தனிமைத் துயர் தீராதோ 48 – 1

ஒரு வாரம் கடந்திருந்தது. அன்று வேலை முடிந்ததும், தந்தையின் விசயமாக வைத்தியர்களை கண்டு கதைத்துவிட்டு அம்மாவையும் போய்ப் பார்த்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிய சத்யன் முற்றாக களைத்துச் சோர்ந்துபோயிருந்தான்.

 

அலுப்போடு வந்தவனின் விழிகள், வீட்டுக் கதவை திறந்ததுமே பவித்ராவைத்தான் தேடியது.

 

அவளைக் காணவில்லை என்றதும் மனம் இன்னும் சோர, ‘கீழே நிற்கிறாளோ?’ என்று எண்ணிக்கொண்டு அவளின் அறையை எட்டிப் பார்த்தான்.

 

அங்கே, சிவப்பு நிற ரோஜாப்பூக்கள் நிறைந்துகிடந்த ரோஸ் நிற விரிப்பு அலங்கரித்த கட்டில் மெத்தையில், மஞ்சள் நிறத்தில் முழங்கால் வரையிலான ஒரு பாவாடையும் குட்டி ப்ளவுஸும் அணிந்தபடி தானும் ஒரு ரோஜாவாக குப்புறப் படுத்துக்கிடந்தாள் பவித்ரா. என்ன ஒன்று கால்களை ஆட்டிக்கொண்டிருந்தது அந்த உயிருள்ள ரோஜா!

 

ஒருகணம் மூச்சை விடவும் மறந்து அவளின் அழகை ரசித்தான் சத்யன். அதுவரை இருந்த களைப்பும் சோர்வும் மறைய, உற்சாகம் பீறிட்டது. அவனது உற்சாகமாய், உயிர்ப்பாய் அவளிருந்தாள். அதுவரை அவனை அழுத்திய தந்தை பற்றிய கவலை கூட அவனைவிட்டு ஓடிப்போனது என்பதுதான் உண்மை.

 

விழிகளோ மனையவளின் அழகை அப்பட்டமாய் விழுங்கின. முன்னும் பின்னுமாய் ஆடி வாழைத்தண்டாய் பளபளத்த கால்கள் வேறு அவனை வாவென்று அழைக்க, மெதுவாக காலடி எடுத்துவைத்து மனைவியை நெருங்கினான்.

 

அவள் கையில் ஏதோ ஒரு சித்திரம் இருக்கவும், ‘நான் வந்தது கூடத் தெரியாமல் இவ்வளவு முனைப்பாக எதைப் பார்க்கிறாள்?’ என்று எண்ணியபடி சற்றே எட்டிப் பார்த்தவன் இனிமையாக அதிர்ந்தான்.

 

அது அவனது ஓவியம்! சற்றே கூர்ந்து பார்த்தவனுக்கு, அன்று முதன் முதலாக தன்னைக் கண்ட கோலத்தை வரைந்திருக்கிறாள் என்று புலப்படவும், தான் எவ்வளவு ஆழமாக அவள் மனதில் சிம்மாசனம் இட்டிருக்கிறோம் என்று விளங்க உள்ளம் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தது.

 

அவளின் விழிகளை மூட எண்ணி கைகளை அவள் முகத்தருகில் அவன் கொண்டுபோக, அனிச்சை செயலாக திரும்பிப் பார்த்தாள் பவித்ரா.

 

அங்கே கணவனைக் கண்டதும், புரண்டு படுத்தபடி, “ஹேய் ஜான்! என்ன நேரத்துக்கே வந்துவிட்டீர்கள்?” என்று துள்ளலாக வினவினாள்.

 

அவளுக்கு ஒரு ஆனந்த அதிர்ச்சி கொடுக்கலாம் என்று எண்ணியவன் அது சறுக்கியதில் சின்ன ஏமாற்றமாக உணர்ந்தான். அடுத்த கணமோ, திரும்பிப் படுத்த மனைவி படைத்த விருந்தில் ஒருகணம் மூச்சு விடவும் மறந்தான்!

 

அற்புதமாய் கிடைத்த விருந்தை அள்ளிப்பருகின அவன் விழிகள்!

 

‘இவன் ஏன் இப்படி நிற்கிறான்?’ குழப்பத்தோடு அவனை பார்த்தாள் பவித்ரா. அவன் விழிகளோ வேறெங்கோ இருந்தது.

 

‘எங்கே பார்க்கிறான்?’ அவன் பார்வை சென்ற இடத்துக்கே தன் பார்வையை திருப்பியவள் சட்டெனச் சிவந்தாள். அது அவளின் மணிவயிறு! புரண்டு படுத்ததில் மேல்சட்டை மேலேறியிருந்தது!

 

வேகமாக சட்டையை இழுத்துவிடப் போன கைகளை அதைவிட வேகமாகத் தட்டிவிட்டது அவன் கை!

 

“ஜா..ன்!” வெட்கமும் சிரிப்புமாக அவள் அதட்ட,

 

அவளருகில் அமர்ந்து, “மூடி என்ன செய்யப் போகிறாய்? நான் பார்க்காமலா இருக்கப் போகிறேன்?” என்றவனின் கை அவளின் இடையில் பதிந்து அழுந்தியது. பார்வையோ மாறியது.

 

மூச்சடைத்தது பவித்ராவுக்கு. ஆனாலும், இருவரின் உணர்வுகளோடும் விளையாட விரும்பாமல் கட்டிலில் இருந்து வேகமாக அவள் இறங்க முயல, இடையில் பதிந்திருந்த கரத்தால் அவளை அழுத்தி அசையவிடாமல் செய்தான் சத்யன்.

 

அதிர்வோடு அவனைப் பார்த்தாள் பவித்ரா. அவளது இடையில் பதிந்த கரம், அழுத்தத்தோடு அங்குமிங்கும் அசைந்து எல்லைகளை மீற அவளை நோக்கி மெல்லக் குனிந்தான் சத்யன்.

 

கணவனின் கைகள் புரிந்த ஜாலத்தில் சிந்திக்கவும் மறந்தவளாக அவளிருக்க, விழித்துக்கொண்ட அவளது பெண்மையோ அவனிடம் தன்னைக் கொடுத்துவிடும் வேகத்தில் துடிக்கத் தொடங்கியது.

 

அவனது இதழ் முத்தத்துக்காக அவளது இதழ்கள் துடிக்க, அதன் துடிப்பை அடக்கியது அவனது உதடுகள்!

 

முத்தச்சாவி கொண்டு திறந்து விடப்பட்ட உணர்ச்சிகள் அத்தனையும் விழித்துக்கொள்ள, கிறங்கி விழிமூடியவள் தன் கைகளால் கணவனின் கழுத்தை வளைத்தாள். அப்படியே அவனது அடர்ந்த சிகைக்குள் நுழைந்த கரங்கள், சிகையை இறுக்கமாகப் பற்றிக்கொள்ள மயங்கிப்போனான் சத்யன்.

 

அணையை உடைத்த வெள்ளமாய் வேகத்தோடு அவளுக்குள் மூழ்கத் தொடங்கினான். கணவனின் கைகளும் இதழ்களும் கேட்டவைகளை இசைந்து கொடுக்கத் தொடங்கியது பவித்ராவின் பூமேனி!

 

அவளது உடலையும் உயிரையும் மயக்கி, தன் ஆளுகைக்குள் அவன் கொண்டுவந்தபோது விழித்துக்கொண்டது பவித்ராவின் நெஞ்சம்.

 

அண்ணாவும் அண்ணியும் ஒவ்வொரு பக்கமாக இருக்க அவர்கள் மட்டும் இல்லறத்தில் இன்புற்று வாழ்வதா?

 

கணவனை தடுக்கச்சொல்லி மூளை சொன்னாலும், உணர்வுகள் கொந்தளித்துக்கொண்டிருந்த தேகமோ அவனோடு இன்னுமின்னும் அழுத்தமாக இழைந்தது.

 

அவளின் அனுசரிப்பில் சத்யனின் கைகள் இன்னுமே வேகமெடுக்க, இதற்குமேல் போனால் தன்னால் கூட அவனைத் தடுக்க முடியாது என்றெண்ணியவள் நடுங்கிய கரங்களால் கணவனுக்குத் தடைபோட முயன்றாள்.

 

அவனோ அதையெல்லாம் கவனிக்கும் நிலையில்லை!

 

காட்டாற்று வெள்ளமாக அவளுக்குள் மூழ்கிக் கொண்டிருந்தவனை தன் பலமெல்லாம் ஒன்றாகத் திரட்டி தன்னிலிருந்து பிரித்துத் தள்ளினாள் பவித்ரா.

 

அதை எதிர்பாராதவன், ஒருகணம் ஒன்றும் புரியாமல் அவளைப் பார்த்து விழித்தான்.

 

“என்ன பவி?” மோகம் கொண்டு முறுக்கேறிப் போயிருந்தவனின் குரல் கரகரப்போடு ஒலித்தது.

 

அந்தக் குரலே அவளுக்குள் என்னவோ செய்ய, அவன் விழிகளில் தெரிந்த அழைப்பில் அனைத்தையும் மறந்து அவனுடன் கலந்துவிடத்தான் அவளும் துடித்தாள்

 

error: Alert: Content selection is disabled!!