பிரதாபன் எதைச் சொல்லியும் பிரபாவதி கேட்பதாயில்லை. “அவர் என்ன சொன்னவர்? அப்படியே சொல்லு!” என்று நின்றாள். “அவருக்கு விருப்பம் இல்லையாம்.” “நினைச்சனான்! அவன்ர தங்கச்சிதான் எதையாவது சொல்லி மனதை மாத்தியிர...
“தாராளமா கம்பஸ்ல விசாரிச்சு தெரிஞ்சு கொள்ளலாம். உங்கட தங்கச்சிய கூட நீங்க விசாரிக்கலாம். அவவின்ர பிரண்ட்ஸ்…” அவளிடம் எல்லாவற்றுக்கும் நேர்மையான பதில்கள் இருந்தன. அந்த நேரத்திலும் அந்தப்பெண் இந்த விசயத...
“என்ன கதைபேச்சு பிரதி இது? அவா செய்தா நீயும் அப்பிடியே செய்யோணும் எண்டு கட்டாயமில்லை. முதல், இதென்ன பிடிவாதம்? நான் போய்க் கதைக்கிறன். பிறகு என்ன ஏது எண்டு பாக்கலாம். அதுவரைக்கும் சும்மா மனதைப்போட்டுக...
தலையில் கை வைத்தபடி அமர்ந்துவிட்டார் அரவிந்தன். ஜீன்ஸ் அணிந்திருந்ததில் சஹானாவின் கால்கள் தப்பியிருந்தன. ஆனால், வெயிலுக்கு இதமாகக் கையில்லாத மெல்லிய சட்டை அணிந்திருந்ததில் கை முழுவதும் சிராய்த்து, திட...
இப்படி, குமுறும் எரிமலையைப் போன்று கோபத்தையும் வஞ்சத்தையும் மனதில் வைத்துக்கொண்டு அலைந்தவனிடம் தான் வந்து மாட்டியிருந்தாள் சஹானா. வஞ்சம் தீர்க்கும் நாள் வெகு தொலைவில் இல்லை! ‘குடும்பத்துக்கே படிப்பிக்...
உடலின் தெம்பு முழுவதையும் இழந்து, சைக்கிளை மிதிக்கவே பலமற்றுக் கலங்கிய கண்களைச் சிமிட்டியபடி வந்தவளைப் பார்க்க அகிலனுக்குக் கவலையாகப் போயிற்று. எவ்வளவு உற்சாகமாகத் துள்ளிக்கொண்டு வந்தாள். கூச்சத்தோடு ...
“உன்ர அம்மா மாதிரியே இங்க எவனையாவது பிடிக்க வந்தியா இல்ல.. சொத்துப்பத்து சேர்த்து வச்சிருப்பீனம், பறிச்சுக்கொண்டு போகலாம் எண்டு வந்தியா?” ஆவேசமாகப் கேட்டார் பிரபாவதி. கண்ணில் நீருடன் அவளின் தலை மறுப்ப...
இதுதான் வீடு என்று அகிலன் காட்டிய வீட்டைப் பார்த்ததும் அவளால் நகர முடியவில்லை. எங்கே தொடங்கி எங்கே முடிகிறது என்று தெரியாத அளவில் அந்தக் காணியின் எல்லைகள் விரிந்து பரந்திருக்க, தென்னை, மா, பலா, வேம்பு...
“இதெல்லாம் இல்ல.” அவளைப்போலவே குடிப்பதைச் சைகையில் காட்டிவிட்டு, பொக்கெட்டில் மறைத்து வைத்திருந்த சிகரெட்டை எடுத்துக் காட்டினான். “இது மட்டும் தான். அதுவும் ஒரு நாளைக்கு ஒண்டு இல்லாட்டி ரெண்டுதான். இல...
நெதர்லாந்தின் தலைநகரிலிருந்து புறப்பட்ட இராட்சசப் பறவை ஒன்று கொழும்பு கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் சஹானாவைத் தரையிறக்கியது. விமானத்தின் மெல்லிய குளிருக்கு சுகமாய் அவளைத் தழுவியிருந்த டெனிம் ...
