அவன் குளிக்கச் சென்றுவிட கீழே இறங்கி வந்து சமையற்கட்டை ஆராய்ந்தாள். இரவு ஜெயந்தி செய்த பிட்டும் கோழிக்கறியும் இருந்தன. அவனுக்குப் பிட்டுக்கு நல்லெண்ணையில் பொரிக்கும் முட்டை பிடிக்கும் என்று அவர்களின் ...
நிலனுக்கு வேலைகள் முடியவே இரவு பத்தைத் தாண்டியிருந்தது. வீட்டுக்கு வந்தால் இளவஞ்சி இல்லை. இதை ஓரளவுக்கு எதிர்பார்த்துத்தான் இருந்தான். கூடவே அவளின் இன்றைய மனநிலைக்கு இங்கு வராமல் இருப்பதே சரி என்றும் ...
வேலை முடிந்து வந்த மகளைக் கண்டு முகம் மலர்ந்தாலும் கணவன் வீட்டுக்குப் போகாமல் இங்கு வந்திருக்கிறாளே என்று உள்ளூரகக் கவலையானார் குணாளன். அதைக் கேட்கவும் தயங்கினார். நிரந்தரமாக இங்கேயே இருக்கப்போகிறேன் ...
“என்னடா நினைச்சுக்கொண்டு இருக்கிறீங்க எல்லாரும்? எல்லாத்தையும் நீங்களே நடத்தி முடிச்சுப்போட்டுத்தான் வந்து சொல்லுவீங்களா? அவளுக்குத்தான் எல்லாம் எண்டா அந்த வீட்டில போய்ப் பொம்பிளை எடுத்த என்ர மகன்ர நி...
அவன் பாலகுமாரனின் அலுவலக அறையை விட்டு வெளியில் வந்த அதே நேரத்தில் சக்திவேலர் ஆத்திரமும் அவசரமுமாக அவனை நோக்கி வந்துகொண்டிருந்தார். அந்தத் தள்ளாத வயதிலும் அவருக்கு உதவிக்கென்று இருந்தவரின் கையைக் கூட உ...
இன்றும் அப்படி ஏதாவது செய்வார் என்றால் நிச்சயம் அவனால் பொறுமையாக இருக்க முடியாது. பிறகு பேசலாம் என்று தள்ளிப்போடும் நிலையிலும் இல்லை. அவன் அங்கே சென்றபோது பிரபாகரன்தான் இவனை எதிர்கொண்டார். “தம்பி!” என...
கோபத்தின் உச்சியிலும் கொதிப்பிலும் இருக்கிறவளை ஆற்றுப்படுத்தும் நோக்குடன்தான் அப்படிச் சொன்னான் நிலன். தன் வீட்டினரை அவளிடமிருந்து காக்கும் எண்ணத்துடனோ, அவர்களுக்காக நிற்கும் நோக்குடனோ சொல்லவில்லை. இன...
சினச் சிவப்பைத் தவிர்த்து வேறு எதையும் அவனால் அங்கே காண முடியவில்லை. “அவர் எவ்வளவோ கேட்டும் நான் அசையவே இல்லை எண்டதும் சக்திவேல்ல அவரின்ர ஒபீஸ் ரூம்ல இருந்து சில டொக்கியூமெண்ட்ஸை எடுத்துக்கொண்டு வரச் ...
சற்று முன்னர் அவன் எதற்கு ஏங்கினானோ அது நடந்துகொண்டிருப்பதைக் கண்டு இனிமையாக அதிர்ந்தான் நிலன். அவள் தன்னிடம் அழுவதும் உடைவதும் அவன் நெஞ்சினுள் தித்திப்பாய் இறங்கிற்று. இதன் அர்த்தம் அவள் அவனை நெருக்க...
நெஞ்சம் திரும்பவும் கொந்தளிக்க ஆரம்பித்தது. கூடவே மலர்கள் இல்லத்தின் நினைவும் வந்தது. அவள் கணிப்புச் சரியாக இருந்தால் அந்த மலர்கள் இல்லத்தில்தான் அவள் இருந்திருக்க வேண்டும். அந்தளவில் மாதத்தில் இரண்டு...

