அதுவரையில் ஒற்றை வார்த்தை கூடப் பேசாமல், உண்பதில் மாத்திரம் கவனம் செலுத்திய எல்லாளன் மீது, எல்லோர் பார்வையும் குவிந்தது. அவனோ, “அந்தப் பருப்பில கொஞ்சம் போடு.” என்று தங்கையிடம் கேட்டு வாங்கிச் சாப்பிட்...
இளந்திரையனின் முன்னால் காண்டீபன் தந்த அட்மிஷன் ஃபோர்மை வைத்தாள் ஆதினி. அருகிலிருந்த கண்ணாடியை எடுத்து அணிந்துகொண்டு, அதன் மீது பார்வையை ஓட்டியவர் வேகமாக நிமிர்ந்து, “என்னம்மா இது?” என்றார். “எனக்குக் ...
“ஆரா இருந்தாலும் நல்லாருக்கோணும் எண்டுதான் ஆசைப்படுறன். அதுவும், நீங்க எல்லாருமே இளம் பிள்ளைகள். நேர் வழில படிச்சு, செய்த பிழைகளைத் திருத்தி, முன்னுக்கு வரோணும் எண்டு நினைக்கிறது பிழையா?” என்று பதில் ...
இருள் பரவ ஆரம்பித்த வேளையில்தான் வீட்டுக்கு வந்தான் காண்டீபன். அவன் முகமே சரியில்லை. யாரோடும் எதுவும் பேசாமல் அறைக்குள் சென்று அடைந்துகொண்டான். “தம்பி ஏனம்மா ஒரு மாதிரி இருக்கிறான்?” தன்னிடம் கூட ஒரு ...
மண்டபத்தை விட்டு விறுவிறு என்று வெளியே வந்தாள் ஆதினி. சினத்திலும் சீற்றத்திலும் அவள் உள்ளம் கொதித்துக்கொண்டிருந்தது. அவளின் மறுப்பும் விலகளும் தனக்கு ஒன்றுமே இல்லை என்பதுபோல் நடக்கிறவனின் செய்கை அவளை ...
அன்றைய நாள் அகரன், சியாமளா திருமணத்தைக் கொண்டாடுவதற்காகப் புலர்ந்திருந்தது. இளந்திரையன் பெரிதாக யாரையும் அழைக்கவில்லை. அவரோடு சட்டக் கல்லூரியில் பயின்றவர்கள், நெருக்கமான சக நீதிபதிகள், வழக்கறிஞர்கள், ...
இன்றைய பிரதான செய்திகள்! போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான மாணவியின் தற்கொலை வழக்கில், குற்றவாளிக்கு இரண்டு வருடக் கடூழியச் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார், யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளந்திரை...
கேள்வியை உள்வாங்கியவன் எங்கோ பார்வை நிலைகுத்தியிருக்க, அப்படியே அமர்ந்திருந்தான். அவனுடையது கலைப்பீடம். அவளுடையது சட்டம். இருவரும் சந்திக்கச் சாத்தியமும் இல்லை; அவசியமும் இல்லை. ஆனாலும் அவள் முகம் பார...
பல்கலைக் கழகத்தில் எப்போதும் அமரும் மரத்தடி வாங்கிலில் அமர்ந்திருந்தாள் ஆதினி. அவள் சிந்தை முழுக்க நிறைந்திருந்தவன் அஜய். இனிமையாகப் பழகுவான், மரியாதை மிகுந்தவன் என்று எண்ணியிருந்த ஒருவன் பொய்த்துப் ப...
“உண்மையாவா? ஆர் அவன்?” “டியூஷன் வாத்திதான் சேர். ஆனா என்ன, இவன் ஸ்பெஷல் கிளாஸ் எண்டு எல்லா டியூஷன் செண்டர்ஸுக்கும் மாறி மாறிப் போவானாம். அதுலதான் முதல் எங்களிட்ட மாட்டேல்ல. நீங்க சொன்ன மாதிரி ஒரே நேரத...

