காண்டீபனின் வீடு ஊருக்குள் சற்று உள்ளே அமைந்திருந்தது. ஆதினியைக் கண்டதும் வளர்ந்த பெரிய நாய் ஒன்று குரைத்துக்கொண்டு ஓடி வந்தது. இவள் பயந்து நிற்க, “அது கடிக்காது. நீ வா!” என்று இன்முகமாக வரவேற்றான் கா...
“உங்களுக்கு உங்கட நண்பரிலயும் நம்பிக்கை இல்ல, உங்கட தங்கச்சிலயும் நம்பிக்கை இல்ல. அதுதான் இவ்வளவு கதைக்கிறீங்க.” என்று எல்லாளனின் வாயைத்தான் அடைத்திருந்தாள். அதுவே, அவளுக்கு ஒன்று என்று வருகையில் அவன்...
அடுத்த நாள் காலை, தன் முன் அமர்ந்திருந்த பிள்ளைகள் இருவரையும் பார்த்தார் இளந்திரையன். அவர்களோடு பேசுவதற்காக அவர்தான் அலுவலக அறைக்கு அழைத்திருந்தார். அகரன், வேலைக்காக வவுனியா செல்ல வேண்டும். போனால் அடு...
இத்தனையையும் கேட்ட பிறகும் என் அண்ணா எனக்காக நிற்பான் என்று நம்பியிருக்கிறாள். அவள் மனத்தை உணராமல், அதிலிருந்த காயத்தை அறியாமல், என்ன வேலை பார்த்துவிட்டான்? விழிகளை ஒருமுறை இறுக்கி மூடித் திறந்தான். அ...
எல்லாளனுக்குக் காவல் நிலையத்துக்குப் போக வேண்டும். அந்த மாணவர்களை விசாரிக்க வேண்டும். இந்தத் தனியார் கல்வி நிறுவனத்தையும்(டியூசன் செண்டர்) கண்காணிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இவற்றோடு சேர்த்துப் புதுப்...
அவனோடு பேச நினைத்தாள். ஃபோன் நம்பர் இல்லை. அவன் பெயரைப் போட்டு கூகுளில் தேடியபோது மின்னஞ்சல் முகவரி கிடைத்தது. அவனுடையதுதானா, அனுப்பினாலும் பார்ப்பானா என்று கேள்விகள் குடைந்தாலும், ஒரு முயற்சியாக, ‘அண...
அந்த வீடு மழையடித்து ஓய்ந்தது போல் ஓய்ந்துபோயிருந்தது. அகரனுக்குத் தந்தையை நிமிர்ந்து பார்க்கவே முடியவில்லை. இளந்திரையனுக்கு மகன், வருங்கால மருமகள் இருவர் மீதும் மிகுந்த கோபம். அவசரப்பட்டோ ஆத்திரப்பட்...
அதோடு ஆதினியின் பொறுமை பறந்து போனது. “ஹல்லோ என்ன? என்ர அண்ணாக்கு நீங்க வாயா? எனக்குக் கத சொல்லுறத விட்டுட்டு, நானும் அண்ணாவும் கதைக்கேக்க நடுவுக்க வாற பழக்கத்தை நீங்க முதல் நிப்பாட்டுங்க! விளங்கினதா?”...
வவுனியாவிலிருந்து வந்த களைப்புப் போகக் குளித்துவிட்டு வந்த அகரன், அப்போதுதான் கைப்பேசியைப் பார்த்தான், அகரன். புது இலக்கத்திலிருந்து வந்திருந்த ஆதினியின் குறுந்தகவலைக் கண்டுவிட்டு, “டேய்! நீ இன்னும் அ...
அவனுக்கும் அது தெரியாமல் இல்லையே! “உனக்கு நான் இருக்கிறன்மா.” என்றான் தணிந்த குரலில். “உங்களுக்கு?” அவன் பதிலற்று நின்றான். “இதுதான் அண்ணா பயமா இருக்கு. நாளைக்கு அவளோட ஒரு பிரச்சினை வந்தாலும் நீங்க என...

