எண்ணங்கள் ஆளுமையும் ஆதிக்கமும் கொண்டவை. மொத்தமாய் மனித மனங்களைச் சிதைத்துவிடும் வல்லமை அவைக்கு உண்டு. மனநோய் என்பது தாங்க முடியா எண்ணங்களின் இரும்புக் கரங்களுக்குள் அகப்பட்டுக்கொள்கிற பொழுதுகளில் உண்ட...
இரண்டு பெண் பிள்ளைகளின் திருமணத்தையும் நல்லபடியாக முடித்த ஆசுவாசம் குணாளனை அண்டவேயில்லை. ஒரு பாரம் நெஞ்சைப் போட்டு அழுத்திக்கொண்டே இருந்தது. விழிகளை மூடினால் வெறுமையைச் சுமந்து நிற்கும் மூத்த மகளின் ம...
அங்கே அயர்ன் செய்யப்பட்டு, அளவு வாரியாகப் பிரித்து மடிக்கப்பட்டு, பேக்கிங் ஆகி, விற்பனைக்குத் தயாராகும். இப்படித்தான் ஒரு துணி ஆடையாக வடிவம் கொள்வது. இந்தப் பகுதிகளை எல்லாம் தாண்டிக்கொண்டு சென்றால் இர...
“அப்படிச் சொல்லக் கூடாது லச்சு. நீயும் அங்கு போனபிறகு, அக்காவும் நீயுமாகச் சேர்ந்து அண்ணாவைக் கூப்பிடுங்கள். அண்ணா வந்து எங்களை அங்கு கூப்பிடுவான்..” என்று என்னென்னவோ விளக்கங்கள் கொடுத்து, முடிந்தவரை ...
எல்லோரும் புறப்பட்டு, குழந்தைகளும் உறங்கியதும் அவனைத் தனியறைக்குத் தள்ளிக்கொண்டு போனாள், ஆரணி. “என்னடி?” சிரிப்புடன் அவள் முகம் பார்த்துக் கேட்டவனை இறுக்கி அணைத்துக்கொண்டு அவன் முகமெங்கும் முத்திரை பத...
நாட்கள் சிறகில்லாமல் பறந்தன. ஆரணியின் சூழ் கொண்ட வயிறு பெருக்கப் பெருக்க நிகேதனும் வீட்டைக் கட்டி முடித்திருந்தான். தந்தைக்கு உதவியாக அலுவலகம் செல்ல ஆரம்பித்திருந்தாள், ஆரணி. யசோதா ஆசை தீர மகளையும் பே...
வீடு நோக்கிச் சென்றுகொண்டிருந்த நிகேதன் சத்யநாதனைப் பற்றித்தான் சிந்தித்துக் கொண்டிருந்தான். ஆரணி சென்று கேட்ட ஒற்றை மன்னிப்பிலோ, அவனை அழைத்து ஒருமுறை அவர் பேசியதிலோ அவரிடம் இத்தனை மாற்றம் உண்டாகியிரு...
“இன்னும் ஒரு மணித்தியாலத்தில இருக்கு மாமா.” இதுவரையிலும் தன்னை ஏன் அவர் வரச்சொன்னார் என்று சொல்லவில்லையே என்கிற கேள்வியுடன் பதில் சொன்னான் அவன். “அப்ப வாங்கோ!” யசோதாவிடம் சொல்லிக்கொண்டு அவனையும் அழைத்...
அன்றைய ஹயர்களை முடித்துவிட்டு அவர்களின் வீட்டுக்கே சென்று சொல்லவேண்டும் என்று நிகேதன் எண்ணியிருக்க, சத்தியநாதனே அவனுக்கு அழைத்தார். தன்னை வந்து சந்திக்க முடியுமா என்று வினவினார். சம்மதித்துவிட்டு மாலை...
“அதுக்கு என்ன? இந்தா இன்னும் அஞ்சு நிமிசத்தில எல்லாம் முடிஞ்சிடும். நீ சாப்பிடு.” என்றான் அவன். “இந்தமுறை பசி இல்ல நிக்கி. ஒரே நித்திரை நித்திரையா வருது. உன்ர மகன் சோம்பேறியா வரப்போறார் போல.” என்றவளின...

