கண்டு பிடிங்க பாக்கலாம்.
1. கடுமையான மலை நேரத்தில் ஒருவர் குடை பிடிக்காமல் பாதையில் நடந்துச் சென்றார். ஆனாலும், அவரின் ஒரு தலைமயிர் கூட நனையவில்லை. எப்படி?
2. ஒரு விமானம் பாக்கிஸ்தான் இந்தியா எல்லையில் விபத்துக்குள்ளானது. விபத்தில் தப்பியவர்களை எந்த நாட்டில் அடக்கம் செய்ய வேண்டும்?
3. ஒரு சுட்டிப் பையன் சுறுசுறுப்பாக விளையாடிக்கொண்டிருந்தான். அவனிடம் நான் உன் வயது என்ன தம்பி என்று கேட்டேன். அந்தப் புத்திசாலிக் குட்டிப் பையன் புதிராகப் பதில் அளித்தான்.
"இரண்டு நாட்களுக்கு முன் என் வயது 10. அடுத்த வருடத்தினுள் நான் 13வது வயதை எட்டிவிடுவேன். உங்களால முடிந்தால் என் வயதையும் பிறந்த நாளையும் கூறுங்கள்." என்றான்.
முடிந்தால் நீங்கள் கண்டுபிடித்துக் கூறுங்கள் பார்க்கலாம்.
மலையில் நனைய முடியாது... மழை யா இருந்தா தலையில் முடி இல்லாம சொட்டை இல்ல மொட்டையா இருக்கணும்
தப்பியவர்களை அடக்கம் செய்யமுடியாது
வயசு 11...