அதுதான் சொறி சொல்லுறேனே கோகுல்..” கெஞ்சும்போதே அவளின் மனம் முரண்டியது. உண்மையைத்தான் சொன்னாள். ஆனாலும் கூட, அவனிடம் மன்னிப்பைக் கேட்டும் இறங்கமாட்டேன் என்கிறவனிடம் இன்னும் எந்தளவுக்குக் கெஞ்சுவது? இப்...
வேலை முக்கியம் தான். அதனால் உண்டாகிற திருப்தியும் முழுமையும் முக்கியம் தான். சுயமாக நிற்கிறோம் என்கிற உணர்வும் முக்கியம்தான். இந்த நிறைவான விடயங்களை எல்லாம் மகிழ்வோடு கொண்டாட மனத்துக்குப் பிடித்த துணை...
இலகுவில் அழுகிறவள் அல்ல பிரியந்தினி. நிதானம், திடம், தைரியம் அத்தனையும் கைவரப் பெற்றவள். திருமணமானதில் இருந்து, அதையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துகொண்டு வந்தவள், இன்று, முற்றிலுமாக உடைந்து போயிருந்தா...
அவள் போனதும் அப்படியே கட்டிலில் அமர்ந்துவிட்டான் கோகுலன். நிறைய நாட்களுக்குப் பிறகு அவளை நேரில் கண்ட பாதிப்பு அவனுக்கும் தான். அதுவும், மெலிந்து, முகம் வாடி, கண்களில் கண்ணீரைத் தேக்கியபடி, அடிவாங்கிய ...
மனதின் பாரத்தைத் தனக்குள்ளேயே அடக்கிக்கொண்டு விரித்துப் பார்த்தாள். சிவப்பில் தங்கக் கொடிகள் படர்ந்த அழகான பட்டுச் சேலைக்கு, மிகுந்த வேலைப்பாடுடன் தனிச் சிவப்பில் தைக்கப்பட்டிருந்த சாறி பிளவுஸ் அளவாயி...
பாமினியின் திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முதலே வந்து இறங்கி இருந்தாள் பிரியந்தினி. அன்னை வீட்டில் தங்கவே இல்லை. வந்ததும் குளித்து, உடையை மாற்றிக்கொண்டு, கோகுலனின் வீட்டுக்குப் புறப்பட்டாள். அன்று,...
கவினைக் கவர்ந்துவிட்ட மகிழ்வோடு, அடிக்கடி, சரக்சரக்கென்று கடந்து போயின லிசாட்டுகள்! “அரைவாசித் தூரம் வந்திருப்பமா? கெதியா வந்திட்டமே!” என்ற நாதனுக்கு, “ஓம் அங்கிள், இனிக் கொஞ்சம் ஏற்றம், பார்த்து வாங்...
இடையில் ஒருதடவை இறங்கி ஏறினாலும் பதினொரு மணிக்கு முன்னரே லியோன்ஸ் வந்திருந்தார்கள். அங்கே, லியோன்ஸ் சிட்டியில் மீண்டுமொருமுறை வோஷ் ரூம் சென்றுவிட்டு, அடுத்த அரைமணித்தியாலத்தில் ‘பட்டன் ரொக் டாம் ட்ரெ...
ஒன்பதாவது நாள் விடியல், அவர்களின் பயணம் கொலரடோ, லாரிமர் கன்ட்ரியில் அமைந்துள்ள ‘எஸ்டஸ் பார்க்’ நோக்கியதாகவிருந்தது. இதனருகில், மேற்குப் பக்கத்தில், 1915 ம் ஆண்டளவில் பாரிய கண்கவர் பாறை மலைத்தொடர்களுக...
“பின்ன வேற ஆரு? ரெண்டு வருசம் கழிச்சுக் கலியாணம் எண்டு சொன்னவளுக்கு இவ்வளவு அவசரமா நடக்கவும் நீதான் காரணம்!” என்று குற்றம் சாட்டினான் அவன். “ஏன் கோகுல் இப்பிடி எல்லாம் கதைக்கிறீங்கள்? இதெல்லாம்...
