தனிமை துயர் தீராதோ!

இந்தக் கதையை எழுதியதற்காய் நிச்சயமாக மிகவும் சந்தோசமாக உணர்கிறேன்.

எந்த இலக்கையும் நிர்ணயிக்காமல் பொழுது போக்காக ஆரம்பித்த என் எழுத்து, ஏதோ ஒன்றை தொட்டதாய் இந்தக் கதை மூலம் உணர்கிறேன்.

அப்படி என்னை உணரவைத்த அழகான காதல் இது!

 

Thanimai thuyar theeraatho.. part 1

Thanimai thuyar theeraatho.. part 2

10 Comments

 1. மிகவும் நன்றி ஷர்மிளா. எந்தக் கதையை நான் எழுதினாலும் அவை எழுதிக்கொண்டிருக்கும் நேரத்தில் என் கதையின் நாயகர்கள் வாசகர்களிடம் திட்டு வாங்குவது வழமை. ஒவ்வொரு முறையுமே அது நடக்கக் கூடாது என்றுதான் நினைப்பேன். எப்படியும் நடந்துவிடும். ஆனால், நீங்கள் கீதன் மற்றும் தரசனை பிடித்திருக்கிறது என்றது.. ம்ம்.. எனக்கு இது மிகவும் பிடித்திருக்கிறது.

  சித்ரயாழி.. அர்த்தம் எனக்கு தெரியாது ஷர்மி. சித்ரா என்பது என் பள்ளிக்காலத்து தோழியின் பெயர். யாழினி என்கிற பெயர் எப்போதுமே எனக்கு பிடிக்கும். இரண்டையும் இணைத்துவிட்டேன். அதோடு, முடிந்த வரையில் அழகான பெயர்களை தேடுவது வழக்கம். அப்படித்தான் இந்தப் பெயரும் அமைந்தது. மற்றும்படி அர்த்தம்.. அதை நானறியேன்.

  நீங்க தர்சனை வர்ணித்த இடத்தில் உங்கள் தந்தையை நினைத்ததுபோல் நானும் என் அப்பாவின் நினைவில் தான் அதை எழுதினேன்..

  என்னுடைய அடுத்த நெடுங்கதை மிகவுமே அடாவடியான நாயகன் தான். காதலியை அவளே அறியாமல் கடத்திச்சென்று மணம் புரியும் அளவுக்கு அடாவடியாக இருப்பான். அவனுக்கு குறையாத ஆடாவடியாக அவனின் அவள் இருப்பாள். எழுத நேரம்தான் இல்லை. பாக்கலாம்.

  நன்றி! உங்களின் அன்பான வேண்டுகோளுக்கு. நிச்சயம் நீங்கள் கேட்ட அனைத்தும் இருக்கும் அந்தக் கதையில்.

  என் மெயில் id: nithaprabu@gmail.com

  நட்புடன் நிதா.

  Like

 2. Hi Nithani,

  தங்களை இணையதளத்தின் வாயிலாக சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. நான் முதன் முதலில் படிக்க ஆரம்பித்தது ரமணிச்சந்திரன் அம்மா அவர்களின் நாவல்களை தான். சிலர் நன்றாக எழுதுகிறார்கள் பலர் சுமார் தான். இரண்டு பக்கங்கள் படித்ததும் தெரிந்துவிடும் எழுத்து எப்படி என்று. நான் 10 நாட்களுக்கு முன்பு தான் உங்களை பற்றி முதன் முதலாக வாசித்தேன். உங்களின் ஒரு திரியை பிடித்து உங்கள் கதையின் அத்தியாயங்களை தேடினேன். ஆனால் என்னால் உங்கள் கதைகளின் முழுமையான pathippu எனக்கு கிடைக்கவில்லை. மிகவும் சோர்வடைந்து உங்களுக்கு ப்லோக் ஏதாவது இருக்கிறதா என்று தேடினேன். என் முயற்சி வீண் போகவில்லை. உங்களின் வேர்ட்பிரஸ் ப்லோக் லிங்க் எனக்கு கிடைத்தது. ஒரு உந்துதலில் தான் “இன்னுயிராவை என்னுயிரே ” என்கிற தங்கள் கதையை வாசித்தேன். என்னால் லேப்டாப் விட்டு எழ முடியவில்லை. எனக்கு இரண்டு சின்ன குழந்தைகள், களைப்புற செய்யும் என் அலுவல், வீட்டு வேலைகள், என்று பல பொறுப்புகள் தான் வாழ்க்கை. வாஷிங்டனில் எங்களது வாசம். இவை எல்லாவற்றையும் மீறி உங்கள் கதை என்னை கட்டிபோட்டுவிட்டது. எவ்வளவு அழகான கதை தெரியுமா? நான் அசந்துவிட்டேன். கதையின் கரு, மற்றும் நீங்கள் அதை எழுதிய பாங்கு , இலங்கை தமிழ் என்று அசரடித்துவிட்டீர்கள். என்ன சொல்ல நான்? அற்புதம் என்று தான் சொல்ல வேண்டும். பல இடங்களில் நான் மிகவும் தடுமாறிப்போனேன். வியப்பு, அவா, கோவம், கையாலாகாத்தனம் என்று பல உணர்ச்சிகளை கொடுத்து விட்டீர்கள்!

  இது உங்கள் முதல் கதையை படித்து.

  என்னை மிகவும் பாதித்தது “தனிமை துயர் தீராதோ”. அழுதேன் நான்! கதற வைத்து விட்டீர்கள்! என்ன அருமையான கதாப்பாத்திரங்கள்… அடேயப்பா… அற்புதமாக இருந்தது. அழுதுகொண்டே படித்தேன்! அவ்வளவு நிறைவு என் மனதில்… ஒரு அழகான கதையாய் படித்ததற்கு..

  கீர்த்தனன் – நெஞ்சை அள்ளும் கதாப்பாத்திரம். ஒரு ஆண் மகனுக்குள் இருக்கும் அனைத்து உணர்வுகளையும் என்ன அருமையாக வடித்துவிட்டீர்கள்!
  அவருடைய பொறுப்பு, கோபம், கனிவு, ஆளுமை, தனிமை, துயர், காதல், அக்கறை… இவை எல்லாம் என்னை மிகவும் பாதித்துவிட்டன. அருமையான கதாப்பாத்திரம். மித்ராவின் கதாப்பாத்திரம் கேட்கவே வேண்டாம். அருமையிலும் அருமை…

  உங்கள் எழுத்து நடைக்கு நான் தலை வணங்குகிறேன். அருமையான கதை கரு!!! உங்கள் எழுத்து பனி மேன்மேலும் தொடர என் வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். தயவு செய்து எழுதுவதை நிறுத்தாதீர்கள்!!! உங்களை வேண்டி கேட்டு கொள்கிறேன்!!!!

  I am an ardent fan of your writing style, Nithani! Such brevity and richness in your writing!!! Tamilnadu tamil ellam ungalidam pichai ketka vendum. You did not use any english words in your stories. Amazing! I liked the Srilankan places such as Vavuniya, Kilinochi, Thirikonamalai.. I read about all these places on internet after reading your novels. I wanted to visit these places immediately. That was how much I was interested and moved by your narration of the places. That too I had tears in my eyes when you explained about Thirikoneshwarar, Vadu maatha and Vatraapalai amman kovil.

  Amazing character names – Priyadarshan, Keerthanan!!!!! Azhagaana peyargal.

  Please continue writing, and please please please – I want more Keerthanan and Priyadarshan!!!! Meendum “Thanimai thuyar theeratho” and “Ennuyiraavai Innuyire” maathiriyana kathaikalai kodukka vendi virumbi kettukkolkiren!

  Happy New Year!! Good luck with all your novels!

  Thank you! Take Care.

  Sharmila Natarajan

  Liked by 1 person

  1. ஹாய் ஷர்மிளா,

   உங்களைப்போலவே நானும் இன்றுவரைக்கும் ரமணிச்சந்திரனின் மிகப்பெரிய ரசிகை. அவரின் எழுத்தில் ஒரு தரமிருக்கும். பெண்ணுக்கான கண்ணுக்கு தெரியாத போராட்டம் இருக்கும். தூய்மையான அன்பு இழையோடும். இதெல்லாம் அவருக்கான தனிப்பாணியும், நம்மை இன்றுவரை கட்டிப்போட்டிருக்கும் மாயக்கயிறும்!

   அப்படியானவரின் கதைகளை பிடித்த உங்களுக்கு என் கதைகளும் பிடித்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி!

   இன்னுயிராவாய் என்னுயிரே கதை.. என்ன சொல்வது.. உங்களின் பாராட்டில் அசந்துவிட்டேன். மிக்க நன்றி!!

   காதலித்தவர்கள் ஒன்று சேர்வதுதானே எல்லா கதைகளிலும் நடப்பது. அதோடு, ஒரு பெண்ணுக்கு காதலிப்பவனை மெய்யாகவே பிடிக்காமல் போனால்? இந்த சிந்தனை தான் அந்தக் கதை உருவாகக் காரணம். அதை எழுதி முடிக்கும் வரையிலுமே மனதில் ஒரு கேள்வி இருந்துகொண்டே இருந்தது. நான் நினைக்கும் வகையில் அந்தக் கரு என் வாசகர்களை சென்று சேருமா என்று. இன்று அதற்கான பதிலும் அதை எழுதியதற்கான மன நிறைவும் உங்கள் மூலம் கிடைத்துவிட்டது.

   தனிமை துயர் தீராதோ.. இந்தக் கதையை பற்றி சொல்வதானால் சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் உங்களின் வார்த்தைகள்.. என்னை அப்படியே கட்டிப்போட்டுவிட்டது என்றுதான் சொல்வேன். மெய்யாகவே என் நெஞ்சார்ந்த நன்றிகள். அதுவும் உங்களை கதற வைத்துவிட்டதாக சொன்னீர்கள்.. இதைவிட வேறென்ன வேண்டும் எனக்கு? அந்தக் கதைக்குள் நம்மை மீறி ஆழ்ந்தாள் அன்றி கண்ணீரோ சிரிப்போ நமக்கு வராதில்லையா..

   என்றும் என் எழுத்து நிற்காது என்றுதான் நினைக்கிறேன். ஒரு வரி எழுதினாலும் மனதுக்கு பிடித்து எழுதுகிறேன். உங்களை போன்றவர்களின் அன்பும் பாராட்டும் என்னை விடாது. நிச்சயம் எழுதுவேன். உங்களின் அன்புக்கும் அன்பான வேண்டுகோளுக்கும் நன்றி ஷர்மி.

   ரமணிம்மாவின் ரசிகையாக இருக்கும் நீங்கள் என் எழுத்துக்கு தீவிர ரசிகை என்றது.. இதை எனக்கான அங்கீகாரமாகவே கருதுகிறேன்.

   I liked the Srilankan places such as Vavuniya, Kilinochi, Thirikonamalai.. I read about all these places on internet after reading your novels

   இதை விரும்பித்தான் ஒவ்வொரு முறையும் இலங்கையின் ஒவ்வொரு இடத்தை நான் கதைக்களமாக எடுப்பதே. என் விருப்பங்கள் நிறைவேறுவதில் மிகவும் சந்தோசம்.

   That too I had tears in my eyes when you explained about Thirikoneshwarar, Vadu maatha and Vatraapalai amman kovil.

   உண்மைதான். ஆண்டவன் சக்தி என்பது மனித சக்திக்கு அப்பாற்பட்டது. அதை எழுதும்போது நானும் இதையே உணர்ந்திருக்கிறேன். மனம் சிலிர்க்கும். அதுவும் இறைவனின் செயலே!

   மிக்க மிக்க நன்றி உங்களின் அன்பான பாராட்டுக்கும் வாழ்த்துக்களுக்கும்!! உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களும் வரப்போகும் தைத்திருநாள் வாழ்த்துக்களும்.

   நேரம் கிடைக்கையில் என் மற்றைய கதைகளையும் படித்துப்பாருங்கள். பிடிக்கும் என்று நம்புகிறேன். பிடிக்காவிட்டாலும் உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.

   நட்புடன் நிதா.

   Like

   1. வணக்கம் நிதநி,

    எப்படி இருக்கிறீர்கள்? உங்களின் பதிலை பார்த்ததும் மிக்க மகிழ்ச்சி! மிக்க நன்றியும் கூட… உங்களின் வேலைகளுக்கு நடுவில், எனக்காக நேரம் ஒதுக்கியதற்கு நன்றி…

    இன்னும் கூட நான் கீர்த்தனன் மற்றும் ப்ரியதர்ஷன் இவர்களை பற்றி தான் யோசித்து கொண்டிருக்கிறேன். மித்ரா மிகவும் பொறுமைசாலி. சித்ரயாழி பட பட பட்டாசு… பெயர் அற்புதம்! சித்ரயாழி அர்த்தம் என்ன என்று சொல்ல முடியுமா? அழகும் இனிமையும் சேர்ந்தவள் என்ற? அருமையான பெயர்.. பல தருணங்களில் அவள் என்ன செய்வாள் என்ன பேசுவாள் என்பது வெகு த்ரில்லுங்காக இருந்தது… அருமையான பெண் கதாப்பாத்திரம்! எனக்கு மஞ்சுளா – ப்ரியதர்ஷனின் அம்மாவின் கதாப்பாத்திரம் மிகவும் பிடித்தது!! அருமையான மாமியார்! அவர் பிரச்சனைகளை கையாண்ட விதம் மற்றும் மகனுக்காக மருமகளுக்காக துடிக்கும் துடிப்பு… எல்லாம் அருமை…

    ப்ரியதர்ஷனை நீங்கள் வர்ணித்தது (கதையின் முடிவில் வற்றாப்பளை அம்மன் கோவிலில்) மிக அருமை. வேட்டி கட்டி நடையயை எட்டி போட்டு வரும் அழகு என்பது தமிழ் ஆண்களுக்கே உரித்தான அழகு, கம்பீரம் என்று தான் சொல்ல வேண்டும்.. என் தந்தையை தான் நினைத்து கொண்டேன்.

    “என் சோலை பூவே” நாவலை படித்து கொண்டிருக்கிறேன். படித்துவிட்டு வருகிறேன்.

    மீண்டும் ஒரு அடாவடியாக ஹீரோ அண்ட் மிக அருமையான கதை, கதாப்பாத்திரங்கள் மற்றும் ஆழமான உணர்ச்சிகள் என்று ஒரு கதையை நீங்கள் எழுதவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    அன்புடன்,
    ஷர்மிளா நடராஜன்

    Liked by 1 person

   2. ஹாய் நிதநி,

    உங்களுடைய email id கொடுக்க முடியுமா? I can type my comments and communicate with you through emails.

    Thanks,
    Sharmila

    Liked by 1 person

   3. மிகவும் நன்றி ஷர்மிளா. எந்தக் கதையை நான் எழுதினாலும் அவை எழுதிக்கொண்டிருக்கும் நேரத்தில் என் கதையின் நாயகர்கள் வாசகர்களிடம் திட்டு வாங்குவது வழமை. ஒவ்வொரு முறையுமே அது நடக்கக் கூடாது என்றுதான் நினைப்பேன். எப்படியும் நடந்துவிடும். ஆனால், நீங்கள் கீதன் மற்றும் தரசனை பிடித்திருக்கிறது என்றது.. ம்ம்.. எனக்கு இது மிகவும் பிடித்திருக்கிறது.

    சித்ரயாழி.. அர்த்தம் எனக்கு தெரியாது ஷர்மி. சித்ரா என்பது என் பள்ளிக்காலத்து தோழியின் பெயர். யாழினி என்கிற பெயர் எப்போதுமே எனக்கு பிடிக்கும். இரண்டையும் இணைத்துவிட்டேன். அதோடு, முடிந்த வரையில் அழகான பெயர்களை தேடுவது வழக்கம். அப்படித்தான் இந்தப் பெயரும் அமைந்தது. மற்றும்படி அர்த்தம்.. அதை நானறியேன்.

    நீங்க தர்சனை வர்ணித்த இடத்தில் உங்கள் தந்தையை நினைத்ததுபோல் நானும் என் அப்பாவின் நினைவில் தான் அதை எழுதினேன்..

    என்னுடைய அடுத்த நெடுங்கதை மிகவுமே அடாவடியான நாயகன் தான். காதலியை அவளே அறியாமல் கடத்திச்சென்று மணம் புரியும் அளவுக்கு அடாவடியாக இருப்பான். அவனுக்கு குறையாத ஆடாவடியாக அவனின் அவள் இருப்பாள். எழுத நேரம்தான் இல்லை. பாக்கலாம்.

    நன்றி! உங்களின் அன்பான வேண்டுகோளுக்கு. நிச்சயம் நீங்கள் கேட்ட அனைத்தும் இருக்கும் அந்தக் கதையில்.

    என் மெயில் id: nithaprabu@gmail.com

    நட்புடன் நிதா.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s