தனிமைத் துயர் தீராதோ 26 – 4

அவளுக்குச் சேவகம் செய்வதில் அவனுக்கு ஒன்றும் குறை இருப்பதாகத் தோன்றவில்லை. இதையெல்லாம் செய்தால், எதையெல்லாம் அவளிடமிருந்து சலுகையாகப் பெறலாம் என்று கள்ளமாகக் கணக்குப் போட்டது அந்தக் கள்வனின் மனது!

 

கப்பை பெட்சைட் மேசையில் வைத்துவிட்டு, ஒருக்களித்துப் படுத்திருந்தவளை அப்படியே அள்ளிக்கொண்டு அவள் நெற்றியில் தன் இதழ்களை அழுத்தமாகப் பதித்தான்.

 

தூக்கம் மெல்லக் கலைய, “கீ..த..ன்.. உறங்கவிடுங்கள்..” என்று சிணுங்கினாள் அவள்.

 

“ஹேய்! என்னடி இது? கீதன் என்கிறாய்?” ஆசையும் ஆவலுமாக அவன் கேட்க, அவனோடு இன்னுமே ஊன்றிக்கொண்டு, “என் கீதன்தான்!” என்றாள் அவள் ஆசையோடு.

 

அப்படி அவள் காட்டிய உரிமையில், சும்மாவே அவளிடமிருந்து தள்ளியிருக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தவனின் நிலையோ பெரும் பரிதாபத்துக்கு உரியதாய் மாறிற்று!

 

“என்னடி செல்லம் இது? என்னை இப்படிச் சோதிக்கிறாயே..” என்றவனின் கைகள் சில்மிசங்களில் ஈடுபடத் தொடங்க, “ச்சு கீதன்.. சும்மா இருங்கள். உடம்பெல்லாம் வலிக்கிறது.” என்று அப்போதும் சிணுங்கினாள் அவள்.

 

“உடம்பெல்லாம் வலிக்கிற அளவுக்கு என் மித்து அப்படி என்ன செய்தாளாம்?” சந்தோசச் சிரிப்போடு கேட்டான் அவன்.

 

“செய்தது எல்லாம் நீங்கள்! வலிமட்டும் எனக்கு..” என்றவளின் குரலும் இப்போது கொஞ்சத் துவங்கியதில், அவன் முற்றிலுமாகத் தன்னை மறந்து அவளில் மூழ்கியே போனான்.

 

கூடல் முடித்து எழுந்தவன், “இப்போ நான் என்ன திரும்பக் குளித்துவிட்டு வரவேண்டுமா?” என்று மனைவியிடம் கேட்டுச் சிரித்தான்.

 

அவள் புரியாமல் விழிக்க, தேநீர் கப்பை கொண்டு வரும்போது அவன் நினைத்ததையும், அதே திரைப்படங்களில் அதன் பிறகு நடப்பதையும் சொல்லி சிரித்தவன், அவள் குளிக்கையில் தானும் அவளோடு குளிக்கத் தவறவே இல்லை.

 

அதன் பிறகும் அவளைச் சுற்றிக்கொண்டே திரிந்தாலும், அவளை வெளிக்கிடச் சொன்னான்.

 

“எங்கே கீதன்?” என்று கேட்டவளிடம், புதிராகச் சிரித்தானே தவிர வாயை திறக்கவே இல்லை.

 

சற்று நேரத்தில் வித்யா வந்துவிட, “நீ பள்ளிக்கூடம் போகவில்லையா?” என்று கேட்டாள் மித்ரா.

 

“இன்றைக்கு லீவ் எடுக்கச் சொல்லி அத்தான் தான்க்கா சொன்னார். அண்ணாவும் அத்தானுமாகச் சேர்ந்து என்னவோ ப்ளான் செய்கிறார்கள். என்னிடம் ஒன்றையுமே சொல்லவில்லை.” என்றவளின் விழிகளில் தமக்கையின் கன்னத்தில் தெரிந்த கன்றல் போன்ற சிவப்புத் தெரியவே,

“என்னக்கா இது காயம்? என்ன நடந்தது?” என்று அவள் கன்னத்தைத் தொட்டுக்காட்டிக் கேட்டாள்.

 

மித்ராவுக்கோ குப்பென்று முகம் சிவந்துவிட்டது. என்ன சொல்வாள்? கணவனின் பற்கள் பட்டதால் உண்டான காயம் என்றா? அல்லது மோகத்தில் முத்துக்குளித்ததில் உண்டான சாட்சியம் என்றா?

 

பதில் சொல்லாத தெரியாமல் தவித்தபடி கணவனைப் பார்த்தாள்.

 

கைகளைத் தலைக்குப் பின்னால் கோர்த்தபடி இலகுவாகச் சாய்ந்திருந்தவனின் உதடுகளில் இளம்புன்னகை. விழிகளோ குறும்போடு மனைவியை விழுங்கின. “என்ன காயம் என்று சொல்லேன் மித்து.” என்றான் வேண்டுமென்றே.

 

வெட்கத்தில் கீழுதட்டை அவள் பற்களால் பற்ற, அத்தானை முறைத்தாள் வித்தி.

 

“அக்காவுக்குக் காயம் பட்டிருக்கிறது. அதற்கு மருந்துபோடாமல் உங்களுக்கு என்ன சிரிப்பு வேண்டியிருக்கிறது?” என்று படபடத்தாள்.

 

“அவளிடம் கேள், நான் மருந்து போட்டேனா இல்லையா என்று. நடந்தது தெரியாமல் என்னைத் திட்டாதே வித்தி..” என்றவன், மச்சினி அறியாமல் மனைவியிடம் கண்ணைச் சிமிட்டினான்.

 

அவளோ தங்கையின் முன்னால் அவனை எதுவும் செய்யமுடியாமல் தவித்தாள். அப்படி அவளைத் தவிக்கவைத்து அதை ரசிக்கவேண்டும் என்பதுதானே அவனது ஆசையே! அதை விடுவானா அந்தப் பொல்லாதவன்!

 

அவளின் அவஸ்தையை அணுவணுவாக ரசித்தான்!

 

அவனை நம்பாத பார்வை பார்த்துவிட்டு, “அத்தான் மருந்து போட்டாரா அக்கா..” என்று கேட்டாள் வித்தி.

 

காயத்தை உண்டாக்கியவனே தன் இதழ்களால் மருந்திட்ட மாயத்தை என்னவென்று சொல்வது? செய்வதையெல்லாம் அவன் செய்துவிட்டு இப்படித் தங்கையிடம் மாட்டி விடுகிறானே!

 

முறைக்க எண்ணி விழிகள் அவனிடம் பாய்வதும், கேலியாக அவன் ஒற்றைப் புருவத்தை உயர்த்தியதும் பட்டெனப் பார்வையைத் திருப்புவதுமாக இருந்தவளுக்கு, இந்தக் கண்கள் எதற்கு அந்தப் பொல்லாதவனைப் பார்க்கிறது என்று பொய்க்கோபமும் உண்டானது!

 

சிரமப்பட்டுத் தன்னை அடக்க முயன்றபடி, “அதைவிடு வித்திம்மா. நாளைக்குக் கணிதப் பரீட்சை என்றாயே. அதற்குப் படித்துவிட்டாயா?” என்று, அவளைத் திசை திருப்புவதற்குள் படாத பாடு பட்டுப்போனாள் மித்ரா.

 

அவனோ, வெகு மும்முரமாக அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

 

“அதெல்லாம் படித்துவிட்டேன் அக்கா. நான் இன்று வரவில்லை என்று மெயில் அனுப்ப வேண்டும். எங்கே உங்களின் லாப்டப்..” என்று கேட்டபடி அவளின் அறைக்குள் வித்யா செல்ல, மனைவியை நெருங்கினான் கீதன்.

 

தன் கரங்கள் இரண்டாலும் அவள் முகத்தை ஏந்தி, கட்டை விரலால் காயம் பட்ட கன்னங்களைத் தடவிக்கொண்டே, “இரவிரவா மருந்து போட்டுமா இந்தக் காயங்கள் இன்னும் ஆறவில்லை?” என்றான் சரசமாக.

 

வெட்கத்தில் உடல் முழுவதும் சிவக்க, அவனிடமிருந்து விலகி ஓடமுயன்றவளை தன்னறைக்குள் இழுத்துக்கொண்டவன், அவளைச் சுவரோடு சாத்தி அவள்மீது தானும் சாய்ந்து, “மருந்து போடமுதல் எங்கே ஓடப்பார்க்கிறாய்?” என்று கேட்டான்.

 

“ஒன்றும் வேண்டாம். விடுங்கள்!2 என்றவள் பேச்சை எங்கே கேட்டான் அவன். ஆசையோடு அவள் கன்னங்களில் பற்கள் பதியக் கடித்தான்.

 

சுகமான வலி.. மோகத்தோடு அவளுக்குள் மோதியது! அந்த இதமான இம்சை இன்னும் வேண்டும் என்றுதான் அவளுக்கும் தோன்றியது.

 

மயங்கிப்போய் நின்றவளின் காதருகில் குனிந்து, “காயம் ஆறிவிட்டதா?” என்று கிசுகிசுத்தான்.

 

error: Alert: Content selection is disabled!!