நினைவெல்லாம் நீயாகிட வந்தேன்..!!

18426422_259998427805201_524463775_o

வணக்கம் உறவுகளே…,

எல்லோரும் நலமா? நானும் நலமே!! மற்றோர் கதை மூலம் மீண்டும் உங்கள் எல்லோரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி!

இந்தக் கதையின் முதல் இரண்டு அத்தியாயங்களும் உங்களுக்கு பரிட்சயமானது. அதன் பிறகு வரப்போவதும், புதிதாக எதுவுமில்லை. பலர் சொன்னதையே நானும் சொல்லப் போகிறேன், எனக்குத் தெரிந்த வகையில். அவ்வளவுதான்!

இதுவும் பெரும்பாலும் பதினைந்து அத்தியாயங்களில் முடிந்துவிடும்!! சின்னக் கதைதான், ஆனாலும் உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன். பெரிய திருப்பங்கள் இன்றி.. அழகான நீரோடையாக.. சலசலப்புக்கள் ஏதும் இன்றி உங்கள் மனதில் மென் நதியாக பாயும் என்கிற நம்பிக்கையுடன் வந்திருக்கிறேன்.

இதற்கு முதல் எழுதிய “திருடிய இதயத்தை திருப்பிக்கொடு” கதையை படித்துவிட்டு பலர் திட்டினார்கள். பாராட்டும் கிடைத்ததுதான்.. அதைவிட மேலாக திட்டுத்தான் கிடைத்தது. நிதாவின் கதைக்குள் நிதாவை காணவில்லையாம். நான் என்ன செய்ய? ஆனாலும், உரிமையோடு உங்கள் மனதை திறந்து உங்களிடம் இதைத்தான் எதிர்பார்க்கிறோம் என்று நீங்கள் சொல்கையில்.. மனதில் அத்தனை நிறைவாய் உணர்கிறேன்.

இந்தக் கதையும் பெரிய அழுத்தமில்லை. ஆனால் இங்கேயும் உணர்வுகளின் போராட்டம் உண்டு.. மனதின் அலைபாய்தல்கள் உண்டு.

மற்றும்படி.. கதையை பற்றி என்ன சொல்ல.. அழகான ஒரு சிறு மலர் இந்தக் கதையின் முக்கிய பாத்திரம். அவ்வளவுதான்.

எப்போதும் போல உங்களின் கருத்துக்களை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.

நட்புடன் நிதனிபிரபு.

1 Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s