அறிவிப்புகள்

ஹாய் பிரெண்ட்ஸ்,

என்னுடைய நான்காவது கதை அருண் பதிப்பகம் மூலம் புத்தகமாக வெளியாகி இருக்கிறது! மிகவும் சந்தோசமாக உணர்கிறேன். ‘என் முகவரியாக உன் முகமன்றோ..!’ என்று எழுதியது ‘என் சோலை பூவே..!’ என்கிற பெயரில் உங்கள் கைகளில் தவழ இருக்கிறது. 

ரகசிய கமராக்கள், போட்டோக்கள் இப்படி பலவற்றின் மூலமாக பெண்களை மிரட்டுவதும் முடக்குவதும் என்று மனித நேயமற்ற ஆண்கள் சிலரால் பெண்களுக்கு அநியாயங்கள் நடத்தப்பட்டுக்கொண்டு இருக்கின்ற காலமிது!

ஒரு பெண் தன் வாழ்க்கையை காப்பாற்ற இதே ஆயுதத்தை தன் கையில் ஏந்தினால் எப்படி இருக்கும் என்கிற சிந்தனையே இந்த கதை உதிக்க காரணம்!

என் வாசக உறவுகளாகிய உங்களின் ஆதரவு இல்லாமல் இது சாத்தியமேயில்லை!! இந்த நெகிழ்வான தருணத்தில் உங்கள் எல்லோருக்கும் என் நெஞ்சின் ஆழத்தில் இருந்து மனதார நன்றிகளை உரித்தாக்குகிறேன்!!

அதே நேரம் என் கதைகளை புத்தகமாக வெளியிடும் அருண் பதிப்பகத்துக்கும் என் நன்றிகள் பல!!

மிக்க மிக்க நன்றி உறவுகளே…!!

நட்புடன் நிதா.

 

4_9356