ஆட்டோவில் போய்க்கொண்டிருந்த ரட்ணத்துக்கும் நிவேதாவுக்கும் நடப்பதை நம்பவே முடியவில்லை. அவர்கள் தப்பிவிட்டார்களா? உண்மையிலேயே வெளியே வந்துவிட்டார்களா? இல்லை நடப்பதெல்லாம் கனவா? என்று திகைத்துப் போயிருந்...
திறந்ததும் ஓடிப்போய்ப் பிளாஸ்ட்ரை அகற்றி கைக்கட்டை அவிழ்த்துவிட்டு, “நித்தி!” என்று தாவி, அவனைக் கட்டிக்கொண்டு கதறினாள். எத்தனை நாள் தேடல்! எவ்வளவு ஏக்கம்! பட்ட காயங்களுக்கெல்லாம் அவனது கைவளைவு ஆறுதலை...
இங்கே விழா வீட்டில் சஞ்சனாவைத் தேடிக்கொண்டிருந்தார் பிரபாவதி. சஹானாவோடு அவள் வரவும், முகம் கடுக்க, “பாக்க எவ்வளவு வேலை கிடக்கு. அதை விட்டுப்போட்டு இந்த..” என்றவர் கணத்தில் மகளின் விழியில் ஜொலித்த சினத...
அதுவரை நேரமும் அடக்கிவைத்த துக்கமெல்லாம் பீறிட்டுக்கொண்டு கிளம்ப அதன் அடையாளமாக கண்ணீர் துளிகள் இரண்டு உணவுத் தட்டில் விழுந்து சிதறியது. சஞ்சனாவுக்கும் கண்ணீர் மல்கியது. கைக்குட்டையால் ஒற்றி எடுத்துவி...
மேள தாள வாத்தியங்களோடு பெண் அழைத்துவரப்பட்டு அவளுக்கான சடங்குகள் அனைத்தும் சிறப்பாக நடந்து, தாய் மாமனிடமும் பெரியவர்களிடமும் ஆசிர்வாதங்களைப் பெற்றபின், முக்கியமானவர்கள் புகைப்படத்துக்கு நின்றனர். சஞ்ச...
அன்று, மாலை அவள் புறப்படவேண்டும். பூப்புனித நீராட்டுவிழாவுக்கும் செல்லவேண்டும். மனதில் உற்சாகமும் இல்லை உடம்பில் தெம்பும் இல்லை. எப்படியும் அவர்களின் குடும்பமும் வரும் என்பது வேறு அவளின் கால்களைப் பின...
அகிலன் கசூரினா பீச்சுக்கு அவளை அழைத்து வந்ததே அவளின் மனநிலையை மாற்ற எண்ணித்தான். இப்போதோ உள்ளதும் கெட்டுவிட்ட நிலை. வண்டியில் வீட்டுக்குச் செல்கையில், “அவர் சொன்னதை பெருசாக எடுக்காத சஹி!” என்று சமாதான...
“இன்னும் கொஞ்சம் உள்ளுக்குப் போவமா!” “ஜீன்ஸ் முழுக்க நனைஞ்சிடும் சஹி. இங்கேயே நில்!” என்றவனின் பேச்சை அவள் கேட்கவேயில்லை. இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம் என்று உள்நோக்கி நகர்ந்துகொண்டே இருந்தாள். “சொன...
சஹானா முற்றிலும் மனமுடைந்து போயிருந்தாள். காயம் பட்டிருந்த கன்னம் வேறு விண் விண் என்று வலித்தது. திரும்பிய பக்கமெல்லாம் தோல்வி மாத்திரமே கிட்டியதில் தன் இயல்பைத் தொலைத்திருந்தாள். எப்போதும் விடிந்ததும...
வழமையாகப் பிரதாபன் போட்டுகளை விற்பனைக்குப் போடும் இணையத்தளத்தில் வாங்கிய போட்டினை ஏற்கனவே அதே விலைக்குப் போட்டிருந்தார் யாதவி. தற்போதைய நிலையில் அவருக்கு இலாபத்தைவிட, அதை விற்றால் வரும் 30000 யூரோக்கள...
