ஸ்ரீலங்கா வரலாற்றில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவன் படைத்த சாதனை! குவியும் பாராட்டுக்கள் - IBC

நிதனிபிரபு

Administrator
Staff member
ஸ்ரீலங்காவின் பல்கலைக்கழகங்களில் இடம்பெற்ற இளைஞர் பாராளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவன் புவனேஸ்வரன் வசந்தராஜ் மிக அதிக வாக்குள் வித்தியாசத்தில் இளைஞர் பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இளைஞர் பாராளுமன்றத்தேர்தல்கள் கடந்த மாதம் 22ஆம் திகதி நடந்து. இளைஞர் பாராளுமன்றத்துக்கென இலங்கையின் அனைத்துப்பல்கலைக்கழகங்களிலும் இருந்து தேர்தல் அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்ட இரண்டு நபருக்கான ஆசனங்கள் வழங்கப்படும்.

எனவே குறித்த ஆசனங்களுக்கு நபர்களை தெரிவுசெய்யும் தேர்தல் நேற்று 03.02.2020 அன்று இடம்பெற்றது.

இத்தேர்தல்களின் வாக்கு முடிவுகளின் அடிப்படையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த கலைப்பீட மாணவன் புவனேஸ்வரன் வசந்தராஜ் 2419 வாக்குகளைப் பெற்று அமோக வெற்றியீட்டியிருந்தார்.

ஸ்ரீலங்காவின் பல்கலைக்கழகங்களில் இடம்பெற்ற இளைஞர் பாராளுமன்றத் தேர்தலில் பதிவாகிய வாக்குகளில் அதிக வாக்குகளைக் பெற்று வெற்றியீட்டியமை குறிப்பிடத்தக்கது.

இதன் மூலமாக ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற இளைஞர் பாராளுமன்றத் தேர்தல் வரலாற்றில் புவனேஸ்வரன் வசந்தராஜ் தான் அதிகளவான வாக்குகளைப் பெற்று சாதித்திருக்கிறார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வெற்றியீட்டிய மாணவனுக்கு பல்கலைக்கழக மாணவர்களும், இளைஞர்களும் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.

 
Top Bottom