிரி தேனீக்கள் இருக்கின்றன. அதே சமயம் நான் வேறு சில தேனிகளுக்குத் தொழிலாளி, நண்பன், எதிரியாகவும் இருக்கிறேன்.. இது மிகச்சிக்கலான வலையமைப்பு! இங்கே பாத்திரங்கள் சரியாக வரையறுக்கப்படவில்லை! என் பாத்திரத்தைச் சூழலே தீர்மானிக்கிறது!

ஆனாலும் பாத்திரத்தாவல் நியாயமாக இருக்க வேண்டும். ஒரே சமயத்தில் இரு எதிரி ராணித்தேனிகளுக்கு நண்பனாய் இருப்பது சாத்தியம் இல்லை, பொதுவில்! ஆனால், இருக்கிறாய் என்றால் இருவரையும் திருப்திப்படுத்துகிறாய் என்று அர்த்தம்! அதாவது நீ நடித்துக்கொண்டிருக்கிறாய்!

இந்தச் சமூக வலைத்தளங்கள் இந்த ராணித்தேனீ மனநிலைக்கு ஆதரவாய் இருப்பதாலேயே கொண்டாடப்படுகின்றன!
அங்கே ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு தளம் இருக்கும். அங்கே அவன்/ள் தான் ராணி! அவர்களுக்கென்று அங்கே நண்பன் எதிரி, நடுநிலை என்று பல வட்டங்கள் உலாவும். அவற்றைத் தக்க வைக்க அவன்/ள் மிகக் கடுமையாய் உழைப்பான்!
முகப்புத்தகத்தில் உலவும் மனிதர்களைக் கவனித்து பார்த்தீர்களானால் சில வகைகளுக்குள் அடக்கி விடலாம்!ஒரு வகையினர் ...

யார் என்ன எண்ணுகிறார்கள் என்றே கவலைப்படார்! தான் படிப்பது, நினைப்பதையெல்லாம் ஸ்டேடஸ் ஆக போட்டுத்தள்ளுவார்கள். யார் தன்னைப் பின் தொடர்வது, இமேஜ் மெயின்டைன் பண்ணுவது பற்றியெல்லாம் கவலை கிடையாது. பெரும்பாலும் பொது விடயங்கள் தொழில் நுட்பம் பற்றித் தான் இவர்கள் பகிர்வார்கள். இவர்களை நாம் அறிவாளி என்று புள்ளடி போட்டு ஸ்டேடஸ் ஐ சும்மா ஒரு லுக் விடுவோம். முழுசா படிக்க மாட்டோம். ஆனால், ப்ளாக் பண்ணவும் மாட்டோம்! இப்படிப்பட்ட ஒருவருக்கு அரிதாகக் கமண்டுவது ரெண்டே வகை மக்கள் தான், ஒருவகை, அவர்களைக் கடுப்பாகி கலாய்க்கும் மக்கள். இன்னொரு வகை சிஷ்யப்பிள்ளைகள்! அவர்கள் பேசுகிறார்களோ அது தொடர்பான மீதி விஷயங்களைத் தேடி இதையும் பார் என லிங்கை வாரி வழங்கி அவர்களுக்கு எண்ணையாய் நிற்பார்கள். சில சமயம் நாம் கலாய்ப்பு கமன்ட்களை லைக்கி சிஷ்யப்பிள்ளைகளுக்கு விழிகளை உருட்டுவோம்!

அடுத்த வகை:


உலக விடயங்களில் ஆர்வமுள்ள தீர்கமான சிந்தனையாளர்கள். அதே நேரம் கலாய்தத்தலிலும் வல்லவர்கள். எப்போதும் கலகலப்பான ஸ்டேடஸ் உடன் வாழ்வார்கள் அப்பப்போ கிளம்பும் சீரியசான பேச்சிலேயே இவர்களின் அறிவாளித்தனம் தெரியும்! நாம் மிரள்வோம். கலாய்த்தல், பொது அறிவு என்ற இரண்டு குழுவும் இவர்களுக்கு பின்னே திரளும். நமக்கு இவர்கள் தளத்தில் பொழுது சூப்பராக போகும். ஒருவேளை நாம் இவர்களுக்கு அவ்வளவாக அறிமுகம் ஆகாதவர்கள் எனிலும் அவர்களை போலோவுவோம்! லைக்குவோம். கண்டிப்பாக கமண்ட மாட்டோம். அவர்களின் ஆளுமையில் நமக்கு லேசான பயம் இருக்கும். இவர்கள் இன்று என்ன செய்கிறார்கள் என்று பார்ப்பது நம் அன்றாட வேலையாக இருக்கும்.அடுத்த வகைஒரு விடயம் நடக்கும் போது அதை இன்னொருவன் ஸ்டேடஸ் இல் பார்த்து தான் அப்படியொரு விடயம் இருக்கிறது என்றே இவனுக்கு தெரியும். உடனே பார்ட்டி ஓடிப்போய் அந்த விடயத்தை தேடி ஏதோ அதைப்பற்றி முன் பின் சகலமும் தெரிந்ததைப் போல ஸ்டேடஸ் போட்டு விடும்! உதாரணமாய், யாரோ ஒருவர் பிறந்தநாள் வாழ்த்து வைரல் ஆனால் பயபுள்ளை அந்த மனுசனை முன்னே பின்னே பார்த்திருக்காது. ஆனால் ஓடிப்போய் உருகி உருகி வாழ்த்து சொல்லும்! ஆனால் பாருங்கள் இந்த வகைக்குக் கொஞ்சம் பின்தொடர்வோர் இருப்பார்கள். இரண்டு காரணம், ஒன்று அவனது வாய் ஜாலத்தில் மயங்குவது, இன்னொன்று அவனை பயன்படுத்தி தாங்கள் பிரபலமாக எண்ணும் மகா கேடிகள்!


இந்த வகை, பொதுவாகச் சில விடயங்களை கைவசம் வைத்திருப்பார்கள். உதாரணம் சுஜாதா, கல்கி, டாவின்சி போன்ற கொஞ்சம் பிரபலமான கேடயங்களை அவைகள் என்றால் தங்களுக்கு உயிர் போல காட்டிக்கொண்டு நானும் ரவுடி தான் என்று நிரூபிப்பார்கள். ஆரம்பத்தில் இவர்களுக்கும் மேலே சொன்ன வகைக்கும் வித்யாசம் புரியாது. ஆனால், போகப்போக இவர்கள் நான் பேசிய ட்ரெண்டில் போவது தெளிவாகப் புரியும். இவர்களை நாம் ப்ளாக் மட்டும் தான் செய்வோம். ஏனெனில் இவர்களின் உண்மை முகம் புரிந்தால் இவர்களை சகித்துக்கொள்வது மிகக்கடினம்.

இன்னொரு வகை...இவர்கள் உண்மையில் மேற்சொன்ன மூன்று வகையிலும் வர மாட்டார்கள். அவர்கள் தங்களைப் பெரிதென்று காட்டிக்கொள்ள எந்த முயற்சியும் செய்ய மாட்டார்கள். தங்களுக்கு தெரிந்ததை மட்டுமே வைத்து ஒட்டிக்கொண்டிருப்பார்கள், தங்கள் அளவில் ஒரு கூட்டத்தை சேர்த்துக்கொண்டு அவர்களைத் தக்கவைக்க தங்களால் ஆன முயற்சியை செய்வார்கள். கிட்டத்தட்ட அவர்கள் தளம் கட்டப்பஞ்சாயத்து தளம் போலவே இருக்கும். இவர்கள் பொதுவாக நம் இயல்புக்கும் எல்லைக்கும் அப்பாற்பட்டவர்கள். இவர்களோடு நாம் நட்பாகவும் மாட்டோம் லைக்கவும் மாட்டோம், கமண்டவும் மாட்டோம் ஆனால் தடயமே இன்றி அவர்கள் தளத்தைத் தவறாமல் பார்த்து நமக்குள் கலாய்த்துக்கொள்வோம். நமக்கு போர் அடிச்சா அவங்க எதுவும் ஸ்டேடஸ் போடலையா என்று தேடும் அளவுக்கு நமக்குச் சிறந்த ஊறுகாயாக விளங்குவார்கள்!அடுத்த வகை:நம்மை போலோவும்.. நாம் என்ன செய்கிறோமோ அதையே காப்பி பண்ணி தானும் செய்யும்..சில சமயத்தில் நம்மை காப்பி பண்ணுமளவுக்கு நம்மை பெரியவர்களாக நினைக்கிறார்களா என்று நாம் மகிழ்ந்து போனாலும் போகப்போக கடுப்பாகி இவர்களும் ப்ளாக் தான்!அடுத்த வகை:


fake id வைத்து ஆள் பிடிப்பவர்கள். நம்மில் பலர் மணந்து பிடித்து விடுவோம். ஆகவே இவர்களைப் பற்றி அவ்வளவாக பயம் இல்லை. சகலரும் அவதானமாக இருக்க வேண்டிய வகை இது.

அடுத்த வகை:காலையில் எழுவது முதல் பாத்ரூம் போவது வரை கல்வெட்டில் பொறிப்பது போல டைம் லைனில் பதிக்கும்! காலை வணக்கம் இரவு வணக்கம் என்று வணக்கம் சொல்லியே காலத்தை ஓட்டி விடுவார்கள்! இவர்கள் எங்கே என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை டைம் லைனிலேயே பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். அந்தளவுக்கு அதை ஒரு டயரி போல மெயின்டெயின் செய்வார்கள். இவர்கள் மற்றவர்களுக்குத் தோற்றமளிப்பவது சதா தொணதொணக்கும் ரேடியோ போலத்தான். அப்பப்போ நல்ல பாடல் வந்தாலும் தொணதொணப்பு காரணமாக நாம் சேனல் மாற்றி விடுவதால் அது கேளாமலே போகும்! இவர்கள் அநேகம் acquintance லிஸ்டில் தான் இருப்பார்கள்!அடுத்த வகை :முகப்புத்தகம் ஆரம்பித்தது மட்டும் தான் வேறு எந்த வேலையும் செய்ய மாட்டான். எந்த போஸ்டும் வராது.அப்பபோ அவன் பிறந்தநாளுக்கு யாரும் வாழ்த்திப் போயிருப்பார்கள். சும்மா பெயருக்கு அவனுக்கும் ஒரு தளம் இருக்கும். ஒரு தேவைக்கு மெசேஜ் போட்டாலும் ஆறு மாசம் கழித்தே ரிப்ளை வருவதால் கடுப்பாகி பொது ஜனங்கள் இவர்களை தங்கள் லிஸ்டில் சைலென்ட் ஆக ஏதாவது லிஸ்ட்டுக்கு மாற்றி விடுவார்கள்.

அடுத்த வகை ரொம்ப ஆபத்து மக்களே!ஸ்லீப்பர் செல்ஸ்! இவர்கள்.. கலகலப்பாக இருப்பார்கள், இவர்களுக்கென்று டேஸ்ட் இருக்கும். மேற்குறிப்பிட்ட அத்தனை வகையையும் புரிந்து கொண்டு அதற்கேற்ற நடவடிக்கை எடுத்த வண்ணம் திரை மறைவில் தங்களுக்கு மிக நெருக்கமானவர்களிடம் உள் பெட்டியில் சகல கலாய்த்தல்களையும் நிகழ்த்துவார்கள். இவர்கள் கமண்ட்ஸ் பொதுவாக சூப்பர் ஒரு ஸ்மைலி அல்லது பட்டுக்கொள்ளாமல் ஒரு சிரிக்க வைக்கும் ரிப்ளை இப்படித்தான் இருக்கும். இவர்களை நம்பி மற்ற வகையறாக்கள் பேசி வைக்கும் போது அதை அழகாக கேட்ச் பண்ணி தங்களுக்குள் ஓபன் செய்து சிரித்து மகிழ்வார்கள். மிக தந்திரமானவர்களும் புத்திசாலித்தனமானவர்களாகவும் இருப்பார்கள். இவர்களுக்கு நட்பு வட்டம் மிக அதிகமாய் இருக்கும்! அதற்கு காரணம் உங்களை நன்றாக புரிந்து கொண்டு ஊறுகாயாக அவர்கள் பொழுதை போக்குவதற்காக கூட இருக்கலாம்! உஷார் மக்களே!ஆனால், ஒரே ஒரு விடயம் நம்மில் பலர் இந்த வகையறாவில் தான் வருவோம். அனைவரையும் மிகச்சரியாக எடைபோட்டு அந்தந்த இடத்தில் வைத்து தங்களுக்கு மிக நெருங்கியவர்களிடம் மட்டும் பகிர்ந்து கொள்ளும் இவர்கள் செய்வதை நாம் தவரென்று கூறி விட முடியாது. எந்த விடயம் பொது வெளிக்கு வருகிறதோ அதைப் பிறர் பேசுவது சகஜம் தானே!

சரி இப்போது சொல்லுங்கள்... நீங்கள் எந்த வகை?


1547577019209.png
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Latest posts

Top Bottom