ஆனால், அவளைக் கொல்லும் இந்தக் கழிவிரக்கத்தை என்ன செய்ய? இன்னும் வேகமாக நடந்தாள். எதிர்ப்பட்ட ஊழியர்கள் மிகுந்த பணிவுடன் நடந்துகொண்டனர். இத்தனை நாள்களும் அதையெல்லாம் அன்போடு ஏற்றுக்கொண்டவளின் உள்ளம் இன...
அத்தியாயம் 9 ஒளியால் ஈர்க்கப்படுகிற விட்டில் பூச்சி போன்று உல்லாச வாழ்வின் மீது ஈர்ப்பும் மோகமும் கொண்ட ஒருத்தியாகத்தான் சுவாதி அதுவரை இருந்திருக்கிறாள். ஆனாலும் அன்னையும் தமக்கையும் சொல்லித் தந்து வள...
“என்ன யோசிக்கிறீங்க?” “வேற என்னத்த யோசிக்க? இவனை எப்படி வெளில கொண்டு வாறது எண்டுதான்.” “அது கஷ்டம் எண்டு நினைக்கிறீங்களா?” “ஈஸியும் இல்ல.” அவனே அப்படிச் சொன்னது அவளின் துக்கத்தைப் பெருகச் செய்தது. “நீ...
அப்போது, படக்கென்று கதவைத் திறந்துகொண்டு வந்தான், அவள் கணவன். பதறியடித்துக்கொண்டு எழுந்து அமர்ந்தாள், தமயந்தி. அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு, அங்கிருந்த தொலைக்காட்சியை உயிர்ப்பித்தான், அவன். அதில், ச...
மறைந்துபோன வாகனம் கிளப்பிவிட்டுச் சென்ற புழுதி அடங்கும் முன்னே, எல்லாளனைச் சூழ்ந்துகொண்ட பத்திரிக்கையாளர்களும் தொலைக்காட்சித் தொகுப்பாளர்களும் கேள்விகளாகக் கேட்டு, மைக்கை அவன் வாய்க்குள்ளேயே புகுத்திவ...
நொடி நேரத்தைக் கூட வீணாக்க விரும்பாதவளாக உள்ளே விரைந்தாள். விழிகள், எல்லாளனையும் காண்டீபனையும் தேடியது. ஒரு இடத்தில், தன் எதிரில் நின்று கொண்டிருந்த மூவர் கொண்ட குழுவிடம், மிகத் தீவிரமாக வாதிட்டுக்கொண...
தன்னுடைய அறையில் சரிந்திருந்தாள், ஆதினி. பொழுது, நள்ளிரவைத் தாண்டிக்கொண்டு இருந்தது. உடல், மனம் இரண்டுமே களைத்துச் சோர்ந்து போயிருந்தது. திறந்திருந்த யன்னலின் வாயிலாக உள் நுழைந்து, உடலைத் தழுவிய மென் ...
உண்மை தான்! அவளுக்கும் இப்படி எல்லாம் கதைக்கப் பிடிக்கவில்லை தான். இது அவளின் குணமும் அல்ல. ஆனால், மனம் கண்டதையும் நினைத்துத் துடிக்கிறதே. ஏமாற்றத்தில் துவள்கிறதே. மெல்லிய வலி ஒன்று போட்டு வதைக்கிறதே....
ஆதினியைத் தன் வீட்டுக்கு அழைத்து வந்திருந்தான், எல்லாளன். தலையைக் கைகளில் தாங்கியபடி, உணவு மேசையின் முன்னே அமர்ந்திருந்தாள், அவள். அவளின் அருகிலேயே கைகளைக் கட்டிக்கொண்டு, மேசை விளிம்பில் சாய்ந்து நின்...
“மாமா… அது…” நான்தான் அவனைக் கைது செய்தேன் என்று சொல்லமுடியாமல் நிமிர்ந்தவனின் பார்வையில் பட்டாள், மிதிலா. கண்ணீரில் மிதந்திருந்த விழிகள், அவனைக் குற்றம் சாட்டுவது போலிருந்தது. ஆதினிக்கு நடப்பது...

