பவித்ராவோ வாய் வார்த்தைகள் எதையும் உதிர்க்காது, அவன் மார்பில் கிடந்த கற்றை முடிகளை வருடிக் கொடுத்தவள் அப்படியே தன் இதழ்களையும் அங்கே ஆழமாகப் பதித்தாள். தன் மனதை உணர்த்தும் விதமாக!
இனிமையாய் அதிர்ந்தான் சத்யன். அவனது தேகம் சிலிர்த்தது. அடுத்த நொடியே அவளின் எலும்புகள் அத்தனையும் நோருங்கிவிடுமோ என்கிற அளவுக்கு அவளை இறுக்கி அணைத்திருந்தான்!
சூடான மூச்சுக்காற்று அவளின் கன்னத்தில் மோதி அவளுக்குள் அனலை பரப்பியபோது, தன்னுடைய சின்னச் செயல் அவனுக்குள் இவ்வளவு பெரிய மாற்றத்தை உண்டாகுமா? அந்தளவு தூரத்துக்கு தான் அவனைப் பாதிக்கிறோமா என்றெண்ணியவளுக்கு அந்த நினைப்பே தித்தித்தது.
அந்தத் தித்திப்போடு, “என்னை எந்தளவுக்குப் பிடிக்கும் ஜான்?” என்று ஆவலோடு அவள் கேட்க,
தன் அணைப்பிலிருந்து அவளைப் பிரிக்காமல், மாம்பழக் கன்னங்களை வருடிக் கொடுத்தபடி, “எனக்கு என் அம்மாவை பிடிக்கும். தங்கையை பிடிக்கும். அக்காவை மிக மிக பிடிக்கும். ஆனால் உன்னை..” என்றவன் கள்ளச் சிரிப்போடு, “அதையெல்லாம் தாண்டிடா..” என்றான் கண்ணைச் சிமிட்டி.
“அதையும் தாண்டி என்றால்?” தலையை சரித்து அவள் கேட்க, “கிட்டவா..” என்றவன், பேசிய ரகசியத்தில் அவள் செங்கொழுந்ந்தாகிப் போனாள்.
“சீச்சீ ஜான். வெட்கமே இல்லையா உங்களுக்கு?” என்று அவள் கேட்க,
“இதையெல்லாம் கதைக்கிற அளவுக்கு!” என்றான் அவன் அவளையே விழிகளால் விழுங்கிக்கொண்டு
பவித்ராவுக்கோ இவனா இவ்வளவு நாட்களும் சாமியார் வேஷம் போட்டான் என்று ஆச்சரியமாக இருந்தது.
கண்களில் நேசம் மின்ன அவள் பார்க்கவும், அதில் தன்னைத் தொலைத்தவன் தன் இதழ்களை அவளின் விழி மலர்களின் மீது மென்மையாகப் பதித்தான்! அப்படியே கீழிறங்கிய உதடுகள் கன்னத்தில் அழுந்தப் பதிந்து கழுத்தோரமாய் நகர்ந்தது. அணைப்பும் இன்னுமின்னும் இறுகிக்கொண்டே போனது!
அந்த அணைப்புக் கொடுத்த இன்பமான வலியை சுகமாய் தாங்கியவளுக்கு, சொர்க்க சுகமாய் இருந்தது கணவனின் கைகளில் கிடக்கும் அந்த நொடிகள்!
அப்படியே அவள் இருக்க, “என் மேலிருந்த கோபம் போய்விட்டதா?” என்று அவள் முகம் நிமிர்த்தி மெல்லக் கேட்டான் சத்யன்.
சட்டென்று அவன் கழுத்துக்கு தன் கைகளை மாலையாக்கி, “தண்டனை கொடுக்கத்தான் விருப்பமா இருக்கிறது. இவனை விடாதடி பவி; மண்டையில் ஓங்கிக் குட்டுடி என்றுதான் மூளை சொல்கிறது. ஆனால், பாழாய் போன இந்த மனது இந்த முரடனிடம் மயங்கிப்போய் கிடக்கிறதே. நான் என்ன செய்யட்டும் ஜான்?” என்று அவனிடமே கேட்டாள் அந்த கொள்ளை அன்புக்குச் சொந்தக்காரி.
“என்னவாவது செய்டா!” என்று உருகினால் அவன். அவளை அணைத்து நெற்றியில் ஆத்மார்த்தமாக இதழ் பதித்தான்.
நெஞ்சமெல்லாம் அப்படியொரு அமைதி அவனுக்கு! பரமசுகம் என்பார்களே அதை அனுபவித்துக் கொண்டிருந்தான். அவளும் அவனது அணைப்புக்குள் அடங்கிப்போய் கிடக்க, அவனது கைகளும் உதடுகளும் மெல்ல மெல்ல முன்னேறத் தொடங்கிற்று!
அதில் கிறங்கிக் கிடந்தவள் திடீரென்று, “ஆனாலும் எவ்வளவு திருகுதாளம்? ஜான் என்று பொய்யான பெயரை சொல்லி ஏமாற்றி.. நடித்து.. இந்த வீட்டுக்கு பாதை தெரியாதாடா உனக்கு? என் அண்ணி யார் என்று தெரியாதா உனக்கு? இதில் எங்கள் குடும்ப விசயத்தில் இவர் தலையிட மாட்டாராம். என்னமா நடிச்சடா கள்ளா!” என்று கேட்டு அவனை மொத்தத் தொடங்கினாள்.
திடீரென்று விழுந்த அடிகளில் முதலில் திக்குமுக்காடியவன், “கட்டின புருஷனை அடிக்கதடி..” என்று சிரித்தபடி அவளிடம் வாங்கிக் கட்டினான்.
போதாக்குறைக்கு, “எப்படி நான் நல்லா நடித்தேனா?” என்று வேறு குறும்போடு கேட்டான்.
கொலை வெறியோடு அவனை முறைத்தாள் பவித்ரா. “என்னை எமாற்றினதும் இல்லாமல் நல்லா நடித்தேனா என்று கேள்வி வேறையா.. இந்தக் கொழுப்புக்கு இருடா உனக்கு..” என்றபடி ஆவேசமாக அவன் மீது பாய்ந்தவளை பூப்பந்தாக தனக்குள் அடக்கிக்கொண்டான் அவன்.
“விடுடா என்னை! இன்னும் உனக்கு நாலு போட்டாத்தான் என் கோபம் அடங்கும்!” என்று மூச்சிரைத்தபடி அவள் விடுபடப் போராட,
“அடித்தது போதும்டா. கை வலிக்கப்போகிறது..” என்றவன், அவளின் கரங்களை பற்றி உள்ளங்கைகளில் முத்தமிட்டான்.
உள்ளங்கையில் இருந்து உடல் முழுவதும் சிலிர்க்கத் தொடங்க, கண்மூடிக் கிறங்கியவளை தன்மேல் கொண்டுவந்தான் சத்யன். தனக்குள் பற்றிக்கொண்ட மோகத்தீயை அவளுக்குள்ளும் பற்றவைக்கும் எண்ணத்துடன் தன் தேவைகளை அவளுக்குள் தொடங்கினான்.
பவித்ராவோ திடீரென்று நினைவு வந்தவளாக,“அஞ்சலிக்கு நீங்கள் அண்ணியின் தம்பி என்று தெரியாதா?” என்று கேட்டாள்.
அவனோ அவளின் கேள்விக்கு பதில் சொல்லும் நிலையிலேயே இல்லை. ஆழ்கடலுக்குள் முத்துக்குளிப்பவன் போல் அவளது பெண்மை எனும் கடலுக்குள் மூழ்கிக்கொண்டிருந்தான்.
“ஜான்! நான் கேட்டதற்கு பதிலைச் சொல்லுங்கள்.” என்றவள் அவனது கைகளுக்கும் உதடுகளுக்கும் தடைபோட, கைக்கெட்டியது வாய்க்கெட்டாத நிலையிலிருந்தான் சத்யன்.
“இப்போ அதுவா முக்கியம்?” என்று கேட்டவன், தன்னுடைய முக்கியமான அலுவலில் மீண்டும் மூழ்க, அவன் கன்னத்திலே ஒன்று போட்டாள் அவனது பாதி.
“நான் ஏமாந்த கதை எனக்கு முக்கியமில்லையா?” என்றாள் முறைப்போடு.
“அவளை எனக்கு பள்ளிக்கூடத்தில் தான் தெரியும். அர்ஜூன் அண்ணாவை அத்தானின் நண்பனாகத் தெரியும். அர்ஜூன் அண்ணாவின் தங்கைதான் அஞ்சலி என்று எனக்கு எப்படித் தெரியாதோ அப்படித்தான் அவளுக்கும் நான் அக்காவின் தம்பி என்று தெரியாது. போதுமா?” என்று வேக வேகமாக ஒப்பித்தவன், “கிட்ட வா பவி..” என்று அவளை இழுத்தான்.

