You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

வற்றாத நீரூற்று அறிவது எப்படி? - இதழ் 11

ரோசி கஜன்

Administrator
Staff member

நம் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை. அவர்கள் எதைச் செய்தாலும் அதில் ஆயிரம் நன்மைகள் இருக்கும். நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு என்பதும் மிகச் செறிவானதே.

அந்தக் காலத்தில் எப்படி எந்தத் தொழில்நுட்ப வசதிகளும் இல்லாமல்

கிணறு வெட்டினார்கள்?

கிணறு அமைப்பது என்பது அத்தனை எளிதான காரியமில்லை. பலர் சேர்ந்து உழைத்து உருவாக்கிட வேண்டிய ஒன்று.

ஒரு வேளை தோண்டிய கிணற்றில் தண்ணீர் வராமல் போய்விட்டால் அத்தனை உழைப்பும் வீணாகி விடும். அதைப் போலவே கோடையில் கிணற்றில் நீர் வறண்டு போகும் வாய்ப்பும் உள்ளது.

ஆனால், இவற்றிற்கெல்லாம் நம் முன்னோர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வந்த எளிய இலகுவான தீர்வுகள் இதோ :



மனையின் குறிப்பிட்ட ஏதாவது ஒரு பகுதியில்

பச்சைப் பசேலென புற்கள் அதிகளவில் வளர்ந்திருந்தால், அந்த இடத்தில் கிணறு தோண்டக் குறைந்த ஆழத்தில்

நீரூற்று தோன்றும் என்கின்றனர்.

சரி நீரூற்று இருக்கும். ஆனால் நல்ல நீரூற்று என அறிவது எப்படி ?

நவதானியங்களை அரைத்துக் கிணறு வெட்ட வேண்டிய நிலத்தில் முதல் நாள் இரவு தூவி விடவேண்டும். அடுத்த நாள் கவனித்தால் எறும்புகள் இவற்றைச் சேகரித்து ஒரே இடத்தில் கொண்டு சென்று சேர்த்த அடையாளங்கள், அதாவது தடயங்கள் இருக்குமாம். அந்த இடத்தில் கிணறு வெட்டினால் தூய சிறப்பான நன்னீர் கிடைக்கும் என்கிறார்கள் .

சரி தூய நீரும் கண்டு கொண்டாயிற்று. கோடை காலத்திலும் வற்றாத நீர் ஊற்று எந்த இடத்தில் இருக்கிறது என்று அறிவது எப்படி ?

கிணறு வெட்ட இருக்கும் நிலப் பகுதியை நான்கு பக்கமும்

அடைத்துவிட்டுப் பால் சுரக்கும் பசுக்களை அந்த நிலத்திற்குள் மேய விட வேண்டும். பின்னர் அந்தப் பசுக்களைக் கவனித்தால் மேய்ந்த பின் குளிர்ச்சியான இடத்தில் படுத்து அசை போடுகின்றனவாம் .

அப்படி அவை படுக்கும் இடங்களை நான்கு, ஐந்து நாட்கள்

கவனித்தால் அவை ஒரே இடத்தில் தொடர்ந்து படுக்குமாம். அந்த இடத்தில் தோண்டினால் வற்றாத நீரூற்றுக் கிடைக்குமாம்.
 
Top Bottom