என்னைப்பற்றி

என்னைப்பற்றி நானே எப்படிச் சொல்வது?

பெருமை பேசுவதாக ஆகாதா? நான் வேறு தன்னடக்கம் நிறைந்தவள். பிறகும் எப்படி?

அதனால், நீங்கள் தான் என்னைப்பற்றி சொல்லவேண்டும். அப்படிச் சொல்லும்போது ஆங்காங்கே கண்ணே மணியே போட்டு பாராட்டிவிட்டுப் போங்கள்!

ஒரு ஜீவன் உங்களின் பாராட்டு மழையில் நனைந்துவிட்டு போகட்டுமே! காசா பணமா?

“நான்” என்கிற என்னை எனக்குள் இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன்.

நீங்கள் எங்காவது கண்டுபிடித்தால் என்னிடம் கொண்டுவந்து சேருங்கள்.

என் கற்பனையில் பிறந்த கதை குழந்தைகளை பரிசாக வழங்கக் காத்திருக்கிறேன்!

இந்த உலகத்தில்தான் எல்லோரும் வாழ்கிறோம்! ஆனாலும், அவரவருக்கு என்றும் தனித்தனி உலகங்கள் இருக்கின்றன! அதுதான் கனவுலகம்! கற்பனைகள் நிறைந்த மிக அழகான உலகம்! நமக்கே நமக்கானது! எனக்கான என் கற்பனையுலகில் என்னை நானே தேடி சென்றபோது பிறந்தவைதான் இந்தக் கதைகள். அவைகள் உங்கள் பொன்னான நேரத்தில் ஒரு சில நொடிகளையேனும் களவாடிச் செல்லுமானால், அதைவிட வேறு பேறுகள் இருக்காது என்பது என் திண்ணமான எண்ணம்!

இதுவரைக்கும் ஆறு கதைகள் http://ladyswings.com/community/ தளத்தில் எழுதி இருக்கிறேன்.

  1. நேசம்கொண்ட நெஞ்சமிது..!
  2. எந்தன் உறவுக்கொரு உயிர்கொடு..!
  3. இதயத்துடிப்பாய் காதல்..!
  4. என் முகவரியாக உன் முகமன்றோ..!
  5. இன்னுயிராவாய் என்னுயிரே…!
  6. தனிமை துயர் தீராதோ..!

நம்மை சுற்றி நடக்கும் விசயங்களை, என்னை பாதித்தவைகளை எழுத்தில் வெளிக்கொணர்வது எனக்கு மிக பிடித்தமான ஒன்று. அந்த ‘எனக்கு பிடித்தவைகள்’ உங்களுக்கும் பிடித்ததா என்று ஒருமுறை வந்து பாருங்களேன்! ஏமாற்றம் கிடைக்காது என்றே நம்புகிறேன்.

நட்புடன் நிதா.