நேசம் கொண்ட நெஞ்சமிது 29 – 2

“என் மனைவிக்கு நான் செய்யாமல் வேறு யார் செய்வார்? ம்..? அது என் கடமை இல்லையா..” என்றான் இதமான குரலில்.

கண்களில் நீர் நிறைய, “அத்தான்….” என்றவள் சிறு விசும்பலுடன் அவனின் இடையை இறுக்கிக் கட்டியபடி, அவனின் வயிற்றுக்குள் முகத்தை புதைத்துக்கொண்டாள்.

“வதுக்குட்டி. இங்கே பார். இதென்ன அழுகை? நிமிர்ந்து என்னைப் பாருடா..” என்று கொஞ்சியவனின் கைகளோ அவளின் தலையை அன்புடனும் ஆசையுடனும் தடவிக்கொடுத்தது.

அவன் வயிற்றிலிருந்து தலையை நிமிர்த்தி, “என்னைக் குட்டி என்று கூப்பிடாதீர்கள் என்று சொல்லி இருக்கிறேனா இல்லையா…..” என்று முறைத்தவளின் விழிகளை இளாவின் விழிகள் காதலுடன் கவ்விக்கொண்டது.

குறும்பு மின்ன கண்களாலேயே காதல் மொழி பேசியவனின் விழி வீச்சை தாங்கமுடியாது, தலையைக் குனிந்துகொண்டாள் வதனி.

“வதூ…..” தாபத்துடன் அழைத்தவனின் தேவையை, அவள் கன்னத்தை தடவிய அவன் கரங்களின் உரசல் அழகாய் சொல்லியது.

கன்னம் சிவந்தவளுக்கு சம்மதத்தை சொல்லும் வழிதான் தெரியவில்லை.

அவன் இடையை சுற்றியிருந்த அவள் கைகளின் இறுக்கம் அதிகரித்து அவனுக்கு அழைப்பை விட, அனுமதி கிடைத்ததில் அகம் மகிழ்ந்தவன், கதிரையில் இருந்தவளை அப்படியே அள்ளிக்கொண்டான்.

வதனியின் கரங்கள் அவனுக்கு மாலையிட, மொத்தமாய் மயங்கியவன் அதை முத்தமாய் மாற்றி அவள் நெற்றியிலே இதமாய் இதழ் பதித்தான்.

அவளின் வெண்ணிறச் சருமம் கூசிச் சிலிர்க்க, கண்களை இறுக மூடி அவன் இதழின் இனிமையை ரசித்தவளின் அந்த நிலை, அவனை அடியோடு வீழ்த்தியது!

அவளின் முழு முகத்தையும் சுகம் விசாரித்துக்கொண்டது அவன் இதழ்கள். முக விசாரிப்பு முற்றுப்பெறாததில், கழுத்தின் வளைவிலும் கதை பேசத்தொடங்கியது அவன் உதடுகள்.

வதனி அணிந்திருந்த சேலை, அவளின் நளினங்களை பகிரங்கப்படுத்த, மின்மினியாய் மின்னிய இடையின் அழகில் தன்னையே தொலைத்தான் அந்தக் காதலன். என்னவென்று சொல்ல முடியாத தேடல் அவனுள் தொடங்கியது.

இமைக்காது அவளின் அழகையே அளந்தது அவனின் விழிகள். கண்களைத் திறந்த வதனிக்கு அவனின் பார்வையின் வேகம் அவளின் உடலையே சிவக்க வைத்தது.

சிவந்த மேனியவளின் வெட்கச்சிவப்பு அவனை விருந்துக்கு அழைக்க, வேகமாய் அணைத்தவனின் அணைப்பு அவளை நிலைகுலையச் செய்தது. அவனின் அணைப்பு இறுக இறுக, அந்த அணைப்பின் இறுக்கத்தில் தன்னைத் தொலைத்தாள் அவள்.

இருவருமே தங்களை மறந்தனர். இளாவின் சூடான இதழ்கள் வதனியின் கழுத்து வளைவில் புதைய, கைகளோ கன்னியவளின் மென் இடையை வளைத்தது. இடையை வளைத்த அவனின் கரங்களுக்கு இடப்பற்றாக்குறை வரவே, அவை அத்துமீறி நுழைந்தது அவளின் மேனிக்குள்.

அவனின் சூடானா மூச்சுக்காற்று அவளின் முகத்தில் மோத, அவன் பதித்த வேக முத்தங்களில் தன்னிலை இழந்து, அவன் கைகளில் நெகிழ்ந்தாள் வதனி. மிச்சம் மீதி இருந்த நிதானத்தையும் இழக்க செய்தது அவன் கைகள் செய்த சிருங்காரம்.

“வனிம்மா, சாப்பாடு தயாராகிவிட்டது. வாருங்கள் சாப்பிட…” என்ற மாமியாரின் அழைப்பில் சுயத்துக்கு திரும்பிய இளவழகன், இன்னுமே அவன் மீது சாய்ந்திருந்தவளின் அழகை அணு அணுவாக ரசித்தான்.

சாய்ந்திருந்தவளின் கன்னத்தில் மெதுவாய் தன் உதடுகளை பதித்து, “வது.. மாமி சாப்பிடக் கூப்பிடுகிறார்கள்…” என்றான் கிசுகிசுப்பாய்.

படக்கென்று கண்களை திறந்தவள், “என்னது? அம்மா கூப்பிடுகிறார்களா.. முதலே சொல்ல வேண்டாமா.. அத்தான், றக்கிவிடுங்கள்…” செல்லக்கோபத்தில் ஆரம்பித்து சிணுங்களில் முடித்தாள்.

கண்களில் குறும்பு ஒளிர, கைகளில் தாங்கி இருந்தவளை, கைகளின் இறுக்கத்தை குறைக்காது, மெல்ல மெல்ல கீழே அவன் இறக்கவும், நிதானத்திற்கு வந்திருந்த அவளின் முகமோ மறுபடியும் செவ்வான நிறமாய் சிவந்துபோனது.

கீழே இறங்கியதும் வெட்கத்தில் சிவந்த முகத்தை மறைத்தபடி, அவன் நெஞ்சில் கைகளை வைத்து அவனைத் தள்ளி விட்டவள், “நீங்கள் மகா மோசம்…” என்றபடி வெளியே ஓடினாள்.

வாய்விட்டுச் சிரித்தவனின் மனமோ சொல்ல முடியா சுகத்தில் மூழ்கிக் கிடந்தது.

முகம் முழுதும் சிரிப்புடன் அவன் அறையை விட்டு வெளியே வரவும், வாசன் வீட்டுக்குள் வரவும் சரியாக இருந்தது.

வந்தவனுக்கு இளாவின் முகமும் அவன் வதனியின் அறையில் இருந்து வெளியே வந்ததும் நடந்த அனைத்தையும் சொல்ல, மகிழ்வோடு திரும்பியவனின் கண்களில், சிவந்த முகத்துடன் வந்த வதனி பட்டாள்.

“அடி மதி.. இங்கே ஒரு சிடுமூஞ்சி மதிவதனி என்று ஒருத்தி இருந்தாளே… அவளைத் தெரியுமா உனக்கு…?” என்றான் கிண்டலாக.

“அவளா.. அவள் எலிமூஞ்சி கீர்த்திவாசனுடன் எங்கேயோ போய்விட்டாள்…” என்றாள் வதனியும்.

“என் முகத்தைப் பார்த்தால் உனக்கு எலிமூஞ்சி மாதிரியா இருக்கிறது…” என்று அவன் சண்டைக்கு வந்தான்.

“என் முகத்தைப் பார்த்தால் உனக்கு சிடுமூஞ்சியாகவா தெரிகிறது…” என்று இவளும் சண்டைக்கு ஆயத்தமானாள்.

“வனி!!” கலைமகளின் அதட்டலில் வாசனை ஒரு வெட்டும் பார்வை பார்த்துவிட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டாள் வதனி.

“அவர்கள் சிறு வயதில் இருந்தே இப்படித்தான். நீங்கள் தப்பாக நினைக்காதீர்கள் தம்பி….” என்று மன்னிப்பு கோரும் குரலில் இளாவிடம் சொன்னார் கலைமகள்.

மருமகன் மகளைத் தவறாக நினைத்து அவர்களுக்குள் மீண்டும் பிரச்சினை வந்துவிடுமோ என்று பயந்தார் அவர்.

இவர்களின் செல்லச் சண்டையை ரசித்துக்கொண்டிருந்த இளா, “எனக்கு தெரியும் மாமி. நீங்கள் வதுவை ஒன்றும் சொல்ல வேண்டாம். அவள் அவளாகவே எப்பவும் போல் இருக்கட்டும்…” என்று அவரின் பயம் அவசியமற்றது என்பதை அவருக்கு புரியவைத்தான் அவன்.

கலைமகளுக்கு மனம் நிறைந்தது.

கிண்டல், கேலி, சின்னச்சின்ன சண்டை, இளா வதனியின் யாருமறியா சீண்டல்கள் என்று அழகாய் கடந்தது அந்த மதிய உணவு வேளை.

சாப்பிட்ட பிறகு, இளா மதியின் திருமணப்பேச்சு எழவும், வெட்கத்தில் இளாவின் பின் மறைந்துகொண்டாள் வதனி. எல்லோரும் சிரிக்கவும், அவளை இழுத்து தன்னருகிலேயே இருத்திக்கொண்டான் இளவழகன்.

“அவளை உங்கள் அருகில் இருத்திக்கொள்ள உங்களுக்கு ஒரு சாட்டு…” என்ற வாசனின் கேலியை, சட்டையில் இருக்கும் தூசியை தட்டுவதைப் போல தட்டிக்காட்டினான் இளவழகன்.

அதைப் பார்த்து வதனி கலகலத்து சிரிக்கவும், பொய்யாக அவளை முறைத்த வாசனின் மனமோ, தோழியின் வாழ்வு மலர்ந்ததை நினைத்து நிறைந்துபோயிற்று!

எங்கே திருமணத்தை வைக்கலாம் என்பது பற்றி பேச்சு வரவும், “சித்திவிநாயகர் கோவிலில் செய்வோம்…” என்றாள் வதனி எல்லோரையும் முந்திக்கொண்டு.

இளாவின் பார்வை அவளை ஆசையுடன் அள்ளிக்கொள்ளவும், “நடக்கட்டும் நடக்கட்டும்….” என்றான் வாசன் நக்கலாக.

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock