தனியே தன்னந்தனியே!

Posted on Updated on

அன்பார்ந்த வாசக உறவுகள் அனைவருக்கும் வணக்கம்.

எல்லோரும் நலமா? நானும் நலமே .

நாம் சந்தித்து நீண்ட நாட்களாகி விட்டது இல்லையா?

அதனால் ஒரு சிறுகதையோடு வந்திருக்கிறேன். சிறுகதை என்பது எனக்கு எப்போதுமே பெரும் சவால்தான் .சவால்கள் தான் எனக்குப் பிடிக்குமே . அந்த வகையில் ஒரு சிறு முயற்ச்சி. 

என் கன்னி முயற்ச்சி எப்படி இருக்கிறது என்று படித்துப் பார்த்துச் சொல்லுங்கள். உங்கள் கருத்துக்களை அறிய ஆவலோடு காத்திருக்கிறேன் .

நட்புடன் நிதா. 

தனியே தன்னந்தனியே!

4 thoughts on “தனியே தன்னந்தனியே!

  ரோசி said:
  November 5, 2016 at 11:42 pm

  ஹாய் நிதா,

  முதல் சிறுகதை எழுதும் சவாலான முயற்சியில் எங்களுக்கு அழகான கதை தந்திருக்கிரீர் .

  பார்ரா ! அதே சிறுகதை, அதில் கூட… வாசகர்களை கொதிக்க வைத்து விட்டீர் போல !

  யாஸ்மீன் , ஜெர்மனி பெண் என்று சொல்லிவிட்டதில் அவள் நடத்தையில் எனக்கு அதிகம் கோபம் வரவில்லை.

  காதல் என்பது நாம் என்னும் அளவுக்கு கனம் நிறைந்ததாக இங்கு பார்க்கப்படுகின்றதா ? என்றால் இல்லவே இல்லை என்றுதான் எனக்குத் தோன்றும் .

  ‘ஆமாம்! இன்று உன்னை நான் உயிராக நேசிக்கிறேன் .’ என்ற வார்த்தைகளும் அது குறிக்கும் அர்த்தங்களும் உணர்வுகளும் சமய சந்தர்ற்பங்களுக்கு ஏற்ப மாறக் கூடியவை .

  ஹ்ம்ம்… இந்தக் கதையில் அவள் ஆஹோ ஓஹோ வாழ்வை எதிர்பார்க்கவில்லை..ஆனால் அவன் தர முயன்றான் ..அப்போ அப்போ தனக்கு விரும்பியதை கேட்டு இவளும் பெற்றுக் கொள்கிறாள்..

  பிறகு? சரி சரி விடும் ..இது இங்கு சகஜம் என்றளவில் நானும் விடுகிறேன் .

  விக்ரம் நல்லவன் …அவன் வாழத்தான் வேண்டும் ..அதுக்காக இலங்கைக்கு ஏன்செல்வான்?ஹ்ம்ம்..என்று எனக்குத் தோன்றிச்சு .ஹா..ஹா..

  முதல் முயற்ச்சி வெற்றி ..இது தொடரட்டும் . வாழ்த்துக்கள் நிதா.

  Liked by 1 person

   NithaniPirabu's Novels responded:
   November 19, 2016 at 12:26 pm

   ஹாய் அக்கா,

   வெகு விரைவாக பதில் சொல்றேன்.. அது நிதா ஸ்டைல். நீங்க சொன்ன அத்தனையுமே உண்மைதான். அந்த விஷயங்கள் என் மனதையும் பாதித்தது. அதான் எதையும் யோசிக்காம மனதில் பட்டதை எழுதிட்டேன்.

   மிக்க நன்றிக்கா வாழ்த்துக்கும் பாராட்டுக்கும்!!!

   Liked by 1 person

  NithaniPirabu's Novels responded:
  November 5, 2016 at 7:49 am

  ஹாய் நிஷா,

  உங்களோட கருத்துத்தான் எனக்கும். யாஸ்மின் நல்ல பெண் என்கிற நிலையை இழந்தாச்சு.. அவள் நல்ல தோழியாவும் இல்லை.. நல்ல மனைவியும் இல்லை.. நல்ல தாயும் இல்லை.. அதுதான் உண்மை.. நிச்சயம் விக்ரமுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கும். உண்மை தெரியுமா, இது என் மகனின் நண்பனின் வீட்டுக்கு போனபோது தோன்றிய கதை.

  என் மனதை மிகவுமே பாதித்தது. என் பிள்ளையின் வயது. அப்பாவோடு தனியே இருக்கிறான்.. அந்த பாதிப்பு தான் இது உருவாக காரணம்,

  மிகவும் நன்றிமா.. படித்து கருத்து சொன்னதுக்கு.

  Liked by 1 person

  Nisha lashmi said:
  November 5, 2016 at 6:33 am

  ஹாய் நிதாக்கா..கதை என்றால் மிகவும் சிறப்பு தான்..உண்மை நிகழ்வு என்று தோன்றும் போது,அதுவும் பெண் ஜெர்மானிய பெண் எனும் போது..நிச்சயமாய் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவள் விக்ரமை,கணவனாக,காதலானாக,ஒரு நண்பனாக பார்த்திருந்தால்,அடுத்தவனை வீட்டுக்கு கூட்டி வந்து அறிமுகப்படுத்தியிருக்க மாட்டாள். கணவனிடம் மனம் விட்டுப் பேச வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்ளும் சூழல் இருந்தது.விக்ரம் ஒன்று கெட்டவனில்லையே.சொல்லியிருந்தால் புரிந்திருப்பான்..

  அவளுக்கு மனதில் கள்ளத்தனம் வந்துவிட்டது..விக்ரமை விட இவன் சிறந்தவன் என்ற எண்ணம் வந்துவிட்டது.பின்னே அதற்கு காதல் என்றும் பெயர் சூட்டியாயிற்று..அவள் போனது,விக்ரமுக்கு காயத்தை கொடுத்திருந்தாலும்,அதுவும் நல்லதற்கே..இப்படி ஒன்றை விட்டு இன்னொன்றுக்கு தாவும் குணம் கொண்டவள்,விக்ரமுக்கு வேண்டாம்..

  குழந்தை,கணவன் இல்லை என்றோ பழகிய நண்பன் என்ற அளவில் யோசித்திருந்தாலும்,விட்டுப் போயிருக்க மாட்டாள்.இப்படிப்பட்ட குணவதி,அவனை விட்டுப் போனதில்,எனக்கு நிம்மதியே..எங்கோ உன் குணத்துக்கு எற்றவனுடன் நீ போனது மகிழ்ச்சியே..நிச்சயம் விக்ரமுக்கு நல்ல வாழ்க்கையே கிடைக்கும்..கிடைத்திருக்க வேண்டும்.

  Liked by 1 person

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s