கூடவே அன்று அவ்வளவு திட்டியும் பணிந்து போனவனின் செய்கை அவளின் மனத்தை இதமாக வருடிச் சென்றதும், ஈர்ப்பொன்றை உருவாக்கியதும் உண்மைதான். அப்படியிருக்க அன்று அவன் காட்டிய கோபம்? கண்ணைக் கரித்துக்கொண்டு வர வ...
கைப்பேசியின் சத்தத்தில் துயில் கலைந்தாள் பிரமிளா. அப்போதுதான் கணவனின் கையிலேயே மீண்டும் உறங்கிப்போயிருக்கிறோம் என்று புரிந்தது. அவனும் நல்ல உறக்கத்திலிருந்தான். அவனிடமிருந்து மெல்ல விலகிக் கைப்பேசியை ...
அவளுக்குச் சட்டென்று முகம் சூடாகிற்று. அவன் கையின் கதகதப்பு வேறு, கையின் வழியே தேகமெங்கும் பரவி, நெஞ்சுக்குள்ளேயே இறங்கியது. “பிறந்தநாளே முடியப் போகுது. இப்ப வந்து சொல்லுறீங்க!” தன் மனவுணர்வுகளை மறைப்...
அன்று ஆதினிக்குப் பிறந்தநாள். இருபத்தியோராவது வயதைப் பூர்த்தி செய்திருந்தாள். எல்லாளனைத் தவிர்த்து எல்லோரும் அழைத்து வாழ்த்தினார்கள். அவன் எங்கே என்று அவளாகக் கேட்கவில்லையே தவிர, வாழ்த்தாமல் விடமாட்டா...
அடுத்த நாள் காலையே அவளைப் பார்க்க வந்தான் எல்லாளன். அறைக்குள் இருந்துகொண்டே அவனைப் பார்க்க மறுத்தாள் ஆதினி. சற்று நேரத்தில் அவள் அனுமதியை எதிர்பாராமல், திறந்திருந்த அறையின் கதவைப் பெயருக்கு இரண்டு முற...
அதுவரையில் ஒற்றை வார்த்தை கூடப் பேசாமல், உண்பதில் மாத்திரம் கவனம் செலுத்திய எல்லாளன் மீது, எல்லோர் பார்வையும் குவிந்தது. அவனோ, “அந்தப் பருப்பில கொஞ்சம் போடு.” என்று தங்கையிடம் கேட்டு வாங்கிச் சாப்பிட்...
இளந்திரையனின் முன்னால் காண்டீபன் தந்த அட்மிஷன் ஃபோர்மை வைத்தாள் ஆதினி. அருகிலிருந்த கண்ணாடியை எடுத்து அணிந்துகொண்டு, அதன் மீது பார்வையை ஓட்டியவர் வேகமாக நிமிர்ந்து, “என்னம்மா இது?” என்றார். “எனக்குக் ...
“ஆரா இருந்தாலும் நல்லாருக்கோணும் எண்டுதான் ஆசைப்படுறன். அதுவும், நீங்க எல்லாருமே இளம் பிள்ளைகள். நேர் வழில படிச்சு, செய்த பிழைகளைத் திருத்தி, முன்னுக்கு வரோணும் எண்டு நினைக்கிறது பிழையா?” என்று பதில் ...
இருள் பரவ ஆரம்பித்த வேளையில்தான் வீட்டுக்கு வந்தான் காண்டீபன். அவன் முகமே சரியில்லை. யாரோடும் எதுவும் பேசாமல் அறைக்குள் சென்று அடைந்துகொண்டான். “தம்பி ஏனம்மா ஒரு மாதிரி இருக்கிறான்?” தன்னிடம் கூட ஒரு ...
மண்டபத்தை விட்டு விறுவிறு என்று வெளியே வந்தாள் ஆதினி. சினத்திலும் சீற்றத்திலும் அவள் உள்ளம் கொதித்துக்கொண்டிருந்தது. அவளின் மறுப்பும் விலகளும் தனக்கு ஒன்றுமே இல்லை என்பதுபோல் நடக்கிறவனின் செய்கை அவளை ...

