அவனை நன்றாக முறைத்துவிட்டு படக்கென்று முதுகுகாட்டிப் படுத்துக்கொண்டாள் ஆரணி. சற்றுநேரம் இருவரிடமும் எந்தச் சத்தமும் இல்லை. அந்த அமைதி கொடுமையாக இருக்க அவளைத் தன்புறமாகத் திருப்பினான் அவன். அவள் மறுக்க...
மாலை நேரத்தில் ஒரு பீட்ஸா ஹட்டில் டெலிவரி போயாகச் சேர்ந்திருந்தான் நிகேதன். அந்த வேலை மாலை ஐந்துக்குத் தொடங்கி இரவு பதினொன்று பன்னிரண்டு என்று பலமாதிரியும் முடிந்தது. காலையில் ராஜேந்திரனிடம் ட்ரைவர், ...
அப்படி அவள் சொன்னதற்குக் காரணம், நேற்று தாயிடம் அவன் கொடுத்த வாக்கு! வேதனையோடு விழிகளை அவன் மூடித் திறக்க, அவளின் விரல்கள் தேடிவந்து அவனுடைய விரல்களோடு பின்னிப் பிணைந்துகொண்டது! ஆறுதல் சொல்கிறாள்! அவள...
நிகேதனின் கையணைப்பில் தான் கண்விழித்தாள் ஆரணி. அதை உணர்ந்தநொடி நெஞ்சமெங்கும் சுகம் பரவிற்று. ஆசையாக தன் மனம் கொய்தவனின் முகத்தைப் பார்த்தாள். நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்தான். உறக்கத்தில் மட்டும் தான...
மூத்த மகன் குடும்பத்தோடு வருகிறான் என்றதுமே, மாலினியும் குழந்தைகளும் தரையில் இருந்து உண்ணமாட்டார்கள் என்று சொல்லி, பிளாஸ்ட்டிக் சாப்பாட்டு மேசையும் நாற்காலிகளும் வாங்கிப் போடச் சொல்லியிருந்தார்...
“அண்ணா கேட்டதுக்குத்தான் நான் பதில் சொன்னான்.” அவளுக்கு மாலினியைப் பிடிக்கவே பிடிக்காது. அண்ணா முதல் அம்மா வரை அவரைச் சமாளித்தே போவதில் அவளால் மனதில் இருப்பதை வெளிக்காட்ட முடிவதில்லை. இதையெல்லாம் கேட்...
அந்தப்பயணம் அவர்கள் வாழ்வில் இன்னொரு படியாகவே அமைந்துபோயிற்று! அதற்குப்பிறகு அப்படியான ஹயர்கள் வந்தால் மறுக்காமல் சென்றான், நிகேதன். கூலியையும் அவன் அளவாக வாங்கியதில் ஹயரும் நன்றாகவே வந்தது. தன் உறக்க...
“இப்பதான் கொலீஜால வந்தவள். சாப்பிட்டுக் கொஞ்சம் களை ஆறட்டும்!” என்றார் அமராவதி கயலினியை முந்திக்கொண்டு. அவன் விடவில்லை. “அங்க என்னம்மா வெட்டி முறிக்கிற வேலையா? சும்மா ஒதுக்கிறதுக்கு ஹெல்ப் தானே. போய்ச...
ஆரணியின் தொண்டையை ஆத்திரமா அழுகையா என்று பிரிக்கமுடியாத துக்கம் ஒன்று அடைத்துக்கொண்டிருந்தது. அன்றைக்கு எப்படி அவனுடைய பேச்சைக் காதில் விழுத்தாமல் இழுத்துக்கொண்டு போனாளோ அதே மாதிரி, வேறு வேலை தேடலாம் ...
நிகேதனின் எந்த மறுப்பையும் காதில் விழுத்தாமல், ஆர்.ஜே இண்டஸ்ட்ரீஸ்’க்கு இழுத்துக்கொண்டு வந்திருந்தாள் ஆரணி. மூன்று மாடிக் கட்டடம். முன்பக்கம் முழுவதுமே கண்ணாடிச் சுவரினால் உருவாக்கப்பட்டிருந்தது. கட்ட...

