யாழினியின் திருமண வேலைகள் சூடு பிடித்திருந்தன. முடி திருத்துவது, தலையலங்காரம் செய்து பார்ப்பது, முகத்துக்குப் பேஷியல், முக அலங்காரத்துக்கான முன்னோட்டம், உடைகளின் தேர்வு, அதை அளவு பார்த்தல், நண்பிகளின்...
கௌசிகனைக் கண்டால் இன்னுமே அவளுக்கு அதே பயமும் நடுக்கமும் உண்டுதான். என்ன, பிரமிளாவின் தயவில் அதை மனத்துக்குள் வைத்துக்கொண்டு அவன் முன்னே சாதாரணமாக நடமாடப் பழகி இருந்தாள். மோகனன் அப்படியன்று. சவூதி போன...
அன்று, செல்வராணிக்கு அதிகாலையிலேயே விழிப்பு வந்திருந்தது. மோகனன் வந்துவிட்டான் என்கிற நிம்மதி, அடுத்த வாரமே நடக்கவிருந்த யாழினியின் திருமணம், அது முடிந்ததும் மோகனனுக்கும் ஒரு நல்ல பெண்ணாகப் பார்த்து ம...
எப்போதுமே அவர்களுக்குள் புரிந்துணர்வுடன் கூடிய உறவு இருந்ததா என்றால் இல்லைதான். இவன் மீது அண்ணா என்கிற மரியாதையும் பயமும் அவனுக்கு உண்டு. இவன் ஏவுகிறவற்றை அவன் செய்வான். ஒன்றாக இருந்த காலத்திலேயே அதைத...
செல்வராணியின் மனம் பொறுமையற்றுப் பரபரத்துக்கொண்டிருந்தது. சின்ன மகன் இன்னும் சற்று நேரத்தில் வந்துவிடப் போகிறான். வாசலைப் பார்த்துப் பார்த்தே ஓய்ந்து போனார். இத்தனை நாட்களாக, ‘அவனை வரச் சொல்லம்மா’ என்...
அங்கிருந்த மூவருக்கும் முகம் கொள்ளா சிரிப்பு. “எங்களுக்கு வேற வழி இல்ல. சித்தப்பா எண்டு இந்தக் குட்டியம்மா அடிச்சுச் சொல்லுறா. அதால இந்தாங்கோ உங்கட கிஃப்ட்.” என்று, அதுவரை முதுகில் தொங்கிக்கொண்டிருந்த...
மாலை மயங்கும் பொழுது. தன் பேத்திக்கு எப்படியாவது இரவுணவைக் கொடுத்து முடித்துவிட வேண்டும் என்பதில் முழு மூச்சாக இறங்கியிருந்தார் செல்வராணி. ஆறு வயது மிதுனாவோ அந்தக் காணி முழுவதிலும் சைக்கிளை மிதித்து, ...

