You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

Amazon Links of Rosei Kajan

Status
Not open for further replies.

ரோசி கஜன்

Administrator
Staff member
வாசகர்களுக்கு வணக்கம்!

எனது முடிவுற்ற கதைகளை இங்கே வாசிக்கலாம்.

வாசித்து முடிய, மறக்காது உங்கள் கருத்துக்களையும் பதிந்துவிட்டுச் செல்லுங்கள்!
 

ரோசி கஜன்

Administrator
Staff member
வாசகர்களிற்கு வணக்கம்!

‘மயிலிறகாய்’... எழுத்தில் என் இரண்டாவது குழந்தை.

‘நீயில்லாது வாழ்வேதடி’ தந்த மனமகிழ்வு இக்கதைக்கு வித்திட்டது.

இதம் தருமோ இந்த உறவுகள் எனும் தலைப்பில் இணையத்தில் எழுதிய இத்தொடர், அக்ஷ்யா இதழில் எனது முதல் குறுநாவலாக வெளியாகி மிகுந்த மனமகிழ்வைத் தந்தது.


“கிளிநொச்சியில், அன்பான விவசாய குடும்பத்தில் மூன்று பெண்சகோதரிகளில் மூத்தவளாக பிறக்கும் நாயகி அஞ்சலி!

திருமணம் எனும் உறவால் குடும்பத்தை விட்டு தொலைவில் விலகிச் செல்ல வேண்டுமே என்கின்ற கலக்கத்தை விழுங்கிக் கொண்டு வெளிநாட்டு வாழ்வுக்கு தயாராகிறாள் .’
அதிலிருந்து ஆரம்பிக்கும் அவள் வாழ்வுப் பயணத்தில் ஒரு நிலையான தரிப்பிடம் வரும் வரை கதை நகர்கின்றது.

அஞ்சலியின் வாழ்வின் பாதையில் பயணிக்க விருப்பமா ?

கதையை வாசித்து, பயணத்தை அனுபவித்து மகிழுங்கள் வாசகர்களே!


உங்கள் கருத்துக்களை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

அன்புடன் ,

ரோசி கஜன்





wrs.jpg


2 . மயிலிறகாய்


Amazon.in


Amazon.com
 
Last edited by a moderator:

ரோசி கஜன்

Administrator
Staff member
கடந்த 2014 ல் எழுத ஆரம்பித்த போது 3 சிறுகதைகளும் இரு குறுநாவல்களும் எழுதியிருந்த நான், 'காதல்' என்ற எனது சிறுகதையை வைத்து எழுதிய முதல் நாவல் இது!

பள்ளிக்காலம் என்பது ஓரழகு என்றால் பல்கலைக்காலம் என்பது பேரழகு. அந்தப் பேரழகில் உயிர் நட்புக் கொண்ட மூன்று இளம் பெண்களின் கலகலப்பும், அதேபோல நட்புக்கொண்ட மூன்று இளையவர்கள் நேசமும் கலப்பதே அன்பெனும் பூங்காற்றில்!

இந்தக் கதையினூடு பயணிக்கையில் நிச்சயம் உங்களது பள்ளிக்காலத்தின் நினைவுகளையோ பல்கலைக்காலத்தின் நினைவுகளையோ மீட்டிச் செல்லும் என்பதில் ஐயமில்லை. அதோடு, அன்பெனும் பூங்காற்றில் நனைந்திருக்கும் சொந்தங்களைப் பற்றியும் அவர்களுக்குள் உருவாகும் சின்னச் சின்ன பூசல்கள் பற்றியும், அவையெல்லாம் கலைந்து கடைசியில் அன்பு மட்டுமே எஞ்சிப்போய் மனித மனங்களை நிறைத்துவிடுவதையும் சுவாரசியம் குன்றாமல் சொல்லியிருக்கிறேன்.

வாசித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்!


anpenum pungkatril.jpeg




3. அன்பெனும் பூங்காற்றில்

Amazon.in

Amazon.com
 
Last edited by a moderator:

ரோசி கஜன்

Administrator
Staff member

வாசகர்களுக்கு வணக்கம்!

'உன்னில் என் நெஞ்சம் தடுமாறுதே!' இணையத்தில் ஐந்தாவதாக எழுதிய கதை. முதல் புத்தகமாக அருண் பதிப்பகத்தால் வெளிவந்தது. அந்தவகையில் எனக்கு மிக மிக விசேஷமான கதை.

இலங்கையைக் களமாகக் கொண்டு நகரும் கதை, யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் இன்னும் சில மாவட்டங்களுக்குமாகப் பயணப்படுகையில், உங்களையும் கைபிடித்து அழைத்துச் செல்லும் என்பது நிச்சயம்.

நாயகி பூஜா, தான் உணர்ந்த காதலை, உற்றவர்களின் நலனை முதன்மையாகக் கொண்டு எதிர்கொள்கிறாள்.

முடிவு?

அவள் நேசத்துக்கு ஜெயம் கிட்டியதா?

என்பதற்கான விடையாக நகரும் கதையில் வரும் மாந்தர் அனைவருமே உங்கள் நெஞ்சங்களை கொள்ளை கொள்வார்கள்.


உங்கள் கருத்துக்களை என் சைட் , முகநூல் பக்கம் என்பவற்றில் தெரிவிக்கலாம்.


e0ae95e0aeb5e0aeb0e0af8d-e0aeaae0af87e0ae9ce0af8d.jpg



5 . உன்னில் என் நெஞ்சம் தடுமாறுதே!

Amazon.in


Amazon.com
 
Last edited by a moderator:
Status
Not open for further replies.
Top Bottom