இதேயளவு வேதனையை, சொல்லப் போனால் இன்னும் அதிகமாக அதுநாள் வரை அனுபவித்தவள் அல்லவா அவள்! அடங்கியிருந்த வேதனை கிளறி விடப்படவே சித்ராவும் விம்மினாள். “அது என் குழந்தையும் தான் ரஞ்சன். அதை நானே கொல்வேனா. இத...
அந்தப் பக்கம் இருந்தவனின் நாடி நரம்பெங்கும் ஊடுருவி அவன் தேகம் முழுவதையுமே சிலிர்க்க வைத்தது அந்த அழைப்பு. விழிகளை மூடி அவன் செவியில் வந்து மோதிய அழைப்பை அணுவணுவாக ரசித்தான்! இந்த மூன்று மாதத்தில் இதய...
கட்டிலின் முகப்பில் முதுகுக்குத் தலையணையை அணைவாகக் கொடுத்து அமர்ந்திருந்தான் ரஞ்சன். அவன் கை வளைவுக்குள்ளேயே சுருண்டு கிடந்த சித்ராவுக்கு உடம்பும் மனமும் சோர்வாக இருந்தது. அவனுடன் மதியம் போட்ட சண்டையி...
“தெ..தெரியுமா..? எப்படி..? பிறகு ஏன் நீ அதைப்பற்றி ஒன்றும் என்னிடமோ உன் அப்பாவிடமோ சொல்லவில்லை..” “அது தெரியவந்தபோது முதலில் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. அப்பாவிடம் சொல்வதா வேண்டாமா என்ன செய்வது என்று...
மனைவியை அதிர்ந்துபோய் பார்த்தான் ரஞ்சன். அவளின் கேள்விகள் சாட்டைகளாய் மாறி நெஞ்சில் கோடிழுத்தன. இன்று இப்படிக் கேட்பவள் இவ்வளவு நாளும் அவன் அணைக்கையில் உருகியதும் மார்போடு ஒன்றியதும் பொய்யா? அவனைப் பா...
அவர்களின் புது வீட்டுக்கு ரஞ்சன் வாங்கியது தவிர்த்து, பாத்திர பண்டங்கள் முதல் திரைச்சீலை வரை தேவையான மீதிப் பொருட்களை இருவருமாகச் சென்று வாங்கி வந்தனர். வாங்கிவந்த தொலைக்காட்சிப் பெட்டியை சரியான இடம் ...
இனிய காலைப் பொழுதில், திறந்திருந்த ஜன்னல் வழியாக சில்லென்று வீசிய காற்று முகத்தில் மோத மெல்லக் கண்விழித்தாள் சித்ரா. விழித்ததும் அவள் விழிகளில் தெரிந்தது நன்றாக உறங்கும் கணவனின் கம்பீரமான முகமே! அதுவு...
அந்தப் புறம் எடுத்தவன், “யாழி… உன்னோடு பிறகு கதைக்கிறேன்..” என்றுவிட்டு, அவளின் பதிலை எதிர்பாராது வைத்துவிட்டான். கைபேசியைத் தன் அருகிலேயே வைத்துவிட்டுக் கட்டிலில் சரிந்தவள் அவனுடைய அழைப்புக்காகக் காத...
ஒரு கம்பீரமான ஆண்மகனை, வாழ்க்கைப் போராட்டத்தில் எப்போதுமே எதிர்நீச்சல் போடும் ஒரு போர்வீரனாக மட்டுமே பார்த்துப் பழகியவனை இன்று இப்படி ஓய்ந்து ஒடிந்துபோனவனாகப் பார்க்கவே முடியவில்லை அவளால். தாய் தங்கைய...
தங்கையின் பேச்சைக் கேட்ட ரஞ்சனின் மனம் கொதித்தது. சுசீலா அத்தை கேட்ட சீதனமே மிக மிக அதிகம். அப்படியிருந்தும் ஒன்றும் சொல்லாமல் சம்மதித்ததற்கு காரணம், அப்பாவின் ஆசை மற்றும் நித்தியின் விருப்பம். இதில் ...

