அவளின் தலையை வருடுவதை நிறுத்தாது, “உன் பயம் நியாயமானதுதான் லச்சும்மா. ஆனால் நீ ஒன்றையும் யோசிக்க வேண்டும். எதுவுமே அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். அப்படி அளவுக்கு அதிகமாக அவனை அதைச் ச...
ஆண்கள் எல்லோரும் ஹாலில் அமர்ந்திருக்க, தொலைக்காட்சியில் செய்தி போய்க்கொண்டிருந்தது. உலக நிலவரத்தில் எல்லோரின் கவனமும் சென்றுவிட, சிவபாலனுக்கு அதில் ஏனோ ஒன்றமுடியவில்லை. தொலைக்காட்சியில் இருந்து பார்வை...
“அதில்லை தாத்தா. என் தம்பிக்கு..” என்று சிவபாலன் ஆரம்பிக்க, “அண்ணா.. சனாவை சூர்யாவுக்கே கட்டிக்கொடுக்கலாம்..” என்று இப்போது இடைபுகுந்தான் ஜெயன். “என்னடா நீ..” என்ற தமையனைப் பேசவிடாது, “என்னோடு கொஞ்சம்...
உள்ளே அடைத்துவிட்ட குரலை வெகு சிரமப்பட்டு வெளியே கொண்டுவந்து, “நான்.. நான் நன்றாக இருக்கிறேன் பாட்டி.…” என்றாள் தடுமாற்றத்தோடு. மற்றவர்களின் பார்வை அவளை ஆராய்கிறதோ? துளைக்கிறதோ? அங்கே நிற்க முடியாமல் ...
அந்தக் கேள்வியின் பொருள் புரியாமல், “வேறு முடிவு என்றால்.. எதைச் சொல்கிறாய்..?” என்று கேட்டான் சூர்யா. அவன் முகத்தையே ஊன்றிப் பார்த்தபடி, “உயிரை விடத் துணிந்திருந்தால்…” என்றவனைச் சொல்லி முடிக்க விடாத...
காருக்குள் அமர்ந்திருந்த இரு ஆண்களின் பார்வையும் சனாவையே தொடர்ந்தது. ஒருவனின் பார்வை காதலுடன் என்றால், மற்றவனின் பார்வை சிந்தனையோடு தொடர்ந்தது. அவளும் இவர்களை ஒருதடவை திரும்பிப் பார்த்துவிட்டு, வீட்டு...
அண்ணாவின் பெயரைச் சொன்னதில் உண்டான புன்னகையோடு, தானும் கையை நீட்டி சூர்யாவின் கையைக் குலுக்கியபடி, “ஆமாம். அவர் தம்பிதான். நீங்கள்..?” என்று கேள்வி எழுப்பியவனின் விழிகள், ஜெயனுக்குத் தெரியாமல் உருவ மு...
வீட்டுக்குள் வந்த சனாவைப் பார்த்த சுலோவின் நெற்றி சுருங்கியது. “ஏன் சனா, உன் முகம் ஒரு மாதிரி இருக்கிறது..?” என்று கேட்டவளிடம், சனாவால் உடனடியாகப் பதில் சொல்ல முடியவில்லை. “அது.. அதக்கா தலை வலிக்கிறது...
“அங்கே எப்போதும் உன் நினைவாக இருந்தது. பாட்டி வேறு, எப்போது ஜெர்மனி போகலாம் என்று நச்சரித்துக் கொண்டே இருந்தார். வீட்டில் இருக்க முடியாமல், வெளியேறி, கண்ணில் பட்ட ஒரு பூங்காவுக்குள் புகுந்துகொண்டேன். ...
“இதுவரை நீங்கள் சொன்ன எல்லாவற்றையும் நான் பொறுமையாகத்தான் கேட்டிருக்கிறேன்..” என்றாள் சனா. அதைக் கோபமாகத்தான் சொல்ல நினைத்தாள். அது முடியாமல் குரல் அடைத்தது. எவ்வளவு முயன்றும், அன்று அவன் பேசியவைகளையு...

