என் பிரியமானவளே14 – 1

மனதெங்கும் நிரந்தரமாகத் தங்கிவிட்ட கலக்கத்துடனேயே நடமாடிக்கொண்டிருந்தார் ஜெயராணி. மகனின் மணவாழ்க்கை மீதான ஐயம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போயிற்று. இப்போதெல்லாம், அவரின் மனக்குறைகளைக் காட்டிலும், அவன் சந்தோசமாகக் குடும்பம், குட்டி என்று வாழ்ந்தால் போதும் என்கிற நிலைக்கு வந்திருந்தார்.

 

“இப்பிடியே இருந்தா எப்பிடித் தம்பி? பாமினின்ர கலியாணத்தை அப்பா எப்பிடியாவது செய்து வைப்பார். நீ அதைப்பற்றி யோசிக்காம அவளோட சேர்ந்து வாழுற வழியைப்பார்.” மகன் இந்த முடிவை எடுக்கப் பிரதான காரணமாக மகளின் திருமணம் இருந்ததில் அப்படிச் சொன்னார் அவர்.

 

அவனுக்கு அதற்கும் கோபம் தான் வந்தது. “என்னப்பாத்தா எப்பிடித் தெரியுது உங்களுக்கு? சுயநலம் பிடிச்சவன் மாதிரியா? நான் என்ன செய்யவேணும் எண்டு எனக்குத் தெரியும். நீங்க பேசாம இருங்கம்மா!” என்று அவரையும் வாயைத் திறக்கவிடாமல் செய்தான் அவன்.

 

‘தம்பி உன்ர கோபத்தைக் கொஞ்சம் குறை’

 

‘அவளும் பாவம். இப்பிடி தனியாவே இருக்கவோ உன்ன கட்டினவள்.’

 

‘வாழ்க்கை என்ன உனக்கு விளையாட்டா போச்சோ? இதே மாதிரி உன்ர தங்கச்சிக்கு நடந்தா என்ன செய்வ?’ என்று எவ்வளவு சொல்லியும் அவன் கேட்கமறுத்தான்.

 

இப்படி, தினம் தினம் அன்னைக்கும் மகனுக்கும் வார்த்தைகள் முட்டிக்கொண்டு நின்றது. மீண்டும் பிரியந்தினியிடம் எடுத்துப் பேசவும் அவருக்கு மனதில்லை. மற்றவர் சொல்லுவதைக் கேட்கிற குணம் அவளுக்கு இல்லை என்கிற எண்ணம், அவருக்குள் அழுத்தமாகப் பதிந்து போயிற்று. மகனும் இறங்கி வர மறுக்க, அந்தக் கோபமும் மருமகளின் புறமாகத் திரும்பி நின்றது.

 

இவர்களால் மகளின் வாழ்க்கை பாதித்துவிடுமோ என்கிற பயம் இப்போதெல்லாம் அடிக்கடி வந்தது. அதில், பாமினிக்கு இப்போதே திருமணம் செய்துவிட முடிவு செய்தார். அவளோ மாட்டேன் என்று தன் பிடியில் நிலைத்து நின்றாள். அவளின் பிடிவாதம் அவருக்குக் கோபத்தைக் கிளம்பிற்று.

 

“உனக்கும் உன்ர அண்ணின்ர குணம் தொத்திட்டுது போல. அதுதான் சொல்வழி(சொல்லும் வழி/ சொல்வதை) கேக்கிறாய் இல்லை, என்ன? இப்பிடி அடம் பிடிச்சு நீயும் உன்ர வாழ்க்கையைக் கெடுத்துப்போடாத!” என்று அதட்டி, அடக்கி, சம்மதிக்க வைத்தார். அதே வேகத்துடன் மாப்பிள்ளையும் பார்த்து முடித்துவிட்டுத்தான் ஓய்ந்தார்.

 

அது, அவள் வீட்டினரின் வாயிலாகப் பிரியந்தினியின் காதுக்கும் எட்டியது. கோகுலன் வீட்டிலிருந்து யாருமே அவளிடம் ஒரு வார்த்தை சொல்லவே இல்லை. அவளை அவர்கள் தம் குடும்பத்துப் பெண்ணாகப் பார்க்கவில்லையா? என்னதான் அவள் மீது கோபம் என்றாலும் கோகுலன் கூடச் சொல்லவே இல்லையே?

 

அன்னையோடு பேசிவிட்டு நேராக அவனுக்கு அழைத்தாள்.

 

“சொல்லு!”

 

“பாமினிக்குக் கலியாணம் பேசுப்படுதாம். ஒரு வார்த்த நீங்க கூட எனக்குச் சொல்ல இல்லையே?” மனதில் குமுறலோடு கேட்டாள் அவள்.

 

“நீயும் சேர்ந்து நடத்தியிருக்க வேண்டிய விசயத்த ஆரோ ஒருத்தர் எடுத்துச் சொன்னாத்தான் தெரியும் எண்டுற இடத்தில உன்ன வச்சது நீதான். நான் இல்ல! பிறகு என்னத்துக்கு நான் எடுத்துச் சொல்லவேணும்?” என்று திருப்பிக் கேட்டான் அவன்.

 

“அப்ப, இதுக்கும் நான் தான் காரணம் எண்டுறீங்களா?” மனம்

நொந்த குரலில் வினவினாள்.

 

error: Alert: Content selection is disabled!!